1. {முழுமையாய் அறிந்து காக்கும் கடவுள்[BR](பாடகர் தலைவர்க்கு: தாவீதின் புகழ்ப்பா)} [PS] [QS][SS] ஆண்டவரே![SE][SS] நீர் என்னை[SE][SS] ஆய்ந்து அறிந்திருக்கின்றீர்![SE][QE]
2. [QS][SS] நான் அமர்வதையும் எழுவதையும்[SE][SS] நீர் அறிந்திருக்கின்றீர்;[SE][SS] என் நினைவுகளை எல்லாம்[SE][SS] தொலையிலிருந்தே உய்த்துணர்கின்றீர்.[SE][QE]
3. [QS][SS] நான் நடப்பதையும் படுப்பதையும்[SE][SS] நீர் அறிந்துள்ளீர்;[SE][SS] என் வழிகள் எல்லாம்[SE][SS] உமக்குத் தெரிந்தவையே.[SE][QE]
4. [QS][SS] ஆண்டவரே! என் வாயில்[SE][SS] சொல் உருவாகு முன்பே,[SE][SS] அதை முற்றிலும் அறிந்திருக்கின்றீர்.[SE][QE]
5. [QS][SS] எனக்கு முன்னும் பின்னும்[SE][SS] என்னைச் சூழ்ந்து இருக்கின்றீர்;[SE][SS] உமது கையால் என்னைப்[SE][SS] பற்றிப்பிடிக்கின்றீர்.[SE][QE]
6. [QS][SS] என்னைப்பற்றிய உம் அறிவு[SE][SS] எனக்கு மிகவும் வியப்பாயுள்ளது;[SE][SS] அது உன்னதமானது;[SE][SS] என் அறிவுக்கு எட்டாதது.[SE][QE]
7. [QS][SS] உமது ஆற்றலைவிட்டு[SE][SS] நான் எங்கே செல்லக்கூடும்?[SE][SS] உமது திருமுன்னிலிருந்து[SE][SS] நான் எங்கே தப்பியோட முடியும்?[SE][QE]
8. [QS][SS] நான் வானத்திற்கு[SE][SS] ஏறிச் சென்றாலும்[SE][SS] நீர் அங்கே இருக்கின்றீர்![SE][SS] பாதாளத்தில் படுக்கையை[SE][SS] அமைத்துக் கொண்டாலும்[SE][SS] நீர் அங்கேயும் இருக்கின்றீர்![SE][QE]
9. [QS][SS] நான் *கதிரவனின் இடத்திற்கும்*[SE][SS] பறந்து சென்றாலும்[SE][SS] மேற்கே கடலுக்கு அப்பால் வாழ்ந்தாலும்,[SE][QE]
10. [QS][SS] அங்கேயும் உமது கை[SE][SS] என்னை நடத்திச் செல்லும்;[SE][SS] உமது வலக்கை என்னைப்[SE][SS] பற்றிக் கொள்ளும். [* *…* ‘வைகறையின் இறக்கைகளால்’ என்பது எபிரேய பாடம்.[QE] ] [SE][QE]
11. [QS][SS] ‘உண்மையில் இருள் என்னை[SE][SS] மூடிக்கொள்ளாதோ?[SE][SS] ஒளி சூழ்வதென இரவும்[SE][SS] என்னைச் சூழ்ந்து கொள்ளாதோ?’[SE][SS] என்று நான் சொன்னாலும்,[SE][QE]
12. [QS][SS] இருள்கூட உமக்கு இருட்டாய் இல்லை;[SE][SS] இரவும் பகலைப்போல[SE][SS] ஒளியாய் இருக்கின்றது;[SE][SS] இருளும் உமக்கு ஒளிபோல் இருக்கும்.[SE][QE]
13. [QS][SS] ஏனெனில், என் உள் உறுப்புகளை[SE][SS] உண்டாக்கியவர் நீரே![SE][SS] என் தாயின் கருவில்[SE][SS] எனக்கு உருதந்தவர் நீரே![SE][QE]
14. [QS][SS] அஞ்சத்தகு, வியத்தகு முறையில்[SE][SS] நீர் என்னைப் படைத்ததால்,[SE][SS] நான் உமக்கு நன்றி நவில்கின்றேன்;[SE][SS] உம் செயல்கள்[SE][SS] வியக்கத்தக்கவை என்பதை[SE][SS] என் மனம் முற்றிலும் அறியும்.[SE][QE]
15. [QS][SS] என் எலும்பு உமக்கு மறைவானதன்று;[SE][SS] மறைவான முறையில்[SE][SS] நான் உருவானதையும்[SE][SS] பூவுலகின் ஆழ்பகுதிகளில்[SE][SS] நான் உருப்பெற்றதையும்[SE][SS] நீர் அறிந்திருந்தீர்.[SE][QE]
16. [QS][SS] உம் கண்கள் கருமுளையில்[SE][SS] என் உறுப்புகளைக் கண்டன;[SE][SS] நீர் எனக்குக் குறித்து வைத்துள்ள[SE][SS] நாள்கள் எல்லாம்[SE][SS] எனக்கு வாழ்நாள் எதுவுமே[SE][SS] இல்லாத காலத்திலேயே[SE][SS] உமது நூலில் எழுதப்பட்டுள்ளன.[SE][QE]
17. [QS][SS] இறைவா! உம்முடைய நினைவுகளை[SE][SS] நான் அறிந்துகொள்வது[SE][SS] எத்துணைக் கடினம்![SE][SS] அவற்றின் எண்ணிக்கை[SE][SS] எத்துணைப் பெரிது![SE][QE]
18. [QS][SS] அவற்றைக் கணக்கிட[SE][SS] நான் முற்பட்டால்,[SE][SS] அவை கடல் மணலிலும்[SE][SS] மிகுதியாய் உள்ளன;[SE][SS] அவற்றை எண்ணி முடிக்க வேண்டுமானால்,[SE][SS] நீர் உள்ளளவும் நான் வாழ வேண்டும்.[SE][QE]
19. [QS][SS] கடவுளே! நீர் தீயோரைக் கொன்றுவிட்டால்,[SE][SS] எவ்வளவு நலம்! இரத்தப்பழிகாரர்[SE][SS] என்னிடமிருந்து அகன்றால்,[SE][SS] எத்துணை நன்று![SE][QE]
20. [QS][SS] ஏனெனில், அவர்கள் தீயமனத்துடன்[SE][SS] உமக்கு எதிராய்ப் பேசுகின்றார்கள்;[SE][SS] அவர்கள் தலைதூக்கி[SE][SS] உமக்கு எதிராய்ச் சதி செய்கின்றார்கள்.[SE][QE]
21. [QS][SS] ஆண்டவரே! உம்மை வெறுப்போரை[SE][SS] நானும் வெறுக்காதிருப்பேனோ?[SE][SS] உம்மை எதிர்க்க எழுவோரை[SE][SS] நானும் வெறுக்கின்றேன் அன்றோ?[SE][QE]
22. [QS][SS] நான் அவர்களை[SE][SS] அடியோடு வெறுக்கின்றேன்;[SE][SS] அவர்கள் எனக்கும் எதிரிகள் ஆனார்கள்.[SE][QE]
23. [QS][SS] இறைவா! நீர் என் உள்ளத்தை[SE][SS] ஆய்ந்து அறியும்;[SE][SS] என் எண்ணங்களை அறியுமாறு[SE][SS] என்னைச் சோதித்துப் பாரும்.[SE][QE]
24. [QS][SS] உம்மை வருத்தும் வழியில்[SE][SS] நான் செல்கின்றேனோ என்று பாரும்;[SE][SS] என்றுமுள வழியில் என்னை நடத்தியருளும்.[SE][PE]