தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
சங்கீதம்
1. {மாவேந்தரின் வருகை[BR](தாவீதின் புகழ்ப்பா)} [PS] [QS][SS] மண்ணுலகும் அதில் நிறைந்துள்ள[SE][SS] அனைத்தும் ஆண்டவருடையவை;[SE][SS] நிலவுலகும் அதில் வாழ்வனவும்[SE][SS] அவருக்கே சொந்தம்.[SE][QE]
2. [QS][SS] ஏனெனில், அவரே கடல்கள்மீது[SE][SS] அதற்கு அடித்தளமிட்டார்;[SE][SS] ஆறுகள்மீது அதை[SE][SS] நிலைநாட்டினவரும் அவரே.[SE][QE]
3. [QS][SS] ஆண்டவரது மலையில் ஏறத்[SE][SS] தகுதியுள்ளவர் யார்?[SE][SS] அவரது திருத்தலத்தில் நிற்கக் கூடியவர் யார்?[SE][QE]
4. [QS][SS] கறைபடாத கைகளும்[SE][SS] மாசற்ற மனமும் உடையவர்;[SE][SS] பொய்த் தெய்வங்களை நோக்கித்[SE][SS] தம் உள்ளத்தை உயர்த்தாதவர்;[SE][SS] வஞ்சக நெஞ்சோடு[SE][SS] ஆணையிட்டுக் கூறாதவர்,[SE][QE]
5. [QS][SS] இவரே ஆண்டவரிடம் ஆசி பெறுவார்;[SE][SS] தம் மீட்பராம் கடவுளிடமிருந்து[SE][SS] நேர்மையாளர் எனத் தீர்ப்புப் பெறுவார். [* மத் 5:8 ] [SE][QE]
6. [QS][SS] அவரை நாடுவோரின்[SE][SS] தலைமுறையினர் இவர்களே:[SE][SS] *யாக்கோபின் கடவுளது முகத்தைத்*[SE][SS] தேடுவோர் இவர்களே. (சேலா)[SE][QE]
7. [QS][SS] வாயில்களே, உங்கள் நிலைகளை[SE][SS] உயர்த்துங்கள்;[SE][SS] தொன்மைமிகு கதவுகளே,[SE][SS] உயர்ந்து நில்லுங்கள்;[SE][SS] மாட்சிமிகு மன்னர் உள்ளே நுழையட்டும்.[SE][QE]
8. [QS][SS] மாட்சிமிகு மன்னர் இவர் யாரோ?[SE][SS] வலிமையும் ஆற்றலும் கொண்ட[SE][SS] ஆண்டவர் இவர்; இவரே[SE][SS] போரில் வல்லவரான ஆண்டவர்.[SE][QE]
9. [QS][SS] வாயில்களே,[SE][SS] உங்கள் நிலைகளை உயர்த்துங்கள்;[SE][SS] தொன்மைமிகு கதவுகளே,[SE][SS] உயர்ந்து நில்லுங்கள்;[SE][SS] மாட்சிமிகு மன்னர் உள்ளே நுழையட்டும்.[SE][QE]
10. [QS][SS] மாட்சிமிகு மன்னர் இவர் யாரோ?[SE][SS] படைகளின் ஆண்டவர் இவர்;[SE][SS] இவரே மாட்சிமிகு மன்னர். (சேலா)[SE][PE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 24 / 150
சங்கீதம் 24:160
மாவேந்தரின் வருகை
(தாவீதின் புகழ்ப்பா)

1 மண்ணுலகும் அதில் நிறைந்துள்ள அனைத்தும் ஆண்டவருடையவை; நிலவுலகும் அதில் வாழ்வனவும் அவருக்கே சொந்தம். 2 ஏனெனில், அவரே கடல்கள்மீது அதற்கு அடித்தளமிட்டார்; ஆறுகள்மீது அதை நிலைநாட்டினவரும் அவரே. 3 ஆண்டவரது மலையில் ஏறத் தகுதியுள்ளவர் யார்? அவரது திருத்தலத்தில் நிற்கக் கூடியவர் யார்? 4 கறைபடாத கைகளும் மாசற்ற மனமும் உடையவர்; பொய்த் தெய்வங்களை நோக்கித் தம் உள்ளத்தை உயர்த்தாதவர்; வஞ்சக நெஞ்சோடு ஆணையிட்டுக் கூறாதவர், 5 இவரே ஆண்டவரிடம் ஆசி பெறுவார்; தம் மீட்பராம் கடவுளிடமிருந்து நேர்மையாளர் எனத் தீர்ப்புப் பெறுவார். * மத் 5:8 6 அவரை நாடுவோரின் தலைமுறையினர் இவர்களே: *யாக்கோபின் கடவுளது முகத்தைத்* தேடுவோர் இவர்களே. (சேலா) 7 வாயில்களே, உங்கள் நிலைகளை உயர்த்துங்கள்; தொன்மைமிகு கதவுகளே, உயர்ந்து நில்லுங்கள்; மாட்சிமிகு மன்னர் உள்ளே நுழையட்டும். 8 மாட்சிமிகு மன்னர் இவர் யாரோ? வலிமையும் ஆற்றலும் கொண்ட ஆண்டவர் இவர்; இவரே போரில் வல்லவரான ஆண்டவர். 9 வாயில்களே, உங்கள் நிலைகளை உயர்த்துங்கள்; தொன்மைமிகு கதவுகளே, உயர்ந்து நில்லுங்கள்; மாட்சிமிகு மன்னர் உள்ளே நுழையட்டும். 10 மாட்சிமிகு மன்னர் இவர் யாரோ? படைகளின் ஆண்டவர் இவர்; இவரே மாட்சிமிகு மன்னர். (சேலா)
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 24 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References