1. {புகழ்ச்சிப் பாடல்} [PS] [QS][SS] அல்லேலூயா![SE][SS] ஆண்டவரின் பெயரைப் புகழுங்கள்;[SE][SS] ஆண்டவரின் ஊழியரே![SE][SS] அவரைப் புகழுங்கள்.[SE][QE]
2. [QS][SS] ஆண்டவரின் கோவிலுள் நிற்பவர்களே![SE][SS] நம் கடவுளின்[SE][SS] கோவில் முற்றங்களில் உள்ளவர்களே![SE][QE]
3. [QS][SS] ஆண்டவரைப் புகழுங்கள்![SE][SS] ஏனெனில், அவர் நல்லவர்;[SE][SS] அவரது பெயரைப் போற்றிப் பாடுங்கள்;[SE][SS] ஏனெனில், அவர் இனியவர்.[SE][QE]
4. [QS][SS] ஆண்டவர் யாக்கோபைத்[SE][SS] தமக்கென்று தேர்ந்துகொண்டார்;[SE][SS] இஸ்ரயேலைத் தமக்குரிய[SE][SS] தனிச்சொத்தாகத் தெரிந்தெடுத்தார்.[SE][QE]
5. [QS][SS] ஆண்டவர் மேன்மைமிக்கவர்[SE][SS] என்பதை அறிவேன்;[SE][SS] நம் ஆண்டவர் எல்லாத்[SE][SS] தெய்வங்களுக்கும் மேலானவர்[SE][SS] என்பதும் எனக்குத் தெரியும்.[SE][QE]
6. [QS][SS] விண்ணிலும் மண்ணிலும் கடல்களிலும்[SE][SS] எல்லா ஆழ்பகுதிகளிலும்,[SE][SS] ஆண்டவர் தமக்கு விருப்பமான[SE][SS] யாவற்றையும் செய்கின்றார்.[SE][QE]
7. [QS][SS] அவர் பூவுலகின்[SE][SS] கடையெல்லைகளிலிருந்து[SE][SS] மேகங்களை எழச்செய்கின்றார்.[SE][SS] மழை பெய்யும்படி[SE][SS] மின்னலை உண்டாக்குகின்றார்;[SE][SS] காற்றைத் தம் கிடங்குகளிலிருந்து[SE][SS] வெளிவரச் செய்கின்றார்.[SE][QE]
8. [QS][SS] அவர் எகிப்தின்[SE][SS] தலைப்பேறுகளைத் தாக்கினார்;[SE][SS] மனிதர், கால்நடைகளின்[SE][SS] தலைப்பேறுகளை அழித்தார்.[SE][QE]
9. [QS][SS] எகிப்து நாடே! உன் நடுவில்[SE][SS] பார்வோனையும் அவனுடைய[SE][SS] எல்லா ஊழியர்களையும் தண்டிக்குமாறு,[SE][SS] அடையாளங்களையும்[SE][SS] அருஞ்செயல்களையும்[SE][SS] அவர் நிகழச் செய்தார். [* மத் 1:21; தீத் 2:14.[QE] ] [SE][QE]
10. [QS][SS] அவர் பல்வேறு இனத்தவரைத்[SE][SS] தாக்கினார்;[SE][SS] வலிமைவாய்ந்த மன்னர்களைக்[SE][SS] கொன்றார்.[SE][QE]
11. [QS][SS] எமோரியரின் மன்னனாகிய சீகோனையும்[SE][SS] பாசானின் மன்னனாகிய ஓகையும்[SE][SS] கானானின் எல்லா அரசுகளையும்[SE][SS] அழித்தார்;[SE][QE]
12. [QS][SS] அவர்கள் நாட்டைத்[SE][SS] தம் மக்களாகிய இஸ்ரயேலருக்கு[SE][SS] உரிமைச்சொத்தாக,[SE][SS] சொந்த உடைமையாகக் கொடுத்தார்.[SE][QE]
13. [QS][SS] ஆண்டவரே! உமது பெயர் என்றுமுள்ளது;[SE][SS] ஆண்டவரே! உம்மைப்பற்றிய நினைவு[SE][SS] தலைமுறை தலைமுறையாக[SE][SS] நீடித்திருக்கும்.[SE][QE]
14. [QS][SS] ஆண்டவர் தம் மக்களை[SE][SS] நீதியுடன் தீர்ப்பிடுவார்;[SE][SS] தம் அடியாருக்கு இரக்கம் காட்டுவார்.[SE][QE]
15. [QS][SS] வேற்றினத்தார் வழிபடும் சிலைகள்[SE][SS] வெறும் வெள்ளியும் பொன்னுமே;[SE][SS] அவை மனிதரின் கையால்[SE][SS] செய்யப்பட்டவையே![SE][QE]
16. [QS][SS] அவற்றுக்கு வாய்கள் உண்டு;[SE][SS] ஆனால் அவை பேசுவதில்லை;[SE][SS] கண்கள் உண்டு;[SE][SS] ஆனால் அவை காண்பதில்லை;[SE][QE]
17. [QS][SS] காதுகள் உண்டு;[SE][SS] ஆனால் அவை கேட்பதில்லை;[SE][SS] மூக்குகள் உண்டு;[SE][SS] ஆனால் அவை மூச்சுவிடுவதில்லை.[SE][QE]
18. [QS][SS] அவற்றைச் செய்து வைப்பவரும்[SE][SS] அவற்றில் நம்பிக்கை வைக்கும் யாவரும்[SE][SS] அவற்றைப் போலவே இருப்பார்கள்.[SE][QE]
19. [QS][SS] இஸ்ரயேல் குடும்பத்தாரே![SE][SS] ஆண்டவரைப் போற்றுங்கள்![SE][SS] ஆரோன் குடும்பத்தாரே![SE][SS] ஆண்டவரைப் போற்றுங்கள்![SE][QE]
20. [QS][SS] லேவி குடும்பத்தாரே![SE][SS] ஆண்டவரைப் போற்றுங்கள்![SE][SS] அவருக்கு அஞ்சி நடப்போரே![SE][SS] அவரைப் போற்றுங்கள்![SE][QE]
21. [QS][SS] எருசலேமைத் தம் உறைவிடமாகக்[SE][SS] கொண்டிருக்கும் ஆண்டவர்[SE][SS] போற்றப்படுவாராக;[SE][SS] சீயோனிலிருக்கும் ஆண்டவர்[SE][SS] போற்றப்படுவாராக. அல்லேலூயா![SE][PE][QE]