தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
சங்கீதம்
1. {வழிகாட்டிப் பாதுகாக்குமாறு வேண்டல்[BR](தாவீதின் புகழ்ப்பா)} [PS] [QS][SS] ஆண்டவரே, உம்மை நோக்கி,[SE][SS] என் உள்ளத்தை உயர்த்துகின்றேன்.[SE][QE]
2. [QS][SS] என் கடவுளே,[SE][SS] உம்மில் நம்பிக்கை கொள்கின்றேன்;[SE][SS] நான் வெட்கமுற விடாதேயும்;[SE][SS] என் பகைவர் என்னைக் கண்டு[SE][SS] நகைக்க விடாதேயும்.[SE][QE]
3. [QS][SS] உண்மையிலேயே, உம்மை நம்பும் எவரும்[SE][SS] வெட்கமுறுவதில்லை;[SE][SS] காரணமின்றித் துரோகம் செய்பவரோ[SE][SS] வெட்கத்திற்கு உள்ளாவர்.[SE][QE]
4. [QS][SS] ஆண்டவரே, உம் பாதைகளை[SE][SS] நான் அறியச்செய்தருளும்;[SE][SS] உம் வழிகளை எனக்குக் கற்பித்தருளும்.[SE][QE]
5. [QS][SS] உமது உண்மை நெறியில்[SE][SS] என்னை நடத்தி எனக்குக் கற்பித்தருளும்;[SE][SS] ஏனெனில், நீரே என் மீட்பராம் கடவுள்;[SE][SS] உம்மையே நான் நாள் முழுவதும்[SE][SS] நம்பியிருக்கின்றேன்; [* மத் 5:8 ] [SE][QE]
6. [QS][SS] ஆண்டவரே, உமது இரக்கத்தையும்,[SE][SS] உமது பேரன்பையும் நினைந்தருளும்;[SE][SS] ஏனெனில், அவை[SE][SS] தொடக்கமுதல் உள்ளவையே.[SE][QE]
7. [QS][SS] என் இளமைப் பருவத்தின் பாவங்களையும்,[SE][SS] என் குற்றங்களையும் நினையாதேயும்,[SE][SS] உமது பேரன்பிற்கேற்ப[SE][SS] என்னை நினைத்தருளும்;[SE][SS] ஏனெனில், ஆண்டவரே நீரே நல்லவர்.[SE][QE]
8. [QS][SS] ஆண்டவர் நல்லவர்; நேர்மையுள்ளவர்;[SE][SS] ஆகையால், அவர் பாவிகளுக்கு[SE][SS] நல்வழியைக் கற்பிக்கின்றார்.[SE][QE]
9. [QS][SS] எளியோரை நேரிய வழியில்[SE][SS] அவர் நடத்துகின்றார்; எளியோருக்குத்[SE][SS] தமது வழியைக் கற்பிக்கின்றார்.[SE][QE]
10. [QS][SS] ஆண்டவரது உடன்படிக்கையையும்[SE][SS] ஒழுங்குமுறையையும் கடைப்பிடிப்போர்க்கு,[SE][SS] அவருடைய பாதைகளெல்லாம்[SE][SS] பேரன்பும் உண்மையும்[SE][SS] உள்ளனவாய் விளங்கும்.[SE][QE]
11. [QS][SS] ஆண்டவரே, உமது பெயரின் பொருட்டு[SE][SS] என் குற்றத்தை மன்னித்தருளும்;[SE][SS] ஏனெனில், என் குற்றம் மிகப் பெரியது.[SE][QE]
12. [QS][SS] ஆண்டவருக்கு அஞ்சி நடப்பவர் எவரோ[SE][SS] அவருக்குத் தாம் தேர்ந்துகொள்ளும்[SE][SS] வழியை அவர் கற்பிப்பார்.[SE][QE]
13. [QS][SS] அவர் நலமுடன் வாழ்வார்;[SE][SS] அவருடைய மரபினர் [BR] நாட்டைச் சொந்தமாக்கிக்கொள்வர்.[SE][QE]
14. [QS][SS] ஆண்டவரின் அன்புறவு அவருக்கு[SE][SS] அஞ்சி நடப்போருக்கே உரித்தாகும்;[SE][SS] அவர் அவர்களுக்கு தமது[SE][SS] உடன்படிக்கையை வெளிப்படுத்துவார்;[SE][QE]
15. [QS][SS] என் கண்கள் எப்போதும்[SE][SS] ஆண்டவரை நோக்கியிருக்கின்றன;[SE][SS] அவரே என் கால்களை[SE][SS] வலையிலிருந்து விடுவிப்பார்.[SE][QE]
16. [QS][SS] என்னை நோக்கித் திரும்பி[SE][SS] என் மீது இரங்கும்; ஏனெனில்,[SE][SS] நான் துணையற்றவன்; துயருறுபவன்.[SE][QE]
17. [QS][SS] என் வேதனைகள் பெருகிவிட்டன;[SE][SS] என் துன்பத்தினின்று[SE][SS] என்னை விடுவித்தருளும்.[SE][QE]
18. [QS][SS] என் சிறுமையையும்[SE][SS] வருத்தத்தையும் பாரும்;[SE][SS] என் பாவங்கள் அனைத்தையும்[SE][SS] மன்னித்தருளும்.[SE][QE]
19. [QS][SS] என் எதிரிகள் பெருகிவிட்டதைப் பாரும்.[SE][SS] அவர்கள் எத்துணைக் கொடுமையாய் [BR] என்னை வெறுக்கின்றனர்![SE][QE]
20. [QS][SS] என் உயிரைக் காப்பாற்றும்;[SE][SS] என்னை விடுவித்தருளும்;[SE][SS] உம்மிடம் அடைக்கலம் புகுந்துள்ள[SE][SS] என்னை வெட்கமுற விடாதேயும்.[SE][QE]
21. [QS][SS] வாய்மையும் நேர்மையும்[SE][SS] எனக்கு அரணாய் இருக்கட்டும்;[SE][SS] ஏனெனில், நான் உம்மையே[SE][SS] நம்பியிருக்கின்றேன்.[SE][QE]
22. [QS][SS] கடவுளே, இஸ்ரயேலரை[SE][SS] அவர்கள் படும் துன்பங்கள்[SE][SS] அனைத்தினின்றும் மீட்டருளும்.[SE][PE][QE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 25 / 150
சங்கீதம் 25:80
வழிகாட்டிப் பாதுகாக்குமாறு வேண்டல்
(தாவீதின் புகழ்ப்பா)

1 ஆண்டவரே, உம்மை நோக்கி, என் உள்ளத்தை உயர்த்துகின்றேன். 2 என் கடவுளே, உம்மில் நம்பிக்கை கொள்கின்றேன்; நான் வெட்கமுற விடாதேயும்; என் பகைவர் என்னைக் கண்டு நகைக்க விடாதேயும். 3 உண்மையிலேயே, உம்மை நம்பும் எவரும் வெட்கமுறுவதில்லை; காரணமின்றித் துரோகம் செய்பவரோ வெட்கத்திற்கு உள்ளாவர். 4 ஆண்டவரே, உம் பாதைகளை நான் அறியச்செய்தருளும்; உம் வழிகளை எனக்குக் கற்பித்தருளும். 5 உமது உண்மை நெறியில் என்னை நடத்தி எனக்குக் கற்பித்தருளும்; ஏனெனில், நீரே என் மீட்பராம் கடவுள்; உம்மையே நான் நாள் முழுவதும் நம்பியிருக்கின்றேன்; * மத் 5:8 6 ஆண்டவரே, உமது இரக்கத்தையும், உமது பேரன்பையும் நினைந்தருளும்; ஏனெனில், அவை தொடக்கமுதல் உள்ளவையே. 7 என் இளமைப் பருவத்தின் பாவங்களையும், என் குற்றங்களையும் நினையாதேயும், உமது பேரன்பிற்கேற்ப என்னை நினைத்தருளும்; ஏனெனில், ஆண்டவரே நீரே நல்லவர். 8 ஆண்டவர் நல்லவர்; நேர்மையுள்ளவர்; ஆகையால், அவர் பாவிகளுக்கு நல்வழியைக் கற்பிக்கின்றார். 9 எளியோரை நேரிய வழியில் அவர் நடத்துகின்றார்; எளியோருக்குத் தமது வழியைக் கற்பிக்கின்றார். 10 ஆண்டவரது உடன்படிக்கையையும் ஒழுங்குமுறையையும் கடைப்பிடிப்போர்க்கு, அவருடைய பாதைகளெல்லாம் பேரன்பும் உண்மையும் உள்ளனவாய் விளங்கும். 11 ஆண்டவரே, உமது பெயரின் பொருட்டு என் குற்றத்தை மன்னித்தருளும்; ஏனெனில், என் குற்றம் மிகப் பெரியது. 12 ஆண்டவருக்கு அஞ்சி நடப்பவர் எவரோ அவருக்குத் தாம் தேர்ந்துகொள்ளும் வழியை அவர் கற்பிப்பார். 13 அவர் நலமுடன் வாழ்வார்; அவருடைய மரபினர்
நாட்டைச் சொந்தமாக்கிக்கொள்வர்.
14 ஆண்டவரின் அன்புறவு அவருக்கு அஞ்சி நடப்போருக்கே உரித்தாகும்; அவர் அவர்களுக்கு தமது உடன்படிக்கையை வெளிப்படுத்துவார்; 15 என் கண்கள் எப்போதும் ஆண்டவரை நோக்கியிருக்கின்றன; அவரே என் கால்களை வலையிலிருந்து விடுவிப்பார். 16 என்னை நோக்கித் திரும்பி என் மீது இரங்கும்; ஏனெனில், நான் துணையற்றவன்; துயருறுபவன். 17 என் வேதனைகள் பெருகிவிட்டன; என் துன்பத்தினின்று என்னை விடுவித்தருளும். 18 என் சிறுமையையும் வருத்தத்தையும் பாரும்; என் பாவங்கள் அனைத்தையும் மன்னித்தருளும். 19 என் எதிரிகள் பெருகிவிட்டதைப் பாரும். அவர்கள் எத்துணைக் கொடுமையாய்
என்னை வெறுக்கின்றனர்!
20 என் உயிரைக் காப்பாற்றும்; என்னை விடுவித்தருளும்; உம்மிடம் அடைக்கலம் புகுந்துள்ள என்னை வெட்கமுற விடாதேயும். 21 வாய்மையும் நேர்மையும் எனக்கு அரணாய் இருக்கட்டும்; ஏனெனில், நான் உம்மையே நம்பியிருக்கின்றேன். 22 கடவுளே, இஸ்ரயேலரை அவர்கள் படும் துன்பங்கள் அனைத்தினின்றும் மீட்டருளும்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 25 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References