1. {உதவிக்காக மன்றாடல்[BR](தாவீதின் புகழ்ப்பா)} [PS] [QS][SS] ஆண்டவரே! என் மன்றாட்டைக்[SE][SS] கேட்டருளும்; நீர் நம்பிக்கைக்கு[SE][SS] உரியவராய் இருப்பதால்,[SE][SS] உமது இரக்கத்திற்காக நான் எழுப்பும்[SE][SS] மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும்;[SE][SS] உமது நீதியின்படி எனக்குப் பதில் தாரும்.[SE][QE]
2. [QS][SS] தண்டனைத் தீர்ப்புக்கு[SE][SS] உம் அடியானை இழுக்காதேயும்;[SE][SS] ஏனெனில், உயிர் வாழ்வோர் எவரும்[SE][SS] உமது திருமுன் நீதிமான் இல்லை.[SE][QE]
3. [QS][SS] எதிரி என்னைத் துரத்தினான்;[SE][SS] என்னைத் தரையிலிட்டு நசுக்கினான்;[SE][SS] என்றோ இறந்தொழிந்தவர்களைப்போல்[SE][SS] என்னை இருட்டில் கிடக்கச் செய்தான். [* உரோ 3:20; கலா 2:16.[QE] ] [SE][QE]
4. [QS][SS] எனவே, என்னுள்ளே என் மனம்[SE][SS] ஒடுங்கிப் போயிற்று;[SE][SS] என் உள்ளம் எனக்குள் சோர்ந்து போயிற்று.[SE][QE]
5. [QS][SS] பண்டைய நாள்களை[SE][SS] நான் நினைத்துக் கொள்கின்றேன்;[SE][SS] உம் செயல்கள் அனைத்தையும் குறித்துச்[SE][SS] சிந்தனை செய்கின்றேன்;[SE][SS] உம் கைவினைகளைப் பற்றி[SE][SS] ஆழ்ந்து சிந்திக்கின்றேன்.[SE][QE]
6. [QS][SS] உம்மை நோக்கி என் கைகளை[SE][SS] உயர்த்துகின்றேன்;[SE][SS] வறண்ட நிலம்[SE][SS] நீருக்காகத் தவிப்பது போல்[SE][SS] என் உயிர் உமக்காகத்[SE][SS] தவிக்கின்றது. (சேலா)[SE][QE]
7. [QS][SS] ஆண்டவரே! விரைவாக[SE][SS] எனக்குச் செவிசாய்த்தருளும்;[SE][SS] ஏனெனில், என் உள்ளம் உடைந்துவிட்டது;[SE][SS] என்னிடமிருந்து உம் முகத்தை[SE][SS] மறைத்துக் கொள்ளாதேயும்;[SE][SS] இல்லையெனில், படுகுழி செல்வோருள்[SE][SS] ஒருவராகிவிடுவேன்.[SE][QE]
8. [QS][SS] உமது பேரன்பை நான்[SE][SS] வைகறையில் கண்டடையச் செய்யும்;[SE][SS] ஏனெனில், உம்மீது[SE][SS] நம்பிக்கை வைத்துள்ளேன்;[SE][SS] நான் நடக்க வேண்டிய அந்த வழியை[SE][SS] எனக்குக் காட்டியருளும்;[SE][SS] ஏனெனில், உம்மை நோக்கி[SE][SS] என் உள்ளத்தை உயர்த்துகின்றேன்.[SE][QE]
9. [QS][SS] ஆண்டவரே![SE][SS] என் எதிரிகளிடமிருந்து[SE][SS] என்னை விடுவித்தருளும்;[SE][SS] நான் உம்மிடம் தஞ்சம் புகுந்துள்ளேன்.[SE][QE]
10. [QS][SS] உம் திருவுளத்தை நிறைவேற்ற[SE][SS] எனக்குக் கற்பித்தருளும்;[SE][SS] ஏனெனில், நீரே என் கடவுள்;[SE][SS] உமது நலமிகு ஆவி என்னைச்[SE][SS] செம்மையான வழியில் நடத்துவதாக![SE][QE]
11. [QS][SS] ஆண்டவரே![SE][SS] உமது பெயரின் பொருட்டு[SE][SS] என் உயிரைக் காத்தருளும்![SE][SS] உமது நீதியின் பொருட்டு என்னை[SE][SS] நெருக்கடியினின்று விடுவித்தருளும்.[SE][QE]
12. [QS][SS] உமது பேரன்பை முன்னிட்டு[SE][SS] என் பகைவரை அழித்துவிடும்;[SE][SS] என் பகைவர் அனைவரையும்[SE][SS] ஒழித்துவிடும்;[SE][SS] ஏனெனில், நான் உமக்கே அடிமை![SE][PE]