1. {தூயகத்தில் இறைவன் போற்றி!} [PS] [QS][SS] அல்லேலூயா! தூயகத்தில்[SE][SS] இறைவனைப் போற்றுங்கள்![SE][SS] வலிமைமிகு விண்விரிவில்[SE][SS] அவரைப் போற்றுங்கள்![SE][QE]
2. [QS][SS] அவர்தம் வல்ல செயல்களுக்காய்[SE][SS] அவரைப் போற்றுங்கள்![SE][SS] அவர்தம் எல்லையிலா[SE][SS] மாண்பினைக் குறித்து[SE][SS] அவரைப் போற்றுங்கள்![SE][QE]
3. [QS][SS] எக்காளம் முழங்கியே[SE][SS] அவரைப் போற்றுங்கள்![SE][SS] வீணையுடன் யாழிசைத்து[SE][SS] அவரைப் போற்றுங்கள்.[SE][QE]
4. [QS][SS] மத்தளம் கொட்டி நர்த்தனம் செய்து[SE][SS] அவரைப் போற்றுங்கள்![SE][SS] யாழினை மீட்டி,[SE][SS] குழலினை ஊதி[SE][SS] அவரைப் போற்றுங்கள்![SE][QE]
5. [QS][SS] சிலம்பிடும் சதங்கையுடன்[SE][SS] அவரைப் போற்றுங்கள்![SE][SS] ‛கலீர்’ எனும் தாளத்துடன்[SE][SS] அவரைப் போற்றுங்கள்![SE][QE]
6. [QS][SS] அனைத்து உயிர்களே,[SE][SS] ஆண்டவரைப் புகழ்ந்திடுக![SE][SS] அல்லேலூயா![SE][PE][QE]