1. {மீட்பராம் கடவுள் போற்றி!} [PS] [QS][SS] அல்லேலூயா! என் நெஞ்சே![SE][SS] நீ ஆண்டவரைப் போற்றிடு;[SE][QE]
2. [QS][SS] நான் உயிரோடு உள்ளளவும்[SE][SS] ஆண்டவரைப் போற்றிடுவேன்;[SE][SS] என் வாழ்நாளெல்லாம் என் கடவுளைப்[SE][SS] புகழ்ந்து பாடிடுவேன்.[SE][QE]
3. [QS][SS] ஆட்சித் தலைவர்களை நம்பாதீர்கள்;[SE][SS] உன்னை மீட்க இயலாத[SE][SS] மானிட மக்களை நம்ப வேண்டாம்.[SE][QE]
4. [QS][SS] அவர்களின் ஆவி பிரியும்போது[SE][SS] தாங்கள் தோன்றிய மண்ணுக்கே[SE][SS] அவர்கள் திரும்புவார்கள்;[SE][SS] அந்நாளில் அவர்களின் எண்ணங்கள்[SE][SS] அழிந்துபோம்.[SE][QE]
5. [QS][SS] யாக்கோபின் இறைவனைத்[SE][SS] தம் துணையாகக் கொண்டிருப்போர்[SE][SS] பேறுபெற்றோர்;[SE][SS] தம் கடவுளாகிய ஆண்டவரையே[SE][SS] நம்பியிருப்போர் பேறுபெற்றோர்.[SE][QE]
6. [QS][SS] அவரே விண்ணையும் மண்ணையும்[SE][SS] கடலையும் அவற்றிலுள்ள யாவற்றையும்[SE][SS] உருவாக்கியவர்;[SE][SS] என்றென்றும் நம்பிக்கைக்கு[SE][SS] உரியவராய் இருப்பவரும் அவரே![SE][QE]
7. [QS][SS] ஆண்டவர் ஒடுக்கப்பட்டோர்க்கான[SE][SS] நீதியை நிலைநாட்டுகின்றார்;[SE][SS] பசித்திருப்போர்க்கு[SE][SS] உணவளிக்கின்றார்;[SE][SS] சிறைப்பட்டோர்க்கு[SE][SS] விடுதலை அளிக்கின்றார். [* திப 4:24; 14:15.[QE] ] [SE][QE]
8. [QS][SS] ஆண்டவர் பார்வையற்றோரின்[SE][SS] கண்களைத் திறக்கின்றார்;[SE][SS] தாழ்த்தப்பட்டோரை உயர்த்துகின்றார்;[SE][SS] நீதிமான்களிடம் அன்பு கொண்டுள்ளார்.[SE][QE]
9. [QS][SS] ஆண்டவர் அயல் நாட்டினரைப்[SE][SS] பாதுகாக்கின்றார்;[SE][SS] அனாதைப் பிள்ளைகளையும்[SE][SS] கைம்பெண்களையும் ஆதரிக்கின்றார்;[SE][SS] ஆனால், பொல்லாரின் வழிமுறைகளைக்[SE][SS] கவிழ்த்துவிடுகின்றார்.[SE][QE]
10. [QS][SS] சீயோனே! உன் கடவுள், என்றென்றும்,[SE][SS] எல்லாத் தலைமுறைகளுக்கும்[SE][SS] ஆட்சி செய்வார். அல்லேலூயா![SE][PE]