தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
சங்கீதம்
1. {ஆண்டவரே நம் ஆயர்[BR](தாவீதின் புகழ்ப்பா)} [PS] [QS][SS] ஆண்டவரே என் ஆயர்;[SE][SS] எனக்கேதும் குறையில்லை.[SE][QE]
2. [QS][SS] பசும்புல் வெளிமீது எனை அவர்[SE][SS] இளைப்பாறச் செய்வார்;[SE][SS] அமைதியான நீர்நிலைகளுக்கு[SE][SS] எனை அழைத்துச் செல்வார்.[SE][QE]
3. [QS][SS] அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார்;[SE][SS] தம் பெயர்க்கேற்ப[SE][SS] எனை நீதிவழி நடத்திடுவார்; [* திவெ 7:17; 24:1; 1 கொரி 10:26.[QE] ] [SE][QE]
4. [QS][SS] மேலும், சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில்[SE][SS] நான் நடக்க நேர்ந்தாலும்,[SE][SS] நீர் என்னோடு இருப்பதால்[SE][SS] எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்;[SE][SS] உம் கோலும் நெடுங்கழியும்[SE][SS] என்னைத் தேற்றும்.[SE][QE]
5. [QS][SS] என்னுடைய எதிரிகளின் கண் முன்னே[SE][SS] எனக்கொரு விருந்தினை[SE][SS] ஏற்பாடு செய்கின்றீர்;[SE][SS] என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்;[SE][SS] எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது.[SE][QE]
6. [QS][SS] உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம்[SE][SS] உம் அருள் நலமும் பேரன்பும்[SE][SS] என்னைப் புடைசூழ்ந்து வரும்;[SE][SS] நானும் ஆண்டவரின் இல்லத்தில் [BR] நெடுநாள் வாழ்ந்திருப்பேன்.[SE][PE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 23 / 150
சங்கீதம் 23:51
ஆண்டவரே நம் ஆயர்
(தாவீதின் புகழ்ப்பா)

1 ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை. 2 பசும்புல் வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்; அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார். 3 அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார்; தம் பெயர்க்கேற்ப எனை நீதிவழி நடத்திடுவார்; [* திவெ 7:17; 24:1; 1 கொரி 10:26. ] 4 மேலும், சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்; உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும். 5 என்னுடைய எதிரிகளின் கண் முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்; என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்; எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது. 6 உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் என்னைப் புடைசூழ்ந்து வரும்; நானும் ஆண்டவரின் இல்லத்தில்
நெடுநாள் வாழ்ந்திருப்பேன்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 23 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References