தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
சங்கீதம்
1. {துயர்மிகு புலம்பல்[BR](பாடகர் தலைவர்க்கு: ‘காலைப் பெண்மான்’ என்ற மெட்டு; தாவீதின் புகழ்ப்பா)} [PS] [QS][SS] என் இறைவா, என் இறைவா,[SE][SS] ஏன் என்னைக் கைவிட்டீர்?[SE][SS] என்னைக் காப்பாற்றாமலும்,[SE][SS] நான் தேம்பிச் சொல்வதைக் கேளாமலும்[SE][SS] ஏன் வெகு தொலையில் இருக்கின்றீர்? [* மத் 27:46; மாற் 15:34. ] [SE][QE]
2. [QS][SS] என் கடவுளே,[SE][SS] நான் பகலில் மன்றாடுகின்றேன்;[SE][SS] நீர் பதில் அளிப்பதில்லை,[SE][SS] இரவிலும் மன்றாடுகின்றேன்;[SE][SS] எனக்கு அமைதி கிடைப்பதில்லை.[SE][QE]
3. [QS][SS] நீரோ தூயவராய் விளங்குகின்றீர்;[SE][SS] இஸ்ரயேலின் புகழ்ச்சிக்கு உரியவராய்[SE][SS] வீற்றிருக்கின்றீர்;[SE][QE]
4. [QS][SS] எங்கள் மூதாதையர்[SE][SS] உம்மில் நம்பிக்கை வைத்தனர்;[SE][SS] அவர்கள் நம்பியதால்[SE][SS] நீர் அவர்களை விடுவித்தீர்.[SE][QE]
5. [QS][SS] உம்மை அவர்கள் வேண்டினார்கள்;[SE][SS] விடுவிக்கப்பட்டார்கள்;[SE][SS] உம்மை அவர்கள் நம்பினார்கள்;[SE][SS] ஏமாற்றமடையவில்லை.[SE][QE]
6. [QS][SS] நானோ ஒரு புழு, மனிதனில்லை;[SE][SS] மானிடரின் நிந்தைக்கு ஆளானேன்;[SE][SS] மக்களின் இகழ்ச்சிக்கு உள்ளானேன்.[SE][QE]
7. [QS][SS] என்னைப் பார்ப்போர் எல்லாரும்[SE][SS] ஏளனம் செய்கின்றனர்;[SE][SS] உதட்டைப் பிதுக்கித் தலையசைத்து,[SE][QE]
8. [QS][SS] ‛ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்தானே![SE][SS] அவர் இவனை மீட்கட்டும்;[SE][SS] தாம் அன்பு கூர்ந்த அவனை[SE][SS] அவர் விடுவிக்கட்டும்’ என்கின்றனர்.[SE][QE]
9. [QS][SS] என்னைக் கருப்பையினின்று[SE][SS] வெளிக்கொணர்ந்தவர் நீரே;[SE][SS] என் தாயிடம் பால்குடிக்கையிலேயே[SE][SS] என்னைப் பாதுகாத்தவரும் நீரே![SE][QE]
10. [QS][SS] கருப்பையிலிருந்தே[SE][SS] உம்மைச் சார்ந்திருந்தேன்;[SE][SS] நான் என் தாயின் வயிற்றில் இருந்தது முதல்[SE][SS] என் இறைவன் நீரே![SE][QE]
11. [QS][SS] என்னைவிட்டுத் தொலையில் போய்விடாதேயும்;[SE][SS] ஏனெனில், ஆபத்து நெருங்கிவிட்டது;[SE][SS] மேலும், உதவி செய்வார் யாருமில்லை.[SE][QE]
12. [QS][SS] காளைகள் பல என்னைச்[SE][SS] சூழ்ந்து கொண்டுள்ளன;[SE][SS] பாசானின் கொழுத்த எருதுகள்[SE][SS] என்னை வளைத்துக் கொண்டன.[SE][QE]
13. [QS][SS] அவர்கள் என்னை விழுங்கத்[SE][SS] தங்கள் வாயை அகலத் திறக்கின்றார்கள்;[SE][SS] இரைதேடிச் சீறி முழங்கும்[SE][SS] சிங்கம்போல் பாய்கின்றார்கள்.[SE][QE]
14. [QS][SS] நான் கொட்டப்பட்ட நீர்போல் ஆனேன்;[SE][SS] என் எலும்புகள் எல்லாம் கழன்று போயின;[SE][SS] என் இதயம் மெழுகுபோல் ஆயிற்று;[SE][SS] என் உள்ளுறுப்புகளின் நடுவே[SE][SS] உருகிப்போயிற்று.[SE][QE]
15. [QS][SS] என் வலிமை ஓடுபோலக் காய்ந்தது;[SE][SS] என் நாவு மேலண்ணத்தோடு[SE][SS] ஒட்டிக்கொண்டது; என்னைச்[SE][SS] சாவின் புழுதியிலே போட்டுவிட்டீர்.[SE][QE]
16. [QS][SS] தீமை செய்வோரின் கூட்டம்[SE][SS] என்னை வளைத்துக் கொண்டது;[SE][SS] நாய்கள் என அவர்கள் என்னைச்[SE][SS] சூழ்ந்து கொண்டார்கள்; என் கைகளையும்,[SE][SS] கால்களையும் துளைத்தார்கள்.[SE][QE]
17. [QS][SS] என் எலும்புகளை எல்லாம்[SE][SS] நான் எண்ணிவிடலாம்; அவர்கள்[SE][SS] என்னை முறைத்துப் பார்க்கின்றார்கள்.[SE][QE]
18. [QS][SS] என் ஆடைகளைத் தங்களிடையே[SE][SS] பங்கிட்டுக் கொள்கின்றனர்;[SE][SS] என் உடையின்மேல் சீட்டுப் போடுகின்றனர். [* மத் 27:35; மாற் 15:24; லூக் 23;34; யோவா 19:24. ] [SE][QE]
19. [QS][SS] நீரோ ஆண்டவரே! என்னை விட்டுத்[SE][SS] தொலைவில் போய்விடாதேயும்;[SE][SS] என் வலிமையே! எனக்குத் துணை செய்ய[SE][SS] விரைந்து வாரும்.[SE][QE]
20. [QS][SS] வாளுக்கு இரையாகாதபடி[SE][SS] என் உயிரைக் காத்தருளும்;[SE][SS] இந்த நாய்களின் வெறியினின்று[SE][SS] என் ஆருயிரைக் காப்பாற்றும்;[SE][QE]
21. [QS][SS] இந்தச் சிங்கங்களின் வாயிலிருந்து[SE][SS] என்னைக் காப்பாற்றும்;[SE][SS] காட்டெருமைகளின் கொம்புகளில்[SE][SS] சிக்கியுள்ள என்னைக் காத்தருளும்.[SE][PE][QE]
22. {புகழ்ச்சிப் பாடல்} [PS] [QS][SS] உமது பெயரை[SE][SS] என் சகோதரருக்கு அறிவிப்பேன்;[SE][SS] சபை நடுவே உம்மைப் புகழ்ந்து பாடுவேன். [* எபி 2:12. ] [SE][QE]
23. [QS][SS] ஆண்டவருக்கு அஞ்சுவோரே;[SE][SS] அவரைப் புகழுங்கள்;[SE][SS] யாக்கோபின் மரபினரே,[SE][SS] அனைவரும் அவரை[SE][SS] மாட்சிமைப்படுத்துங்கள்;[SE][SS] இஸ்ரயேல் மரபினரே,[SE][SS] அனைவரும் அவரைப் பணியுங்கள்.[SE][QE]
24. [QS][SS] ஏனெனில், எளியோரின் சிறுமையை[SE][SS] அவர் அற்பமாக எண்ணவில்லை;[SE][SS] அதைக் கவனியாமல் இருந்துவிடவில்லை;[SE][SS] தமது முகத்தை அவர்களுக்கு[SE][SS] மறைக்கவுமில்லை; [BR] தம்மை நோக்கி அவர்கள் மன்றாடுகையில்[SE][SS] அவர்களுக்குச் செவிசாய்த்தார்.[SE][QE]
25. [QS][SS] மாபெரும் சபையில் நான் செலுத்தும் புகழ்[SE][SS] உம்மிடமிருந்து எழுவதாக![SE][SS] உமக்கு அஞ்சுவோர் முன்னிலையில்[SE][SS] என் பொருத்தனைகளைச் செலுத்துவேன்.[SE][QE]
26. [QS][SS] எளியோர் உணவு உண்டு நிறைவு பெறுவர்;[SE][SS] ஆண்டவரை நாடுவோர்[SE][SS] அவரைப் புகழ்வராக![SE][SS] அவர்கள் இதயம் என்றென்றும் வாழ்வதாக![SE][QE]
27. [QS][SS] பூவுலகின் கடையெல்லைவரை உள்ளோர்[SE][SS] அனைவரும் இதை உணர்ந்து[SE][SS] ஆண்டவர் பக்கம் திரும்புவர்;[SE][SS] பிற இனத்துக் குடும்பத்தார் அனைவரும்[SE][SS] அவர் முன்னிலையில் விழுந்து பணிவர்.[SE][QE]
28. [QS][SS] ஏனெனில் அரசு ஆண்டவருடையது;[SE][SS] பிற இனத்தார்மீதும்[SE][SS] அவர் ஆட்சி புரிகின்றார்.[SE][QE]
29. [QS][SS] மண்ணின் செல்வர் யாவரும்[SE][SS] அவரைப் பணிவர்;*[SE][SS] புழுதிக்குள் இறங்குவோர் யாவரும்[SE][SS] தம் உயிரைக் காத்துக்கொள்ளாதோரும்[SE][SS] அவரை வணங்குவர். [* * ‘உணவுண்டு அவரைப் பணிவர்’ என்பது எபிரேய பாடம்.[QE]. ] [SE][QE]
30. [QS][SS] வருங்காலத் தலைமுறையினர்[SE][SS] அவரைத் தொழுவர்;[SE][SS] இனிவரும் தலைமுறையினருக்கு[SE][SS] ஆண்டவரைப்பற்றி அறிவிக்கப்படும்.[SE][QE]
31. [QS][SS] அவர்கள் வந்து, அவரது நீதியை அறிவிப்பர்;[SE][SS] இனி பிறக்கப்போகும் மக்களுக்கு[SE][SS] ‛இதை அவரே செய்தார்’ என்பர்.[SE][PE]
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 22 / 150
துயர்மிகு புலம்பல்
(பாடகர் தலைவர்க்கு: ‘காலைப் பெண்மான்’ என்ற மெட்டு; தாவீதின் புகழ்ப்பா)

1 என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்? என்னைக் காப்பாற்றாமலும், நான் தேம்பிச் சொல்வதைக் கேளாமலும் ஏன் வெகு தொலையில் இருக்கின்றீர்? * மத் 27:46; மாற் 15: 34. 2 என் கடவுளே, நான் பகலில் மன்றாடுகின்றேன்; நீர் பதில் அளிப்பதில்லை, இரவிலும் மன்றாடுகின்றேன்; எனக்கு அமைதி கிடைப்பதில்லை. 3 நீரோ தூயவராய் விளங்குகின்றீர்; இஸ்ரயேலின் புகழ்ச்சிக்கு உரியவராய் வீற்றிருக்கின்றீர்; 4 எங்கள் மூதாதையர் உம்மில் நம்பிக்கை வைத்தனர்; அவர்கள் நம்பியதால் நீர் அவர்களை விடுவித்தீர். 5 உம்மை அவர்கள் வேண்டினார்கள்; விடுவிக்கப்பட்டார்கள்; உம்மை அவர்கள் நம்பினார்கள்; ஏமாற்றமடையவில்லை. 6 நானோ ஒரு புழு, மனிதனில்லை; மானிடரின் நிந்தைக்கு ஆளானேன்; மக்களின் இகழ்ச்சிக்கு உள்ளானேன். 7 என்னைப் பார்ப்போர் எல்லாரும் ஏளனம் செய்கின்றனர்; உதட்டைப் பிதுக்கித் தலையசைத்து, 8 ‛ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்தானே! அவர் இவனை மீட்கட்டும்; தாம் அன்பு கூர்ந்த அவனை அவர் விடுவிக்கட்டும்’ என்கின்றனர். 9 என்னைக் கருப்பையினின்று வெளிக்கொணர்ந்தவர் நீரே; என் தாயிடம் பால்குடிக்கையிலேயே என்னைப் பாதுகாத்தவரும் நீரே! 10 கருப்பையிலிருந்தே உம்மைச் சார்ந்திருந்தேன்; நான் என் தாயின் வயிற்றில் இருந்தது முதல் என் இறைவன் நீரே! 11 என்னைவிட்டுத் தொலையில் போய்விடாதேயும்; ஏனெனில், ஆபத்து நெருங்கிவிட்டது; மேலும், உதவி செய்வார் யாருமில்லை. 12 காளைகள் பல என்னைச் சூழ்ந்து கொண்டுள்ளன; பாசானின் கொழுத்த எருதுகள் என்னை வளைத்துக் கொண்டன. 13 அவர்கள் என்னை விழுங்கத் தங்கள் வாயை அகலத் திறக்கின்றார்கள்; இரைதேடிச் சீறி முழங்கும் சிங்கம்போல் பாய்கின்றார்கள். 14 நான் கொட்டப்பட்ட நீர்போல் ஆனேன்; என் எலும்புகள் எல்லாம் கழன்று போயின; என் இதயம் மெழுகுபோல் ஆயிற்று; என் உள்ளுறுப்புகளின் நடுவே உருகிப்போயிற்று. 15 என் வலிமை ஓடுபோலக் காய்ந்தது; என் நாவு மேலண்ணத்தோடு ஒட்டிக்கொண்டது; என்னைச் சாவின் புழுதியிலே போட்டுவிட்டீர். 16 தீமை செய்வோரின் கூட்டம் என்னை வளைத்துக் கொண்டது; நாய்கள் என அவர்கள் என்னைச் சூழ்ந்து கொண்டார்கள்; என் கைகளையும், கால்களையும் துளைத்தார்கள். 17 என் எலும்புகளை எல்லாம் நான் எண்ணிவிடலாம்; அவர்கள் என்னை முறைத்துப் பார்க்கின்றார்கள். 18 என் ஆடைகளைத் தங்களிடையே பங்கிட்டுக் கொள்கின்றனர்; என் உடையின்மேல் சீட்டுப் போடுகின்றனர். * மத் 27:35; மாற் 15:24; லூக் 23;34; யோவா 19: 24. 19 நீரோ ஆண்டவரே! என்னை விட்டுத் தொலைவில் போய்விடாதேயும்; என் வலிமையே! எனக்குத் துணை செய்ய விரைந்து வாரும். 20 வாளுக்கு இரையாகாதபடி என் உயிரைக் காத்தருளும்; இந்த நாய்களின் வெறியினின்று என் ஆருயிரைக் காப்பாற்றும்; 21 இந்தச் சிங்கங்களின் வாயிலிருந்து என்னைக் காப்பாற்றும்; காட்டெருமைகளின் கொம்புகளில் சிக்கியுள்ள என்னைக் காத்தருளும். புகழ்ச்சிப் பாடல் 22 உமது பெயரை என் சகோதரருக்கு அறிவிப்பேன்; சபை நடுவே உம்மைப் புகழ்ந்து பாடுவேன். * எபி 2: 12. 23 ஆண்டவருக்கு அஞ்சுவோரே; அவரைப் புகழுங்கள்; யாக்கோபின் மரபினரே, அனைவரும் அவரை மாட்சிமைப்படுத்துங்கள்; இஸ்ரயேல் மரபினரே, அனைவரும் அவரைப் பணியுங்கள். 24 ஏனெனில், எளியோரின் சிறுமையை அவர் அற்பமாக எண்ணவில்லை; அதைக் கவனியாமல் இருந்துவிடவில்லை; தமது முகத்தை அவர்களுக்கு மறைக்கவுமில்லை;
தம்மை நோக்கி அவர்கள் மன்றாடுகையில்
அவர்களுக்குச் செவிசாய்த்தார்.
25 மாபெரும் சபையில் நான் செலுத்தும் புகழ் உம்மிடமிருந்து எழுவதாக! உமக்கு அஞ்சுவோர் முன்னிலையில் என் பொருத்தனைகளைச் செலுத்துவேன். 26 எளியோர் உணவு உண்டு நிறைவு பெறுவர்; ஆண்டவரை நாடுவோர் அவரைப் புகழ்வராக! அவர்கள் இதயம் என்றென்றும் வாழ்வதாக! 27 பூவுலகின் கடையெல்லைவரை உள்ளோர் அனைவரும் இதை உணர்ந்து ஆண்டவர் பக்கம் திரும்புவர்; பிற இனத்துக் குடும்பத்தார் அனைவரும் அவர் முன்னிலையில் விழுந்து பணிவர். 28 ஏனெனில் அரசு ஆண்டவருடையது; பிற இனத்தார்மீதும் அவர் ஆட்சி புரிகின்றார். 29 மண்ணின் செல்வர் யாவரும் அவரைப் பணிவர்;* புழுதிக்குள் இறங்குவோர் யாவரும் தம் உயிரைக் காத்துக்கொள்ளாதோரும் அவரை வணங்குவர். [ ‘உணவுண்டு அவரைப் பணிவர்’ என்பது எபிரேய பாடம்.. ] 30 வருங்காலத் தலைமுறையினர் அவரைத் தொழுவர்; இனிவரும் தலைமுறையினருக்கு ஆண்டவரைப்பற்றி அறிவிக்கப்படும். 31 அவர்கள் வந்து, அவரது நீதியை அறிவிப்பர்; இனி பிறக்கப்போகும் மக்களுக்கு ‛இதை அவரே செய்தார்’ என்பர்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 22 / 150
×

Alert

×

Tamil Letters Keypad References