1. {உதவிக்காக மன்றாடல்[BR](சீயோன்மலைத் திருப்பயணப் பாடல்)} [PS] [QS][SS] ஆண்டவரே! ஆழ்ந்த[SE][SS] துயரத்தில் இருக்கும் நான்[SE][SS] உம்மை நோக்கி[SE][SS] மன்றாடுகிறேன்;[SE][QE]
2. [QS][SS] ஆண்டவரே! என் மன்றாட்டுக்குச்[SE][SS] செவிசாய்த்தருளும்;[SE][SS] என் விண்ணப்பக் குரலை[SE][SS] உம்முடைய செவிகள்[SE][SS] கவனத்துடன் கேட்கட்டும்.[SE][QE]
3. [QS][SS] ஆண்டவரே! நீர் எம் குற்றங்களை[SE][SS] மனத்தில் கொண்டிருந்தால்,[SE][SS] யார்தான் நிலைத்து நிற்க முடியும்?[SE][QE]
4. [QS][SS] நீரோ மன்னிப்பு அளிப்பவர்;[SE][SS] மனிதரும் உமக்கு அஞ்சி நடப்பர்.[SE][QE]
5. [QS][SS] ஆண்டவருக்காக ஆவலுடன் நான்[SE][SS] காத்திருக்கின்றேன்;[SE][SS] என் நெஞ்சம் காத்திருக்கின்றது;[SE][SS] அவரது சொற்களுக்காக[SE][SS] ஆவலுடன் காத்திருக்கின்றேன்.[SE][QE]
6. [QS][SS] விடியலுக்காய்க் காத்திருக்கும்[SE][SS] காவலரைவிட,[SE][SS] ஆம், விடியலுக்காய்க் காத்திருக்கும்[SE][SS] காவலரைவிட,[SE][SS] என் நெஞ்சம் என் தலைவருக்காய்[SE][SS] ஆவலுடன் காத்திருக்கின்றது.[SE][QE]
7. [QS][SS] இஸ்ரயேலே![SE][SS] ஆண்டவரையே நம்பியிரு;[SE][SS] பேரன்பு ஆண்டவரிடமே உள்ளது;[SE][SS] மிகுதியான மீட்பு[SE][SS] அவரிடமே உண்டு.[SE][QE]
8. [QS][SS] எல்லாத் தீவினைகளினின்றும்[SE][SS] இஸ்ரயேலரை மீட்பவர் அவரே![SE][PE]