1. {அரசரின் வெற்றிக்காக வேண்டல்[BR](பாடகர் தலைவர்க்கு: தாவீதின் புகழ்ப்பா)} [PS] [QS][SS] நெருக்கடி வேளையில்[SE][SS] உமக்கு ஆண்டவர் பதிலளிப்பாராக![SE][SS] யாக்கோபின் கடவுளது பெயர்[SE][SS] உம்மைப் பாதுகாப்பதாக![SE][QE]
2. [QS][SS] தூயகத்திலிருந்து அவர் உமக்கு[SE][SS] உதவி அனுப்புவாராக![SE][SS] சீயோனிலிருந்து அவர் உமக்குத்[SE][SS] துணை செய்வாராக![SE][QE]
3. [QS][SS] உம் உணவுப் படையலை எல்லாம்[SE][SS] அவர் நினைவில் கொள்வாராக![SE][SS] உமது எரி பலியை[SE][SS] ஏற்றுக்கொள்வாராக! (சேலா)[SE][QE]
4. [QS][SS] உமது மனம் விரும்புவதை[SE][SS] அவர் உமக்குத் தந்தருள்வாராக![SE][SS] உம் திட்டங்களை எல்லாம்[SE][SS] நிறைவேற்றுவாராக![SE][QE]
5. [QS][SS] உமது வெற்றியைக் குறித்து[SE][SS] மகிழ்ச்சியில் ஆர்ப்பரிப்போமாக![SE][SS] நம் கடவுளின் பெயரால்[SE][SS] வெற்றிக்கொடி நாட்டுவோமாக![SE][SS] உம் விண்ணப்பங்களையெல்லாம்[SE][SS] ஆண்டவர் நிறைவேற்றுவாராக! [* உரோ 10:18.[QE] ] [SE][QE]
6. [QS][SS] ஆண்டவர் தாம் திருப்பொழிவு செய்தவருக்கு[SE][SS] வெற்றி தருகின்றார்.[SE][SS] தமது தூய வானத்திலிருந்து[SE][SS] அவருக்குப் பதிலளிக்கின்றார்.[SE][SS] வெற்றியளிக்கும் தமது வலக்கையின்[SE][SS] ஆற்றலைக் காட்டுகின்றார் என்று[SE][SS] இப்பொழுது நான் அறிந்து கொள்கின்றேன்.[SE][QE]
7. [QS][SS] சிலர் தேர்ப்படையிலும்,[SE][SS] சிலர் குதிரைப்படையிலும்[SE][SS] பெருமை கொள்கின்றனர்;[SE][SS] நாமோ நம் கடவுளாகிய ஆண்டவரின்[SE][SS] பெயரில் பெருமை கொள்கின்றோம்.[SE][QE]
8. [QS][SS] அவர்கள் தடுமாறி வீழ்ந்தார்கள்;[SE][SS] நாமோ நிமிர்ந்து உறுதியாய் நிற்கின்றோம்.[SE][QE]
9. [QS][SS] ஆண்டவரே, அரசருக்கு வெற்றியருளும்;[SE][SS] நாங்கள் கூப்பிடும் வேளையில்[SE][SS] எங்களுக்குப் பதிலளியும்.[SE][PE][QE]