1. {வழிகாட்டிப் பாதுகாக்குமாறு வேண்டல்[BR](தாவீதின் புகழ்ப்பா)} [PS] [QS][SS] ஆண்டவரே, உம்மை நோக்கி,[SE][SS] என் உள்ளத்தை உயர்த்துகின்றேன்.[SE][QE]
2. [QS][SS] என் கடவுளே,[SE][SS] உம்மில் நம்பிக்கை கொள்கின்றேன்;[SE][SS] நான் வெட்கமுற விடாதேயும்;[SE][SS] என் பகைவர் என்னைக் கண்டு[SE][SS] நகைக்க விடாதேயும்.[SE][QE]
3. [QS][SS] உண்மையிலேயே, உம்மை நம்பும் எவரும்[SE][SS] வெட்கமுறுவதில்லை;[SE][SS] காரணமின்றித் துரோகம் செய்பவரோ[SE][SS] வெட்கத்திற்கு உள்ளாவர்.[SE][QE]
4. [QS][SS] ஆண்டவரே, உம் பாதைகளை[SE][SS] நான் அறியச்செய்தருளும்;[SE][SS] உம் வழிகளை எனக்குக் கற்பித்தருளும். [* மத் 5:8. ] [SE][QE]
5. [QS][SS] உமது உண்மை நெறியில்[SE][SS] என்னை நடத்தி எனக்குக் கற்பித்தருளும்;[SE][SS] ஏனெனில், நீரே என் மீட்பராம் கடவுள்;[SE][SS] உம்மையே நான் நாள் முழுவதும்[SE][SS] நம்பியிருக்கின்றேன்;[SE][QE]
6. [QS][SS] ஆண்டவரே, உமது இரக்கத்தையும்,[SE][SS] உமது பேரன்பையும் நினைந்தருளும்;[SE][SS] ஏனெனில், அவை[SE][SS] தொடக்கமுதல் உள்ளவையே. [* *…* ‘யாக்கோபே! உனது முகத்தை’ என்பது எபிரேய பாடம்.[QE]. ] [SE][QE]
7. [QS][SS] என் இளமைப் பருவத்தின் பாவங்களையும்,[SE][SS] என் குற்றங்களையும் நினையாதேயும்,[SE][SS] உமது பேரன்பிற்கேற்ப[SE][SS] என்னை நினைத்தருளும்;[SE][SS] ஏனெனில், ஆண்டவரே நீரே நல்லவர்.[SE][QE]
8. [QS][SS] ஆண்டவர் நல்லவர்; நேர்மையுள்ளவர்;[SE][SS] ஆகையால், அவர் பாவிகளுக்கு[SE][SS] நல்வழியைக் கற்பிக்கின்றார்.[SE][QE]
9. [QS][SS] எளியோரை நேரிய வழியில்[SE][SS] அவர் நடத்துகின்றார்; எளியோருக்குத்[SE][SS] தமது வழியைக் கற்பிக்கின்றார்.[SE][QE]
10. [QS][SS] ஆண்டவரது உடன்படிக்கையையும்[SE][SS] ஒழுங்குமுறையையும் கடைப்பிடிப்போர்க்கு,[SE][SS] அவருடைய பாதைகளெல்லாம்[SE][SS] பேரன்பும் உண்மையும்[SE][SS] உள்ளனவாய் விளங்கும்.[SE][QE]
11. [QS][SS] ஆண்டவரே, உமது பெயரின் பொருட்டு[SE][SS] என் குற்றத்தை மன்னித்தருளும்;[SE][SS] ஏனெனில், என் குற்றம் மிகப் பெரியது.[SE][QE]
12. [QS][SS] ஆண்டவருக்கு அஞ்சி நடப்பவர் எவரோ[SE][SS] அவருக்குத் தாம் தேர்ந்துகொள்ளும்[SE][SS] வழியை அவர் கற்பிப்பார்.[SE][QE]
13. [QS][SS] அவர் நலமுடன் வாழ்வார்;[SE][SS] அவருடைய மரபினர் [BR] நாட்டைச் சொந்தமாக்கிக்கொள்வர்.[SE][QE]
14. [QS][SS] ஆண்டவரின் அன்புறவு அவருக்கு[SE][SS] அஞ்சி நடப்போருக்கே உரித்தாகும்;[SE][SS] அவர் அவர்களுக்கு தமது[SE][SS] உடன்படிக்கையை வெளிப்படுத்துவார்;[SE][QE]
15. [QS][SS] என் கண்கள் எப்போதும்[SE][SS] ஆண்டவரை நோக்கியிருக்கின்றன;[SE][SS] அவரே என் கால்களை[SE][SS] வலையிலிருந்து விடுவிப்பார்.[SE][QE]
16. [QS][SS] என்னை நோக்கித் திரும்பி[SE][SS] என் மீது இரங்கும்; ஏனெனில்,[SE][SS] நான் துணையற்றவன்; துயருறுபவன்.[SE][QE]
17. [QS][SS] என் வேதனைகள் பெருகிவிட்டன;[SE][SS] என் துன்பத்தினின்று[SE][SS] என்னை விடுவித்தருளும்.[SE][QE]
18. [QS][SS] என் சிறுமையையும்[SE][SS] வருத்தத்தையும் பாரும்;[SE][SS] என் பாவங்கள் அனைத்தையும்[SE][SS] மன்னித்தருளும்.[SE][QE]
19. [QS][SS] என் எதிரிகள் பெருகிவிட்டதைப் பாரும்.[SE][SS] அவர்கள் எத்துணைக் கொடுமையாய் [BR] என்னை வெறுக்கின்றனர்![SE][QE]
20. [QS][SS] என் உயிரைக் காப்பாற்றும்;[SE][SS] என்னை விடுவித்தருளும்;[SE][SS] உம்மிடம் அடைக்கலம் புகுந்துள்ள[SE][SS] என்னை வெட்கமுற விடாதேயும்.[SE][QE]
21. [QS][SS] வாய்மையும் நேர்மையும்[SE][SS] எனக்கு அரணாய் இருக்கட்டும்;[SE][SS] ஏனெனில், நான் உம்மையே[SE][SS] நம்பியிருக்கின்றேன்.[SE][QE]
22. [QS][SS] கடவுளே, இஸ்ரயேலரை[SE][SS] அவர்கள் படும் துன்பங்கள்[SE][SS] அனைத்தினின்றும் மீட்டருளும்.[SE][PE][QE]