1. {பாதுகாப்புக்காக மன்றாடல்[BR](பாடகர் தலைவர்க்கு: தாவீதின் புகழ்ப்பா)} [PS] [QS][SS] ஆண்டவரே! தீயோரிடமிருந்து[SE][SS] என்னை விடுவியும்;[SE][SS] வன்செயல் செய்வோரிடமிருந்து[SE][SS] என்னைப் பாதுகாத்தருளும்.[SE][QE]
2. [QS][SS] அவர்கள் தம் மனத்தில்[SE][SS] தீயனவற்றை திட்டமிடுகின்றனர்;[SE][SS] நாள்தோறும் சச்சரவுகளைக்[SE][SS] கிளப்பி விடுகின்றனர்.[SE][QE]
3. [QS][SS] அவர்கள் பாம்பெனத் தம் நாவைக்[SE][SS] கூர்மையாக்கிக்கொள்கின்றனர்;[SE][SS] அவர்களது உதட்டில் உள்ளது[SE][SS] விரியன் பாம்பின் நஞ்சே! (சேலா)[SE][QE]
4. [QS][SS] ஆண்டவரே! தீயோரின் கையினின்று[SE][SS] என்னைக் காத்தருளும்;[SE][SS] கொடுமை செய்வோரிடமிருந்து[SE][SS] என்னைப் பாதுகாத்தருளும்;[SE][SS] அவர்கள் என் காலை[SE][SS] வாரிவிடப் பார்க்கின்றார்கள். [* உரோ 3:13.[QE] ] [SE][QE]
5. [QS][SS] செருக்குற்றோர் எனக்கெனக்[SE][SS] கண்ணியை மறைவாக வைக்கின்றனர்;[SE][SS] தம் கயிறுகளால்[SE][SS] எனக்கு சுருக்கு வைக்கின்றனர்; (சேலா)[SE][QE]
6. [QS][SS] நானோ ஆண்டவரை நோக்கி[SE][SS] இவ்வாறு வேண்டினேன்;[SE][SS] நீரே என் இறைவன்![SE][SS] ஆண்டவரே! உம் இரக்கத்திற்காக[SE][SS] நான் எழுப்பும் குரலுக்குச் செவிசாயும்.[SE][QE]
7. [QS][SS] என் தலைவராகிய ஆண்டவரே![SE][SS] எனக்கு விடுதலை வழங்கும் வல்லவரே![SE][SS] போர் நடந்த நாளில் என் தலையை[SE][SS] மறைத்துக் காத்தீர்![SE][QE]
8. [QS][SS] ஆண்டவரே! தீயோரின் விருப்பங்களை[SE][SS] நிறைவேற்றாதேயும்; அவர்களின்[SE][SS] சூழ்ச்சிகளை வெற்றி பெறவிடாதேயும்.[SE][SS] இல்லையெனில், அவர்கள் ஆணவம்[SE][SS] கொள்வார்கள். (சேலா)[SE][QE]
9. [QS][SS] என்னைச் சூழ்பவர்கள் செருக்குடன்[SE][SS] நடக்கின்றார்கள்;[SE][SS] அவர்கள் செய்வதாகப் பேசும் தீமை[SE][SS] அவர்கள்மேலே விழுவதாக![SE][QE]
10. [QS][SS] நெருப்புத் தழல்[SE][SS] அவர்கள்மேல் விழுவதாக![SE][SS] மீளவும் எழாதபடி படுகுழியில்[SE][SS] தள்ளப்படுவார்களாக![SE][QE]
11. [QS][SS] புறங்கூறும் நாவுடையோர் உலகில்[SE][SS] நிலைத்து வாழாதிருப்பராக![SE][SS] வன்செயல் செய்வாரைத்[SE][SS] தீமை விரட்டி வேட்டையாடுவதாக![SE][QE]
12. [QS][SS] ஏழைகளின் நீதிக்காக[SE][SS] ஆண்டவர் வழக்காடுவார் எனவும்[SE][SS] எளியவர்களுக்கு நீதி வழங்குவார்[SE][SS] எனவும் அறிவேன்.[SE][QE]
13. [QS][SS] மெய்யாகவே, நீதிமான்கள்[SE][SS] உமது பெயருக்கு[SE][SS] நன்றி செலுத்துவார்கள்;[SE][SS] நேர்மையுள்ளோர் உம் திருமுன் வாழ்வர்.[SE][PE]