1. {நன்றிப் பாடல்[BR](தாவீதுக்கு உரியது)} [PS] [QS][SS] ஆண்டவரே![SE][SS] என் முழுமனத்துடன்[SE][SS] உமக்கு நன்றி செலுத்துவேன்;[SE][SS] தெய்வங்கள் முன்னிலையில்[SE][SS] உம்மைப் புகழ்வேன்.[SE][QE]
2. [QS][SS] உம் திருக்கோவிலை நோக்கித் திரும்பி[SE][SS] உம்மைத் தாள் பணிவேன்;[SE][SS] உம் பேரன்பையும்[SE][SS] உண்மையையும் முன்னிட்டு[SE][SS] உமது பெயருக்கு நன்றி செலுத்துவேன்;[SE][SS] ஏனெனில், அனைத்திற்கும் மேலாக[SE][SS] உம் பெயரையும் உம் வாக்கையும்[SE][SS] மேன்மையுறச் செய்துள்ளீர்.[SE][QE]
3. [QS][SS] நான் மன்றாடிய நாளில்[SE][SS] எனக்குச் செவிசாய்த்தீர்;[SE][SS] என் மனத்திற்கு வலிமை அளித்தீர்.[SE][QE]
4. [QS][SS] ஆண்டவரே! நீர்[SE][SS] திருவாய் மலர்ந்த சொற்களைப்[SE][SS] பூவுலகின் மன்னர் அனைவரும் கேட்டு[SE][SS] உம்மைப் போற்றுவர்.[SE][QE]
5. [QS][SS] ஆண்டவரே! உம் வழிகளை[SE][SS] அவர்கள் புகழ்ந்து பாடுவர்;[SE][SS] ஏனெனில், உமது மாட்சி மிகப்பெரிது![SE][QE]
6. [QS][SS] ஆண்டவரே! நீர் உன்னதத்தில் உறைபவர்;[SE][SS] எனினும் நலிந்தோரைக்[SE][SS] கண்ணோக்குகின்றீர்;[SE][SS] ஆனால், செருக்குற்றோரைத்[SE][SS] தொலையிலிருந்தே அறிந்து கொள்கின்றீர்.[SE][QE]
7. [QS][SS] நான் துன்பத்தின் நடுவில் நடந்தாலும்,[SE][SS] என் உயிரைக் காக்கின்றீர்;[SE][SS] என் எதிரிகளின் சினத்துக்கு எதிராக[SE][SS] உமது கையை நீட்டுகின்றீர்;[SE][SS] உமது வலக்கையால்[SE][SS] என்னைக் காப்பாற்றுகின்றீர்.[SE][QE]
8. [QS][SS] நீர் வாக்களித்த அனைத்தையும்[SE][SS] எனக்கெனச் செய்து முடிப்பீர்;[SE][SS] ஆண்டவரே! என்றும் உள்ளது[SE][SS] உமது பேரன்பு;[SE][SS] உம் கைவினைப் பொருளைக்[SE][SS] கைவிடாதேயும். [* திவெ 18:6.[QE]. ] [SE][PE][QE]