தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
சங்கீதம்
1. {அரசரின் வெற்றிக்காக வேண்டல்[BR](பாடகர் தலைவர்க்கு: தாவீதின் புகழ்ப்பா)} [PS] [QS][SS] நெருக்கடி வேளையில்[SE][SS] உமக்கு ஆண்டவர் பதிலளிப்பாராக![SE][SS] யாக்கோபின் கடவுளது பெயர்[SE][SS] உம்மைப் பாதுகாப்பதாக![SE][QE]
2. [QS][SS] தூயகத்திலிருந்து அவர் உமக்கு[SE][SS] உதவி அனுப்புவாராக![SE][SS] சீயோனிலிருந்து அவர் உமக்குத்[SE][SS] துணை செய்வாராக![SE][QE]
3. [QS][SS] உம் உணவுப் படையலை எல்லாம்[SE][SS] அவர் நினைவில் கொள்வாராக![SE][SS] உமது எரி பலியை[SE][SS] ஏற்றுக்கொள்வாராக! (சேலா)[SE][QE]
4. [QS][SS] உமது மனம் விரும்புவதை[SE][SS] அவர் உமக்குத் தந்தருள்வாராக![SE][SS] உம் திட்டங்களை எல்லாம்[SE][SS] நிறைவேற்றுவாராக! [* உரோ 10:18.[QE]. ] [SE][QE]
5. [QS][SS] உமது வெற்றியைக் குறித்து[SE][SS] மகிழ்ச்சியில் ஆர்ப்பரிப்போமாக![SE][SS] நம் கடவுளின் பெயரால்[SE][SS] வெற்றிக்கொடி நாட்டுவோமாக![SE][SS] உம் விண்ணப்பங்களையெல்லாம்[SE][SS] ஆண்டவர் நிறைவேற்றுவாராக![SE][QE]
6. [QS][SS] ஆண்டவர் தாம் திருப்பொழிவு செய்தவருக்கு[SE][SS] வெற்றி தருகின்றார்.[SE][SS] தமது தூய வானத்திலிருந்து[SE][SS] அவருக்குப் பதிலளிக்கின்றார்.[SE][SS] வெற்றியளிக்கும் தமது வலக்கையின்[SE][SS] ஆற்றலைக் காட்டுகின்றார் என்று[SE][SS] இப்பொழுது நான் அறிந்து கொள்கின்றேன்.[SE][QE]
7. [QS][SS] சிலர் தேர்ப்படையிலும்,[SE][SS] சிலர் குதிரைப்படையிலும்[SE][SS] பெருமை கொள்கின்றனர்;[SE][SS] நாமோ நம் கடவுளாகிய ஆண்டவரின்[SE][SS] பெயரில் பெருமை கொள்கின்றோம்.[SE][QE]
8. [QS][SS] அவர்கள் தடுமாறி வீழ்ந்தார்கள்;[SE][SS] நாமோ நிமிர்ந்து உறுதியாய் நிற்கின்றோம்.[SE][QE]
9. [QS][SS] ஆண்டவரே, அரசருக்கு வெற்றியருளும்;[SE][SS] நாங்கள் கூப்பிடும் வேளையில்[SE][SS] எங்களுக்குப் பதிலளியும்.[SE][PE][QE]
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 20 / 150
அரசரின் வெற்றிக்காக வேண்டல்
(பாடகர் தலைவர்க்கு: தாவீதின் புகழ்ப்பா)

1 நெருக்கடி வேளையில் உமக்கு ஆண்டவர் பதிலளிப்பாராக! யாக்கோபின் கடவுளது பெயர் உம்மைப் பாதுகாப்பதாக! 2 தூயகத்திலிருந்து அவர் உமக்கு உதவி அனுப்புவாராக! சீயோனிலிருந்து அவர் உமக்குத் துணை செய்வாராக! 3 உம் உணவுப் படையலை எல்லாம் அவர் நினைவில் கொள்வாராக! உமது எரி பலியை ஏற்றுக்கொள்வாராக! (சேலா) 4 உமது மனம் விரும்புவதை அவர் உமக்குத் தந்தருள்வாராக! உம் திட்டங்களை எல்லாம் நிறைவேற்றுவாராக! [* உரோ 10:18.. ] 5 உமது வெற்றியைக் குறித்து மகிழ்ச்சியில் ஆர்ப்பரிப்போமாக! நம் கடவுளின் பெயரால் வெற்றிக்கொடி நாட்டுவோமாக! உம் விண்ணப்பங்களையெல்லாம் ஆண்டவர் நிறைவேற்றுவாராக! 6 ஆண்டவர் தாம் திருப்பொழிவு செய்தவருக்கு வெற்றி தருகின்றார். தமது தூய வானத்திலிருந்து அவருக்குப் பதிலளிக்கின்றார். வெற்றியளிக்கும் தமது வலக்கையின் ஆற்றலைக் காட்டுகின்றார் என்று இப்பொழுது நான் அறிந்து கொள்கின்றேன். 7 சிலர் தேர்ப்படையிலும், சிலர் குதிரைப்படையிலும் பெருமை கொள்கின்றனர்; நாமோ நம் கடவுளாகிய ஆண்டவரின் பெயரில் பெருமை கொள்கின்றோம். 8 அவர்கள் தடுமாறி வீழ்ந்தார்கள்; நாமோ நிமிர்ந்து உறுதியாய் நிற்கின்றோம். 9 ஆண்டவரே, அரசருக்கு வெற்றியருளும்; நாங்கள் கூப்பிடும் வேளையில் எங்களுக்குப் பதிலளியும்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 20 / 150
×

Alert

×

Tamil Letters Keypad References