5. உமது வெற்றியைக் குறித்து மகிழ்ச்சியில் ஆர்ப்பரிப்போமாக! நம் கடவுளின் பெயரால் வெற்றிக்கொடி நாட்டுவோமாக! உம் விண்ணப்பங்களையெல்லாம் ஆண்டவர் நிறைவேற்றுவாராக!
|
6. ஆண்டவர் தாம் திருப்பொழிவு செய்தவருக்கு வெற்றி தருகின்றார். தமது தூய வானத்திலிருந்து அவருக்குப் பதிலளிக்கின்றார். வெற்றியளிக்கும் தமது வலக்கையின் ஆற்றலைக் காட்டுகின்றார் என்று இப்பொழுது நான் அறிந்து கொள்கிறேன்.
|
7. சிலர் தேர்ப்படையிலும், சிலர் குதிரைப் படையிலும் பெருமை கொள்கின்றனர்; நாமோ நம் கடவுளாகிய ஆண்டவரின் பெயரில் பெருமை கொள்கின்றோம்.
|