1. {வெற்றிக்கு நன்றி[BR](தாவீதுக்கு உரியது)} [PS] [QS][SS] என் பாறையாகிய ஆண்டவர்[SE][SS] போற்றி! போற்றி![SE][SS] போரிட என் கைகளுக்குப்[SE][SS] பயிற்சி அளிப்பவர் அவரே![SE][SS] போர்புரிய என் விரல்களைப்[SE][SS] பழக்குபவரும் அவரே![SE][QE]
2. [QS][SS] என் கற்பாறையும்* கோட்டையும் அவரே![SE][SS] எனக்குப் பாதுகாப்பாளரும்[SE][SS] மீட்பரும் அவரே![SE][SS] என் கேடயமும் புகலிடமும் அவரே![SE][SS] மக்களினத்தாரை எனக்குக்[SE][SS] கீழ்ப்படுத்துபவர் அவரே! [* ‘பேரன்பும்’ என்றும் பொருள்படும்.[QE]. ] [SE][QE]
3. [QS][SS] ஆண்டவரே! மனிதரை நீர் கவனிக்க[SE][SS] அவர்கள் யார்?[SE][SS] மானிடரை நீர் கருத்தில் கொள்ள[SE][SS] அவர்கள் யார்? [* யோபு 7:17-18; திபா 8:4. ] [SE][QE]
4. [QS][SS] மனிதர் சிறுமூச்சுக்கு ஒப்பானவர்;[SE][SS] அவர்களின் வாழ்நாள்கள்[SE][SS] மறையும் நிழலுக்கு நிகரானவை.[SE][QE]
5. [QS][SS] ஆண்டவரே! உம் வான்வெளியை[SE][SS] வளைத்து இறங்கிவாரும்;[SE][SS] மலைகளைத் தொடும்;[SE][SS] அவை புகை கக்கும்.[SE][QE]
6. [QS][SS] மின்னலை மின்னச் செய்து,[SE][SS] அவர்களைச் சிதறடியும்;[SE][SS] உம் அம்புகளை எய்து,[SE][SS] அவர்களைக் கலங்கடியும்.[SE][QE]
7. [QS][SS] வானின்று உமது கையை நீட்டி[SE][SS] எனக்கு விடுதலை வழங்கும்;[SE][SS] பெருவெள்ளம் போல் எழும்[SE][SS] வேற்றினத்தார் கையினின்று[SE][SS] என்னை விடுவித்தருளும்.[SE][QE]
8. [QS][SS] அவர்களது வாய் பேசுவது பொய்![SE][SS] அவர்களது வலக்கை[SE][SS] வஞ்சமிகு வலக்கை![SE][QE]
9. [QS][SS] இறைவா, நான் உமக்குப்[SE][SS] புதியதொரு பாடல் பாடுவேன்;[SE][SS] பதின் நரம்பு வீணையால்[SE][SS] உமக்குப் புகழ் பாடுவேன்.[SE][QE]
10. [QS][SS] அரசர்களுக்கு வெற்றி அளிப்பவர் நீரே![SE][SS] உம் ஊழியர் தாவீதைக்[SE][SS] கொடிய வாளினின்று[SE][SS] தப்புவித்தவரும் நீரே![SE][QE]
11. [QS][SS] எனக்கு விடுதலை வழங்கும்;[SE][SS] வேற்றினத்தார் கையினின்று[SE][SS] என்னை விடுவித்தருளும்;[SE][SS] அவர்களது வாய் பேசுவது பொய்![SE][SS] அவர்களது வலக்கை வஞ்சமிகு வலக்கை![SE][QE]
12. [QS][SS] எம் புதல்வர்கள்[SE][SS] இளமையில் செழித்து வளரும்[SE][SS] செடிகள்போல் இருப்பார்களாக![SE][SS] எம் புதல்வியர்[SE][SS] அரண்மனைக்கு அழகூட்டும்[SE][SS] செதுக்கிய சிலைகள்போல்[SE][SS] இருப்பார்களாக![SE][QE]
13. [QS][SS] எம் களஞ்சியங்கள் நிறைந்திருப்பனவாக![SE][SS] வகைவகையான தானியங்களால்[SE][SS] நிறைந்திருப்பனவாக![SE][SS] எங்கள் வயல்களில் ஆடுகள் ஆயிரம்,[SE][SS] பல்லாயிரம் மடங்கு பலுகட்டும்![SE][QE]
14. [QS][SS] எங்கள் மாடுகள் சுமைசுமப்பனவாக![SE][SS] எவ்விதச் சிதைவோ இழப்போ[SE][SS] இல்லாதிருக்கட்டும்![SE][SS] எங்கள் தெருக்களில்[SE][SS] அழுகுரல் இல்லாதிருக்கட்டும்.[SE][QE]
15. [QS][SS] இவற்றை உண்மையாகவே அடையும்[SE][SS] மக்கள் பேறுபெற்றோர்![SE][SS] ஆண்டவரைத் தம் கடவுளாகக் கொண்ட[SE][SS] மக்கள் பேறுபெற்றோர்.[SE][PE]