தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
சங்கீதம்
1. "கடவுள் இல்லை" என அறிவிலிகள் தம் உள்ளத்தில் சொல்லிக் கொள்கின்றனர்; அவர்கள் சீர்கெட்டு அருவருப்பான செயல்களில் ஈடுபடுகின்றனர். நல்லது செய்வோர் எவருமே இல்லை.
2. ஆண்டவர் விண்ணகத்தினின்று மானிடரை உற்றுநோக்குகின்றார்; மதிநுட்பமுள்ளோர், கடவுளை நாடுவோர் எவராவது உண்டோ எனப் பார்க்கின்றார்.
3. எல்லோரும் நெறிபிறழ்ந்தனர்; ஒருமிக்கக் கெட்டுப்போயினர்; நல்லது செய்வார் யாரும் இல்லை; ஒருவர்கூட இல்லை.
4. தீங்கிழைக்கும் யாவரும் அறிவை இழந்துவிட்டார்களோ? உணவை விழுங்குவதுபோல் என் மக்களை விழுங்கப்பார்க்கிறார்களே! அவர்கள் ஆண்டவரைநோக்கி மன்றாடுவதுமில்லை.
5. அவர்கள் அஞ்சி நடுங்குவர்; ஏனெனில், கடவுள் நேர்மையாளரின் வழிமரபோடு இருக்கின்றார்.
6. எளியோரின் திட்டத்தை அவர்கள் தோல்வியுறச் செய்கின்றார்கள்; ஆனால், ஆண்டவர் எளியோர்க்கு அடைக்கலமாய் இருக்கின்றார்.
7. சீயோனிலிருந்து இஸ்ரயேலருக்கு மீட்பு வருவதாக! ஆண்டவர் தம் மக்களுக்கு மீண்டும் வளமான வாழ்வை அருளும்போது, யாக்கோபின் இனத்தார் களிகூர்வராக! இஸ்ரயேல் மக்கள் அகமகிழ்வராக!

குறிப்பேடுகள்

No Verse Added

Total 150 Chapters, Current Chapter 14 of Total Chapters 150
சங்கீதம் 14:32

×

Alert

×

tamil Letters Keypad References