1. {துயர்மிகு புலம்பல்[BR](பாடகர் தலைவர்க்கு: ‘காலைப் பெண்மான்’ என்ற மெட்டு; தாவீதின் புகழ்ப்பா)} [PS] [QS][SS] என் இறைவா, என் இறைவா,[SE][SS] ஏன் என்னைக் கைவிட்டீர்?[SE][SS] என்னைக் காப்பாற்றாமலும்,[SE][SS] நான் தேம்பிச் சொல்வதைக் கேளாமலும்[SE][SS] ஏன் வெகு தொலையில் இருக்கின்றீர்?[SE][QE]
2. [QS][SS] என் கடவுளே,[SE][SS] நான் பகலில் மன்றாடுகின்றேன்;[SE][SS] நீர் பதில் அளிப்பதில்லை,[SE][SS] இரவிலும் மன்றாடுகின்றேன்;[SE][SS] எனக்கு அமைதி கிடைப்பதில்லை. [* மத் 27:46; மாற் 15:34 ] [SE][QE]
3. [QS][SS] நீரோ தூயவராய் விளங்குகின்றீர்;[SE][SS] இஸ்ரயேலின் புகழ்ச்சிக்கு உரியவராய்[SE][SS] வீற்றிருக்கின்றீர்;[SE][QE]
4. [QS][SS] எங்கள் மூதாதையர்[SE][SS] உம்மில் நம்பிக்கை வைத்தனர்;[SE][SS] அவர்கள் நம்பியதால்[SE][SS] நீர் அவர்களை விடுவித்தீர்.[SE][QE]
5. [QS][SS] உம்மை அவர்கள் வேண்டினார்கள்;[SE][SS] விடுவிக்கப்பட்டார்கள்;[SE][SS] உம்மை அவர்கள் நம்பினார்கள்;[SE][SS] ஏமாற்றமடையவில்லை.[SE][QE]
6. [QS][SS] நானோ ஒரு புழு, மனிதனில்லை;[SE][SS] மானிடரின் நிந்தைக்கு ஆளானேன்;[SE][SS] மக்களின் இகழ்ச்சிக்கு உள்ளானேன்.[SE][QE]
7. [QS][SS] என்னைப் பார்ப்போர் எல்லாரும்[SE][SS] ஏளனம் செய்கின்றனர்;[SE][SS] உதட்டைப் பிதுக்கித் தலையசைத்து,[SE][QE]
8. [QS][SS] ‛ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்தானே![SE][SS] அவர் இவனை மீட்கட்டும்;[SE][SS] தாம் அன்பு கூர்ந்த அவனை[SE][SS] அவர் விடுவிக்கட்டும்’ என்கின்றனர்.[SE][QE]
9. [QS][SS] என்னைக் கருப்பையினின்று[SE][SS] வெளிக்கொணர்ந்தவர் நீரே;[SE][SS] என் தாயிடம் பால்குடிக்கையிலேயே[SE][SS] என்னைப் பாதுகாத்தவரும் நீரே![SE][QE]
10. [QS][SS] கருப்பையிலிருந்தே[SE][SS] உம்மைச் சார்ந்திருந்தேன்;[SE][SS] நான் என் தாயின் வயிற்றில் இருந்தது முதல்[SE][SS] என் இறைவன் நீரே![SE][QE]
11. [QS][SS] என்னைவிட்டுத் தொலையில் போய்விடாதேயும்;[SE][SS] ஏனெனில், ஆபத்து நெருங்கிவிட்டது;[SE][SS] மேலும், உதவி செய்வார் யாருமில்லை.[SE][QE]
12. [QS][SS] காளைகள் பல என்னைச்[SE][SS] சூழ்ந்து கொண்டுள்ளன;[SE][SS] பாசானின் கொழுத்த எருதுகள்[SE][SS] என்னை வளைத்துக் கொண்டன.[SE][QE]
13. [QS][SS] அவர்கள் என்னை விழுங்கத்[SE][SS] தங்கள் வாயை அகலத் திறக்கின்றார்கள்;[SE][SS] இரைதேடிச் சீறி முழங்கும்[SE][SS] சிங்கம்போல் பாய்கின்றார்கள்.[SE][QE]
14. [QS][SS] நான் கொட்டப்பட்ட நீர்போல் ஆனேன்;[SE][SS] என் எலும்புகள் எல்லாம் கழன்று போயின;[SE][SS] என் இதயம் மெழுகுபோல் ஆயிற்று;[SE][SS] என் உள்ளுறுப்புகளின் நடுவே[SE][SS] உருகிப்போயிற்று.[SE][QE]
15. [QS][SS] என் வலிமை ஓடுபோலக் காய்ந்தது;[SE][SS] என் நாவு மேலண்ணத்தோடு[SE][SS] ஒட்டிக்கொண்டது; என்னைச்[SE][SS] சாவின் புழுதியிலே போட்டுவிட்டீர்.[SE][QE]
16. [QS][SS] தீமை செய்வோரின் கூட்டம்[SE][SS] என்னை வளைத்துக் கொண்டது;[SE][SS] நாய்கள் என அவர்கள் என்னைச்[SE][SS] சூழ்ந்து கொண்டார்கள்; என் கைகளையும்,[SE][SS] கால்களையும் துளைத்தார்கள்.[SE][QE]
17. [QS][SS] என் எலும்புகளை எல்லாம்[SE][SS] நான் எண்ணிவிடலாம்; அவர்கள்[SE][SS] என்னை முறைத்துப் பார்க்கின்றார்கள்.[SE][QE]
18. [QS][SS] என் ஆடைகளைத் தங்களிடையே[SE][SS] பங்கிட்டுக் கொள்கின்றனர்;[SE][SS] என் உடையின்மேல் சீட்டுப் போடுகின்றனர்.[SE][QE]
19. [QS][SS] நீரோ ஆண்டவரே! என்னை விட்டுத்[SE][SS] தொலைவில் போய்விடாதேயும்;[SE][SS] என் வலிமையே! எனக்குத் துணை செய்ய[SE][SS] விரைந்து வாரும். [* மத் 27:35; மாற் 15:24; லூக் 23;34; யோவா 19:24 ] [SE][QE]
20. [QS][SS] வாளுக்கு இரையாகாதபடி[SE][SS] என் உயிரைக் காத்தருளும்;[SE][SS] இந்த நாய்களின் வெறியினின்று[SE][SS] என் ஆருயிரைக் காப்பாற்றும்;[SE][QE]
21. [QS][SS] இந்தச் சிங்கங்களின் வாயிலிருந்து[SE][SS] என்னைக் காப்பாற்றும்;[SE][SS] காட்டெருமைகளின் கொம்புகளில்[SE][SS] சிக்கியுள்ள என்னைக் காத்தருளும்.[SE][PE][QE]
22. {புகழ்ச்சிப் பாடல்} [PS] [QS][SS] உமது பெயரை[SE][SS] என் சகோதரருக்கு அறிவிப்பேன்;[SE][SS] சபை நடுவே உம்மைப் புகழ்ந்து பாடுவேன்.[SE][QE]
23. [QS][SS] ஆண்டவருக்கு அஞ்சுவோரே;[SE][SS] அவரைப் புகழுங்கள்;[SE][SS] யாக்கோபின் மரபினரே,[SE][SS] அனைவரும் அவரை[SE][SS] மாட்சிமைப்படுத்துங்கள்;[SE][SS] இஸ்ரயேல் மரபினரே,[SE][SS] அனைவரும் அவரைப் பணியுங்கள். [* எபி 2:12 ] [SE][QE]
24. [QS][SS] ஏனெனில், எளியோரின் சிறுமையை[SE][SS] அவர் அற்பமாக எண்ணவில்லை;[SE][SS] அதைக் கவனியாமல் இருந்துவிடவில்லை;[SE][SS] தமது முகத்தை அவர்களுக்கு[SE][SS] மறைக்கவுமில்லை; [BR] தம்மை நோக்கி அவர்கள் மன்றாடுகையில்[SE][SS] அவர்களுக்குச் செவிசாய்த்தார்.[SE][QE]
25. [QS][SS] மாபெரும் சபையில் நான் செலுத்தும் புகழ்[SE][SS] உம்மிடமிருந்து எழுவதாக![SE][SS] உமக்கு அஞ்சுவோர் முன்னிலையில்[SE][SS] என் பொருத்தனைகளைச் செலுத்துவேன்.[SE][QE]
26. [QS][SS] எளியோர் உணவு உண்டு நிறைவு பெறுவர்;[SE][SS] ஆண்டவரை நாடுவோர்[SE][SS] அவரைப் புகழ்வராக![SE][SS] அவர்கள் இதயம் என்றென்றும் வாழ்வதாக![SE][QE]
27. [QS][SS] பூவுலகின் கடையெல்லைவரை உள்ளோர்[SE][SS] அனைவரும் இதை உணர்ந்து[SE][SS] ஆண்டவர் பக்கம் திரும்புவர்;[SE][SS] பிற இனத்துக் குடும்பத்தார் அனைவரும்[SE][SS] அவர் முன்னிலையில் விழுந்து பணிவர்.[SE][QE]
28. [QS][SS] ஏனெனில் அரசு ஆண்டவருடையது;[SE][SS] பிற இனத்தார்மீதும்[SE][SS] அவர் ஆட்சி புரிகின்றார்.[SE][QE]
29. [QS][SS] மண்ணின் செல்வர் யாவரும்[SE][SS] அவரைப் பணிவர்;*[SE][SS] புழுதிக்குள் இறங்குவோர் யாவரும்[SE][SS] தம் உயிரைக் காத்துக்கொள்ளாதோரும்[SE][SS] அவரை வணங்குவர்.[SE][QE]
30. [QS][SS] வருங்காலத் தலைமுறையினர்[SE][SS] அவரைத் தொழுவர்;[SE][SS] இனிவரும் தலைமுறையினருக்கு[SE][SS] ஆண்டவரைப்பற்றி அறிவிக்கப்படும்.[SE][QE]
31. [QS][SS] அவர்கள் வந்து, அவரது நீதியை அறிவிப்பர்;[SE][SS] இனி பிறக்கப்போகும் மக்களுக்கு[SE][SS] ‛இதை அவரே செய்தார்’ என்பர்.[SE][PE]