1. {அரசராம் கடவுள் போற்றி![BR](தாவீதின் திருப்பாடல்)} [PS] [QS][SS] என் கடவுளே, என் அரசே![SE][SS] உம்மைப் புகழ்ந்து ஏத்துவேன்;[SE][SS] உமது பெயரை என்றும்[SE][SS] எப்பொழுதும் போற்றுவேன்.[SE][QE]
2. [QS][SS] நாள்தோறும் உம்மைப் போற்றுவேன்;[SE][SS] உமது பெயரை என்றும்[SE][SS] எப்பொழுதும் புகழ்வேன்.[SE][QE]
3. [QS][SS] ஆண்டவர் மாண்புமிக்கவர்;[SE][SS] பெரிதும் போற்றுதலுக்கும் உரியவர்;[SE][SS] அவரது மாண்பு நம் அறிவுக்கு எட்டாதது.[SE][QE]
4. [QS][SS] ஒரு தலைமுறை அடுத்த தலைமுறைக்கு[SE][SS] உம் செயல்களைப் புகழ்ந்துரைக்கும்;[SE][SS] வல்லமைமிகு உம் செயல்களை[SE][SS] எடுத்துரைக்கும். [* யோபு 7:17-18; திபா 8:4 ] [SE][QE]
5. [QS][SS] உமது மாண்பின்[SE][SS] மேன்மையையும் மாட்சியையும்[SE][SS] வியத்தகு உம் செயல்களையும்[SE][SS] நான் சிந்திப்பேன்.[SE][QE]
6. [QS][SS] அச்சந்தரும் உம் செயல்களின்[SE][SS] வல்லமையைப்பற்றி[SE][SS] மக்கள் பேசுவார்கள்;[SE][SS] உமது மாண்பினை நான்[SE][SS] விரித்துரைப்பேன்,[SE][QE]
7. [QS][SS] அவர்கள் உமது உயர்ந்த நற்பண்பை[SE][SS] நினைந்துக் கொண்டாடுவார்கள்;[SE][SS] உமது நீதியை எண்ணி[SE][SS] ஆர்ப்பரித்துப் பாடுவார்கள்.[SE][QE]
8. [QS][SS] ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்;[SE][SS] எளிதில் சினம் கொள்ளாதவர்;[SE][SS] பேரன்பு கொண்டவர்.[SE][QE]
9. [QS][SS] ஆண்டவர் எல்லாருக்கும்[SE][SS] நன்மை செய்பவர்;[SE][SS] தாம் உண்டாக்கிய அனைத்தின்மீதும்[SE][SS] இரக்கம் காட்டுபவர்.[SE][QE]
10. [QS][SS] ஆண்டவரே, நீர் உருவாக்கிய யாவும்[SE][SS] உமக்கு நன்றி செலுத்தும்;[SE][SS] உம்முடைய அன்பர்கள்[SE][SS] உம்மைப் போற்றுவார்கள்.[SE][QE]
11. [QS][SS] அவர்கள் உமது அரசின் மாட்சியை[SE][SS] அறிவிப்பார்கள்;[SE][SS] உமது வல்லமையைப் பற்றிப் பேசுவார்கள்.[SE][QE]
12. [QS][SS] மானிடர்க்கு[SE][SS] உம் வல்லமைச் செயல்களையும்[SE][SS] உமது அரசுக்குரிய[SE][SS] மாட்சியின் பேரொளியையும்[SE][SS] புலப்படுத்துவார்கள்.[SE][QE]
13. [QS][SS] உமது அரசு[SE][SS] எல்லாக் காலங்களிலுமுள்ள அரசு;[SE][SS] உமது ஆளுகை[SE][SS] தலைமுறை தலைமுறையாக உள்ளது.[SE][SS] ஆண்டவர் தம் வாக்குகள் அனைத்திலும்[SE][SS] உண்மையானவர்;[SE][SS] தம் செயல்கள் அனைத்திலும்[SE][SS] தூய்மையானவர்.[SE][QE]
14. [QS][SS] தடுக்கி விழும் யாவரையும்[SE][SS] ஆண்டவர் தாங்குகின்றார்.[SE][SS] தாழ்த்தப்பட்ட யாவரையும்[SE][SS] தூக்கிவிடுகின்றார்.[SE][QE]
15. [QS][SS] எல்லா உயிரினங்களின் கண்களும்[SE][SS] உம்மையே நோக்குகின்றன;[SE][SS] தக்க வேளையில் நீரே அவற்றிற்கு[SE][SS] உணவளிக்கின்றீர்.[SE][QE]
16. [QS][SS] நீர் உமது கையைத் திறந்து[SE][SS] எல்லா உயிரினங்களின்[SE][SS] விருப்பத்தையும் நிறைவேற்றுகின்றீர்.[SE][QE]
17. [QS][SS] ஆண்டவர் தாம் செய்யும் அனைத்திலும்[SE][SS] நீதியுடையவர்; அவர்தம் செயல்கள் யாவும்[SE][SS] இரக்கச் செயல்களே.[SE][QE]
18. [QS][SS] தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும்,[SE][SS] உண்மையாய்த் தம்மை நோக்கி[SE][SS] மன்றாடும் யாவருக்கும்,[SE][SS] ஆண்டவர் அண்மையில் இருக்கிறார்.[SE][QE]
19. [QS][SS] அவர் தமக்கு அஞ்சி நடப்போரின்[SE][SS] விருப்பத்தை நிறைவேற்றுவார்;[SE][SS] அவர்களது மன்றாட்டுக்குச் செவிசாய்த்து[SE][SS] அவர்களைக் காப்பாற்றுவார்.[SE][QE]
20. [QS][SS] ஆண்டவர் தம்மிடம் பற்றுக் கொள்ளும்[SE][SS] அனைவரையும் பாதுகாக்கின்றார்;[SE][SS] பொல்லார் அனைவரையும் அழிப்பார்.[SE][QE]
21. [QS][SS] என் வாய் ஆண்டவரின் புகழை[SE][SS] அறிவிப்பதாக![SE][SS] உடல்கொண்ட அனைத்தும்[SE][SS] அவரது திருப்பெயரை[SE][SS] என்றும் எப்பொழுதும் போற்றுவதாக![SE][PE][QE]