1. {உதவிக்காக மன்றாடல்[BR](தாவீதின் அறப்பாடல்; குகையில் இருந்தபொழுது மன்றாடியது)} [PS] [QS][SS] ஆண்டவரை நோக்கி அபயக்குரல்[SE][SS] எழுப்புகின்றேன்; உரத்த குரலில்[SE][SS] ஆண்டவரின் இரக்கத்திற்காக[SE][SS] வேண்டுகின்றேன். [* 142 தலைப்பு: 1 சாமு ; 24:3.[QE]. ] [SE][QE]
2. [QS][SS] என் மனக்குறைகளை[SE][SS] அவர் முன்னிலையில் கொட்டுகின்றேன்;[SE][SS] அவர் திருமுன்னே என் இன்னலை[SE][SS] எடுத்துரைக்கின்றேன்;[SE][QE]
3. [QS][SS] என் மனம் சோர்வுற்றிருந்தது;[SE][SS] நான் செல்லும் வழியை[SE][SS] அவர் அறிந்தேயிருக்கின்றார்;[SE][SS] நான் செல்லும் வழியில் அவர்கள்[SE][SS] எனக்குக் கண்ணி வைத்துள்ளார்கள்.[SE][QE]
4. [QS][SS] வலப்புறம் கவனித்துப் பார்க்கின்றேன்;[SE][SS] என்னைக் கவனிப்பார் எவருமிலர்;[SE][SS] எனக்குப் புகலிடம் இல்லாமற் போயிற்று;[SE][SS] என் நலத்தில் அக்கறை கொள்வார்[SE][SS] எவருமிலர்.[SE][QE]
5. [QS][SS] ஆண்டவரே! உம்மை நோக்கிக்[SE][SS] கதறுகின்றேன்;[SE][SS] ‛நீரே என் அடைக்கலம்;[SE][SS] உயிர் வாழ்வோர் நாட்டில்[SE][SS] நீரே என் பங்கு’.[SE][QE]
6. [QS][SS] என் வேண்டுதலைக் கவனித்துக் கேளும்;[SE][SS] ஏனெனில், நான் மிகவும்[SE][SS] தாழ்த்தப்பட்டுள்ளேன்;[SE][SS] என்னைத் துன்புறுத்துவோரிடமிருந்து[SE][SS] எனக்கு விடுதலை அளித்தருளும்;[SE][SS] ஏனெனில், அவர்கள் என்னைவிட[SE][SS] வலிமைமிக்கோர்.[SE][QE]
7. [QS][SS] சிறையினின்று என்னை விடுவித்தருளும்;[SE][SS] உமது பெயருக்கு[SE][SS] நான் நன்றி செலுத்துவேன்;[SE][SS] நீதிமான்கள் என்னைச்[SE][SS] சூழ்ந்து நிற்பார்கள்;[SE][SS] ஏனெனில், நீர் எனக்குப்[SE][SS] பெரும் நன்மை செய்கின்றீர்.[SE][PE]