1. {மாசற்றவனின் மன்றாட்டு[BR](தாவீதின் மன்றாட்டு)} [PS] [QS][SS] ஆண்டவரே, என் வழக்கின்[SE][SS] நியாயத்தைக் கேட்டருளும்;[SE][SS] என் வேண்டுதலை உற்றுக் கேளும்;[SE][SS] வஞ்சகமற்ற உதட்டினின்று எழும்[SE][SS] என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும்.[SE][QE]
2. [QS][SS] உம் முன்னிலையினின்று[SE][SS] எனக்கு நீதி கிடைக்கட்டும்;[SE][SS] உம் கண்கள் நேரியன காணட்டும்.[SE][QE]
3. [QS][SS] என் உள்ளத்தை ஆய்ந்தறியும்;[SE][SS] இரவு நேரத்தில் எனைச் சந்தித்திடும்;[SE][SS] என்னைப் புடமிட்டுப் பார்த்திடும்;[SE][SS] தீமை எதையும் என்னிடம் காணமாட்டீர்;[SE][SS] என் வாய் பிழை செய்யக்கூடாதென[SE][SS] உறுதி கொண்டேன்.[SE][QE]
4. [QS][SS] பிற மானிடர் செய்வது போல் அல்லாமல்,[SE][SS] நீர் உரைத்த வாக்கிற்கிணங்க,[SE][SS] வன்முறையாளரின் வழிகளை விட்டு[SE][SS] விலகியுள்ளேன்.[SE][QE]
5. [QS][SS] என் நடத்தை[SE][SS] உம் பாதைகளில் அமைந்துள்ளது;[SE][SS] என் காலடிகள்[SE][SS] உம் வழியினின்று பிறழவில்லை.[SE][QE]
6. [QS][SS] இறைவா, நான் உம்மை நோக்கிக்[SE][SS] கூப்பிடுகின்றேன்; ஏனெனில், [BR] நீர் எனக்குப் பதில் அளிப்பீர்.[SE][SS] என் பக்கம் உம் செவியைத் திருப்பியருளும்;[SE][SS] என் விண்ணப்பத்திற்குச் [BR] செவிசாய்த்தருளும்.[SE][QE]
7. [QS][SS] உமது வியத்தகு பேரன்பைக்[SE][SS] காண்பித்தருளும்;[SE][SS] உம்மிடம் அடைக்கலம் புகுவோரை[SE][SS] அவர்களுடைய எதிரிகளிடமிருந்து[SE][SS] உமது வலக்கரத்தால் விடுவிப்பவர் நீரே![SE][QE]
8. [QS][SS] உமது கண்ணின் மணியென[SE][SS] என்னைக் காத்தருளும்;[SE][SS] உம்முடைய சிறகுகளின் நிழலில்[SE][SS] என்னை மூடிக்கொள்ளும். [* திப 2:25-28. ] [SE][QE]
9. [QS][SS] என்னை ஒழிக்கத் தேடும்[SE][SS] பொல்லாரிடமிருந்தும்[SE][SS] என்னைச் சூழ்ந்து கொண்ட[SE][SS] எதிரிகளிடமிருந்தும்[SE][SS] என்னை மறைத்துக் கொள்ளும். [* திப 2:25-28. ] [SE][QE]
10. [QS][SS] அவர்கள் ஈவு இரக்கமற்ற கல்நெஞ்சர்கள்;[SE][SS] தங்கள் வாயினால்[SE][SS] இறுமாப்புடன் பேசுபவர்கள். [* திப 2:25-28. ; திப 13:35.[QE]. ] [SE][QE]
11. [QS][SS] அவர்கள் என்னைப் பின்தொடர்கின்றனர்;[SE][SS] இதோ! என்னை [BR] வளைத்துக் கொண்டனர்;[SE][SS] அவர்கள் என்னைத் தரையில் வீழ்த்துவதற்கு,[SE][SS] வைத்த கண் வாங்காது [BR] காத்திருக்கின்றனர். [* திப 2:25-28. ] [SE][QE]
12. [QS][SS] பீறிப்போடத் துடிக்கும்[SE][SS] சிங்கத்திற்கு அவர்கள் ஒப்பாவர்;[SE][SS] மறைவிடத்தில் பதுங்கியிருக்கும்[SE][SS] இளஞ்சிங்கத்திற்கு நிகராவர்.[SE][QE]
13. [QS][SS] ஆண்டவரே, எழுந்து வாரும்;[SE][SS] அவர்களை நேருக்குநேர்[SE][SS] எதிர்த்து முறியடியும்;[SE][SS] பொல்லாரிடமிருந்து உமது வாளால்[SE][SS] என்னைக் காத்தருளும்.[SE][QE]
14. [QS][SS] ஆண்டவரே, மாயும் மனிதரிடமிருந்து –[SE][SS] இவ்வுலகமே தங்கள் கதியென[SE][SS] வாழ்ந்து மாயும் மனிதரிடமிருந்து –[SE][SS] உமது கைவலிமையினால்[SE][SS] என்னைக் காப்பாற்றும். அவர்களுக்கென[SE][SS] நீர் ஒதுக்கி வைத்துள்ளவற்றால்[SE][SS] அவர்கள் வயிற்றை நிரப்பும்;[SE][SS] அவர்களின் மைந்தர்[SE][SS] வேண்டிய மட்டும் நிறைவு பெறட்டும்;[SE][SS] எஞ்சியிருப்பதைத் தங்கள் பிள்ளைகளுக்கு[SE][SS] விட்டுச்செல்லட்டும்;[SE][QE]
15. [QS][SS] நானோ நேர்மையில் நிலைத்திருந்து[SE][SS] உமது முகம் காண்பேன்;[SE][SS] விழித்தெழும்போது,[SE][SS] உமது உருவம் கண்டு நிறைவு பெறுவேன்.[SE][PE][QE]