தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
சங்கீதம்
1. {மாலை மன்றாட்டு[BR](தாவீதின் புகழ்ப்பா)} [PS] [QS][SS] ஆண்டவரே! நான் உம்மை[SE][SS] நோக்கிக் கதறுகின்றேன்;[SE][SS] விரைவாய் எனக்குத் துணைசெய்யும்.[SE][SS] உம்மை நோக்கி நான்[SE][SS] வேண்டுதல் செய்யும்போது[SE][SS] என் குரலுக்குச் செவிசாய்த்தருளும்.[SE][QE]
2. [QS][SS] தூபம்போல் என் மன்றாட்டு[SE][SS] உம் திருமுன் ஏற்றுக்கொள்ளப்படுவதாக![SE][SS] மாலைப் பலிபோல் என் கைகள்[SE][SS] உம்மை நோக்கி உயர்வனவாக![SE][QE]
3. [QS][SS] ஆண்டவரே! என் நாவுக்குக்[SE][SS] காவல் வைத்தருளும்;[SE][SS] என் இதழ்களின் வாயிலில்[SE][SS] காவலாளியை வைத்தருளும். [* திவெ 5:8.[QE] ] [SE][QE]
4. [QS][SS] என் இதயம் தீயது எதையும்[SE][SS] நாடவிடாதேயும்;[SE][SS] தீச்செயல்களை நான் செய்யவிடாதேயும்;[SE][SS] தீச்செயல் செய்யும் மனிதரோடு[SE][SS] என்னைச் சேரவிடாதேயும்;[SE][SS] அவர்களோடு இனிய விருந்தினை[SE][SS] நான் உண்ணவிடாதேயும்.[SE][QE]
5. [QS][SS] நீதிமான் என்னைக் கனிவோடு[SE][SS] தண்டிக்கட்டும்; அது என் தலைக்கு[SE][SS] எண்ணெய்போல் ஆகும்;[SE][SS] ஆனால், தீயவரின் எண்ணெய்[SE][SS] என்றுமே என் தலையில்[SE][SS] படாமல் இருக்கட்டும்;[SE][SS] ஏனெனில், அவர்கள் செய்யும்[SE][SS] தீமைகளுக்கு எதிராய்[SE][SS] நான் என்றும் வேண்டுதல் செய்வேன்.[SE][QE]
6. [QS][SS] அவர்கள் நீதிபதிகளிடம்[SE][SS] தண்டனைக்கென[SE][SS] ஒப்புவிக்கப்படும் பொழுது, நான் சொன்னது[SE][SS] எவ்வளவு உண்மையானது என்று[SE][SS] ஏற்றுக் கொள்வார்கள்;[SE][QE]
7. [QS][SS] ‛ஒருவரால் பாறை பிளந்து[SE][SS] சிதறடிக்கப்படுவது போல்,[SE][SS] எங்கள் எலும்புகளும்[SE][SS] பாதாளத்தின் வாயிலில்[SE][SS] சிதறடிக்கப்படும்’ என்பார்கள்.[SE][QE]
8. [QS][SS] ஏனெனில், என் தலைவராகிய[SE][SS] ஆண்டவரே! என் கண்கள்[SE][SS] உம்மை நோக்கியே இருக்கின்றன;[SE][SS] உம்மிடம் அடைக்கலம் புகுகின்றேன்;[SE][SS] என் உயிரை அழியவிடாதேயும்.[SE][QE]
9. [QS][SS] அவர்கள் எனக்கு வைத்த[SE][SS] கண்ணிகளிலிருந்து[SE][SS] என்னைக் காத்தருளும்;[SE][SS] தீமை செய்வோரின் சுருக்குகளிலிருந்து[SE][SS] என்னைப் பாதுகாத்தருளும்.[SE][QE]
10. [QS][SS] தீயோர் தாங்கள் வைத்த கண்ணிகளில்[SE][SS] ஒருங்கே வந்து விழுவார்களாக![SE][SS] நானோ தடையின்றிக்[SE][SS] கடந்து செல்வேனாக![SE][PE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 141 / 150
சங்கீதம் 141:18
மாலை மன்றாட்டு
(தாவீதின் புகழ்ப்பா)

1 ஆண்டவரே! நான் உம்மை நோக்கிக் கதறுகின்றேன்; விரைவாய் எனக்குத் துணைசெய்யும். உம்மை நோக்கி நான் வேண்டுதல் செய்யும்போது என் குரலுக்குச் செவிசாய்த்தருளும். 2 தூபம்போல் என் மன்றாட்டு உம் திருமுன் ஏற்றுக்கொள்ளப்படுவதாக! மாலைப் பலிபோல் என் கைகள் உம்மை நோக்கி உயர்வனவாக! 3 ஆண்டவரே! என் நாவுக்குக் காவல் வைத்தருளும்; என் இதழ்களின் வாயிலில் காவலாளியை வைத்தருளும். [* திவெ 5:8. ] 4 என் இதயம் தீயது எதையும் நாடவிடாதேயும்; தீச்செயல்களை நான் செய்யவிடாதேயும்; தீச்செயல் செய்யும் மனிதரோடு என்னைச் சேரவிடாதேயும்; அவர்களோடு இனிய விருந்தினை நான் உண்ணவிடாதேயும். 5 நீதிமான் என்னைக் கனிவோடு தண்டிக்கட்டும்; அது என் தலைக்கு எண்ணெய்போல் ஆகும்; ஆனால், தீயவரின் எண்ணெய் என்றுமே என் தலையில் படாமல் இருக்கட்டும்; ஏனெனில், அவர்கள் செய்யும் தீமைகளுக்கு எதிராய் நான் என்றும் வேண்டுதல் செய்வேன். 6 அவர்கள் நீதிபதிகளிடம் தண்டனைக்கென ஒப்புவிக்கப்படும் பொழுது, நான் சொன்னது எவ்வளவு உண்மையானது என்று ஏற்றுக் கொள்வார்கள்; 7 ‛ஒருவரால் பாறை பிளந்து சிதறடிக்கப்படுவது போல், எங்கள் எலும்புகளும் பாதாளத்தின் வாயிலில் சிதறடிக்கப்படும்’ என்பார்கள். 8 ஏனெனில், என் தலைவராகிய ஆண்டவரே! என் கண்கள் உம்மை நோக்கியே இருக்கின்றன; உம்மிடம் அடைக்கலம் புகுகின்றேன்; என் உயிரை அழியவிடாதேயும். 9 அவர்கள் எனக்கு வைத்த கண்ணிகளிலிருந்து என்னைக் காத்தருளும்; தீமை செய்வோரின் சுருக்குகளிலிருந்து என்னைப் பாதுகாத்தருளும். 10 தீயோர் தாங்கள் வைத்த கண்ணிகளில் ஒருங்கே வந்து விழுவார்களாக! நானோ தடையின்றிக் கடந்து செல்வேனாக!
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 141 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References