தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
சங்கீதம்
1. {திருக்கோவில் வாழ்த்து[BR](சீயோன்மலைத் திருப்பயணப் பாடல்)} [PS] [QS][SS] ஆண்டவரே! தாவீதையும்[SE][SS] அவர் பட்ட[SE][SS] இன்னல்கள் அனைத்தையும்[SE][SS] நினைவு கூர்ந்தருளும்.[SE][QE]
2. [QS][SS] அவர் ஆண்டவராகிய உமக்கு[SE][SS] ஆணையிட்டுக் கூறியதை,[SE][SS] யாக்கோபின் வல்லவராகிய[SE][SS] உமக்குச் செய்த பொருத்தனையை[SE][SS] நினைவுகூர்ந்தருளும்.[SE][QE]
3. [QS][SS] “ஆண்டவருக்கு ஓர் இடத்தை,[SE][SS] யாக்கோபின் வல்லவருக்கு[SE][SS] ஒர் உறைவிடத்தை[SE][SS] நான் அமைக்கும் வரையில்,[SE][QE]
4. [QS][SS] என் இல்லமாகிய கூடாரத்தினுள்[SE][SS] செல்லமாட்டேன்;[SE][SS] படுப்பதற்காக என் மஞ்சத்தில்[SE][SS] ஏறமாட்டேன்;[SE][QE]
5. [QS][SS] என் கண்களைத் தூங்க விடமாட்டேன்;[SE][SS] என் இமைகளை மூடவிடமாட்டேன்”[SE][SS] என்று அவர் சொன்னாரே.[SE][QE]
6. [QS][SS] திருப்பேழை எப்ராத்தாவில்[SE][SS] இருப்பதாய்க் கேள்விப்பட்டோம்;[SE][SS] வனவெளியில் அதைக் கண்டுபிடித்தோம்.[SE][QE]
7. [QS][SS] “அவரது உறைவிடத்திற்குச் செல்வோம்![SE][SS] வாருங்கள்;[SE][SS] அவரது திருவடிதாங்கி[SE][SS] முன் வீழ்ந்து பணிவோம்!” என்றோம்.[SE][QE]
8. [QS][SS] ஆண்டவரே! நீர் உமது[SE][SS] வல்லமை விளங்கும் பேழையுடன்[SE][SS] உமது உறைவிடத்திற்கு[SE][SS] எழுந்தருள்வீராக![SE][QE]
9. [QS][SS] உம் குருக்கள் நீதியை[SE][SS] ஆடையென அணிவார்களாக![SE][SS] உம் அன்பர்கள் அக்களிப்பார்களாக! [* மத் 1:21; தீத் 2:14.[QE] ] [SE][QE]
10. [QS][SS] நீர் திருப்பொழிவு செய்த அரசரை,[SE][SS] உம் ஊழியராகிய தாவீதின் பொருட்டுப்[SE][SS] புறக்கணியாதேயும்.[SE][QE]
11. [QS][SS] ஆண்டவர் தாவீதுக்கு[SE][SS] உண்மையாய் ஆணையிட்டுக் கூறினார்;[SE][SS] அவர்தம் வாக்குறுதியினின்று[SE][SS] பின்வாங்கமாட்டார்;[SE][SS] “உனக்குப் பிறந்த ஒருவனை[SE][SS] அரசனாக ஏற்படுத்தி[SE][SS] உன் அரியணையில்[SE][SS] வீற்றிருக்கச் செய்வேன்.[SE][QE]
12. [QS][SS] உன் மைந்தர்[SE][SS] என் உடன்படிக்கையையும்,[SE][SS] நான் அவர்களுக்குக் கற்பிக்கும்[SE][SS] என் நியமங்களையும் கடைப்பிடித்தால்,[SE][SS] அவர்களுடைய மைந்தரும்[SE][SS] என்றென்றும் உன் அரியணையில்[SE][SS] வீற்றிருப்பர்.”[SE][QE]
13. [QS][SS] ஆண்டவர் சீயோனைத்[SE][SS] தேர்ந்தெடுத்தார்;[SE][SS] அதையே தம்[SE][SS] உறைவிடமாக்க விரும்பினார்.[SE][QE]
14. [QS][SS] “இது என்றென்றும்[SE][SS] நான் இளைப்பாறும் இடம்;[SE][SS] இதை நான் விரும்பினதால்[SE][SS] இதையே என் உறைவிடமாக்குவேன்.[SE][QE]
15. [QS][SS] இங்கே என் ஆசியால்[SE][SS] உணவுப் பொருள்[SE][SS] தாராளமாகக் கிடைக்கச்செய்வேன்;[SE][SS] அதனை ஏழைகள் உண்டு[SE][SS] நிறைவு பெறுமாறு செய்வேன்.[SE][QE]
16. [QS][SS] இங்குள்ள குருக்களுக்கு[SE][SS] மீட்பெனும் உடையை உடுத்துவேன்;[SE][SS] இங்குள்ள என் அன்பர்கள்[SE][SS] மகிழ்ந்து ஆரவாரிப்பார்கள்.[SE][QE]
17. [QS][SS] இங்கே தாவீதின் மரபிலிருந்து[SE][SS] ஒரு வல்லவனை எழச்செய்வேன்;[SE][SS] நான் திருப்பொழிவு செய்தவனுக்காக[SE][SS] ஒரு ஒளிவிளக்கை ஏற்பாடு செய்துள்ளேன்.[SE][QE]
18. [QS][SS] அவனுடைய எதிரிகளுக்கு[SE][SS] இகழ்ச்சியெனும்[SE][SS] உடையை உடுத்துவேன்;[SE][SS] அவன்மீதோ அவனது மணிமுடி[SE][SS] ஒளிவீசும்.”[SE][PE][QE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 132 / 150
சங்கீதம் 132:43
திருக்கோவில் வாழ்த்து
(சீயோன்மலைத் திருப்பயணப் பாடல்)

1 ஆண்டவரே! தாவீதையும் அவர் பட்ட இன்னல்கள் அனைத்தையும் நினைவு கூர்ந்தருளும். 2 அவர் ஆண்டவராகிய உமக்கு ஆணையிட்டுக் கூறியதை, யாக்கோபின் வல்லவராகிய உமக்குச் செய்த பொருத்தனையை நினைவுகூர்ந்தருளும். 3 “ஆண்டவருக்கு ஓர் இடத்தை, யாக்கோபின் வல்லவருக்கு ஒர் உறைவிடத்தை நான் அமைக்கும் வரையில், 4 என் இல்லமாகிய கூடாரத்தினுள் செல்லமாட்டேன்; படுப்பதற்காக என் மஞ்சத்தில் ஏறமாட்டேன்; 5 என் கண்களைத் தூங்க விடமாட்டேன்; என் இமைகளை மூடவிடமாட்டேன்” என்று அவர் சொன்னாரே. 6 திருப்பேழை எப்ராத்தாவில் இருப்பதாய்க் கேள்விப்பட்டோம்; வனவெளியில் அதைக் கண்டுபிடித்தோம். 7 “அவரது உறைவிடத்திற்குச் செல்வோம்! வாருங்கள்; அவரது திருவடிதாங்கி முன் வீழ்ந்து பணிவோம்!” என்றோம். 8 ஆண்டவரே! நீர் உமது வல்லமை விளங்கும் பேழையுடன் உமது உறைவிடத்திற்கு எழுந்தருள்வீராக! 9 உம் குருக்கள் நீதியை ஆடையென அணிவார்களாக! உம் அன்பர்கள் அக்களிப்பார்களாக! [* மத் 1:21; தீத் 2:14. ] 10 நீர் திருப்பொழிவு செய்த அரசரை, உம் ஊழியராகிய தாவீதின் பொருட்டுப் புறக்கணியாதேயும். 11 ஆண்டவர் தாவீதுக்கு உண்மையாய் ஆணையிட்டுக் கூறினார்; அவர்தம் வாக்குறுதியினின்று பின்வாங்கமாட்டார்; “உனக்குப் பிறந்த ஒருவனை அரசனாக ஏற்படுத்தி உன் அரியணையில் வீற்றிருக்கச் செய்வேன். 12 உன் மைந்தர் என் உடன்படிக்கையையும், நான் அவர்களுக்குக் கற்பிக்கும் என் நியமங்களையும் கடைப்பிடித்தால், அவர்களுடைய மைந்தரும் என்றென்றும் உன் அரியணையில் வீற்றிருப்பர்.” 13 ஆண்டவர் சீயோனைத் தேர்ந்தெடுத்தார்; அதையே தம் உறைவிடமாக்க விரும்பினார். 14 “இது என்றென்றும் நான் இளைப்பாறும் இடம்; இதை நான் விரும்பினதால் இதையே என் உறைவிடமாக்குவேன். 15 இங்கே என் ஆசியால் உணவுப் பொருள் தாராளமாகக் கிடைக்கச்செய்வேன்; அதனை ஏழைகள் உண்டு நிறைவு பெறுமாறு செய்வேன். 16 இங்குள்ள குருக்களுக்கு மீட்பெனும் உடையை உடுத்துவேன்; இங்குள்ள என் அன்பர்கள் மகிழ்ந்து ஆரவாரிப்பார்கள். 17 இங்கே தாவீதின் மரபிலிருந்து ஒரு வல்லவனை எழச்செய்வேன்; நான் திருப்பொழிவு செய்தவனுக்காக ஒரு ஒளிவிளக்கை ஏற்பாடு செய்துள்ளேன். 18 அவனுடைய எதிரிகளுக்கு இகழ்ச்சியெனும் உடையை உடுத்துவேன்; அவன்மீதோ அவனது மணிமுடி ஒளிவீசும்.”
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 132 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References