1. {அனைத்துலகே, ஆண்டவரைப் போற்றிடு!} [PS] [QS][SS] அல்லேலூயா![SE][SS] விண்ணுலகில் உள்ளவையே,[SE][SS] ஆண்டவரைப் போற்றுங்கள்;[SE][SS] உன்னதங்களில் அவரைப் போற்றுங்கள்.[SE][QE]
2. [QS][SS] அவருடைய தூதர்களே,[SE][SS] நீங்கள் யாவரும்[SE][SS] அவரைப் போற்றுங்கள்;[SE][SS] அவருடைய படைகளே,[SE][SS] நீங்கள் யாவரும் அவரைப் போற்றுங்கள்.[SE][QE]
3. [QS][SS] கதிரவனே, நிலாவே,[SE][SS] அவரைப் போற்றுங்கள்;[SE][SS] ஒளிவீசும் விண்மீன்களே,[SE][SS] அவரைப் போற்றுங்கள்.[SE][QE]
4. [QS][SS] விண்ணுலக வானங்களே,[SE][SS] அவரைப் போற்றுங்கள்;[SE][SS] வானங்களின் மேலுள்ள நீர்த்திரளே,[SE][SS] அவரைப் போற்றுங்கள்.[SE][QE]
5. [QS][SS] அவை ஆண்டவரின் பெயரைப்[SE][SS] போற்றட்டும்;[SE][SS] ஏனெனில், அவரது கட்டளையின்படி[SE][SS] எல்லாம் படைக்கப்பட்டன;[SE][QE]
6. [QS][SS] அவரே அவற்றை என்றென்றும்[SE][SS] நிலைபெறச் செய்தார்;[SE][SS] மாறாத நியமத்தை[SE][SS] அவற்றிற்கு ஏற்படுத்தினார். [* திப 4:24; 14:15.[QE]. ] [SE][QE]
7. [QS][SS] மண்ணுலகில்[SE][SS] ஆண்டவரைப் போற்றுங்கள்;[SE][SS] கடலின் பெரும் நாகங்களே,[SE][SS] ஆழ்கடல் பகுதிகளே,[SE][QE]
8. [QS][SS] நெருப்பே, கல்மழையே,[SE][SS] வெண்பனியே, மூடுபனியே,[SE][SS] அவரது ஆணையை நிறைவேற்றும்[SE][SS] பெருங்காற்றே,[SE][QE]
9. [QS][SS] மலைகளே, அனைத்துக் குன்றுகளே,[SE][SS] கனிதரும் மரங்களே,[SE][SS] அனைத்துக் கேதுரு மரங்களே,[SE][QE]
10. [QS][SS] காட்டு விலங்குகளே,[SE][SS] அனைத்துக் கால்நடைகளே,[SE][SS] ஊர்ந்து செல்லும் உயிரினங்களே,[SE][SS] சிறகுள்ள பறவைகளே,[SE][QE]
11. [QS][SS] உலகின் அரசர்களே,[SE][SS] எல்லா மக்களினங்களே,[SE][SS] தலைவர்களே, உலகின் ஆட்சியாளர்களே,[SE][QE]
12. [QS][SS] இளைஞரே, கன்னியரே,[SE][SS] முதியோரே மற்றும் சிறியோரே,[SE][SS] நீங்கள் எல்லாரும்[SE][SS] ஆண்டவரைப் போற்றுங்கள்.[SE][QE]
13. [QS][SS] அவர்கள் ஆண்டவரின் பெயரைப்[SE][SS] போற்றுவார்களாக;[SE][SS] அவரது பெயர் மட்டுமே உயர்ந்தது;[SE][SS] அவரது மாட்சி[SE][SS] விண்ணையும் மண்ணையும் கடந்தது.[SE][QE]
14. [QS][SS] அவர் தம் மக்களின் ஆற்றலை[SE][SS] உயர்வுறச் செய்தார்;[SE][SS] அவருடைய அனைத்து அடியாரும்[SE][SS] அவருக்கு நெருங்கிய[SE][SS] அன்பார்ந்த மக்களாகிய[SE][SS] இஸ்ரயேல் மக்களும்[SE][SS] அவரைப் போற்றுவார்கள்.[SE][SS] அல்லேலூயா![SE][PE][QE]