1. {மக்களில் மகிழ்ச்சியுறும் மாமன்னர் போற்றி!} [PS] [QS][SS] அல்லேலூயா![SE][SS] ஆண்டவருக்குப் புதியதொரு [BR] பாடலைப் பாடுங்கள்;[SE][SS] அவருடைய அன்பர் சபையில்[SE][SS] அவரது புகழைப் பாடுங்கள்.[SE][QE]
2. [QS][SS] இஸ்ரயேல் தன்னை உண்டாக்கினவரைக்[SE][SS] குறித்து மகிழ்ச்சி கொள்வதாக![SE][SS] சீயோனின் மக்கள் தம் அரசரை[SE][SS] முன்னிட்டுக் களிகூர்வார்களாக![SE][QE]
3. [QS][SS] நடனம் செய்து அவரது பெயரைப்[SE][SS] போற்றுவார்களாக;[SE][SS] மத்தளம் கொட்டி, யாழிசைத்து[SE][SS] அவரைப் புகழ்ந்து பாடுவார்களாக![SE][QE]
4. [QS][SS] ஆண்டவர் தம் மக்கள் மீது[SE][SS] விருப்பம் கொள்கின்றார்;[SE][SS] தாழ்நிலையிலுள்ள அவர்களுக்கு[SE][SS] வெற்றியளித்து மேன்மைப் படுத்துவார்.[SE][QE]
5. [QS][SS] அவருடைய அன்பர்[SE][SS] மேன்மையடைந்து களிகூர்வராக![SE][SS] மெத்தைகளில் சாய்ந்து[SE][SS] மகிழ்ந்து கொண்டாடுவராக![SE][QE]
6. [QS][SS] அவர்களின் வாய்[SE][SS] இறைவனை ஏத்திப் புகழட்டும்;[SE][SS] அவர்களின் கையில் இருபுறமும்[SE][SS] கூர்மையான வாள் இருக்கட்டும். [* திப 4:24; 14:15.[QE]. ] [SE][QE]
7. [QS][SS] அவர்கள் வேற்றினத்தாரிடம்[SE][SS] பழிதீர்த்துக் கொள்வார்கள்;[SE][SS] மக்களினங்களுக்கு[SE][SS] தண்டனைத் தீர்ப்பிடுவார்கள்;[SE][QE]
8. [QS][SS] வேற்றின மன்னர்களை[SE][SS] விலங்கிட்டுச் சிறைசெய்வார்கள்;[SE][SS] உயர்குடி மக்களை[SE][SS] இரும்பு விலங்குகளால் கட்டுவார்கள்.[SE][QE]
9. [QS][SS] முன்குறித்து வைத்த தீர்ப்பை[SE][SS] அவர்களிடம் நிறைவேற்றுவார்கள்;[SE][SS] இத்தகைய மேன்மை[SE][SS] ஆண்டவர் தம் அன்பர்[SE][SS] அனைவருக்கும் உரித்தானது.[SE][SS] அல்லேலூயா![SE][PE][QE]