தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
சங்கீதம்
1. {உதவிக்காக மன்றாடல்[BR](சீயோன்மலைத் திருப்பயணப் பாடல்)} [PS] [QS][SS] ஆண்டவரே! ஆழ்ந்த[SE][SS] துயரத்தில் இருக்கும் நான்[SE][SS] உம்மை நோக்கி[SE][SS] மன்றாடுகிறேன்;[SE][QE]
2. [QS][SS] ஆண்டவரே! என் மன்றாட்டுக்குச்[SE][SS] செவிசாய்த்தருளும்;[SE][SS] என் விண்ணப்பக் குரலை[SE][SS] உம்முடைய செவிகள்[SE][SS] கவனத்துடன் கேட்கட்டும்.[SE][QE]
3. [QS][SS] ஆண்டவரே! நீர் எம் குற்றங்களை[SE][SS] மனத்தில் கொண்டிருந்தால்,[SE][SS] யார்தான் நிலைத்து நிற்க முடியும்?[SE][QE]
4. [QS][SS] நீரோ மன்னிப்பு அளிப்பவர்;[SE][SS] மனிதரும் உமக்கு அஞ்சி நடப்பர்.[SE][QE]
5. [QS][SS] ஆண்டவருக்காக ஆவலுடன் நான்[SE][SS] காத்திருக்கின்றேன்;[SE][SS] என் நெஞ்சம் காத்திருக்கின்றது;[SE][SS] அவரது சொற்களுக்காக[SE][SS] ஆவலுடன் காத்திருக்கின்றேன்.[SE][QE]
6. [QS][SS] விடியலுக்காய்க் காத்திருக்கும்[SE][SS] காவலரைவிட,[SE][SS] ஆம், விடியலுக்காய்க் காத்திருக்கும்[SE][SS] காவலரைவிட,[SE][SS] என் நெஞ்சம் என் தலைவருக்காய்[SE][SS] ஆவலுடன் காத்திருக்கின்றது.[SE][QE]
7. [QS][SS] இஸ்ரயேலே![SE][SS] ஆண்டவரையே நம்பியிரு;[SE][SS] பேரன்பு ஆண்டவரிடமே உள்ளது;[SE][SS] மிகுதியான மீட்பு[SE][SS] அவரிடமே உண்டு.[SE][QE]
8. [QS][SS] எல்லாத் தீவினைகளினின்றும்[SE][SS] இஸ்ரயேலரை மீட்பவர் அவரே! [* மத் 1:21; தீத் 2:14.[QE]. ] [SE][PE]
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 130 / 150
உதவிக்காக மன்றாடல்
(சீயோன்மலைத் திருப்பயணப் பாடல்)

1 ஆண்டவரே! ஆழ்ந்த துயரத்தில் இருக்கும் நான் உம்மை நோக்கி மன்றாடுகிறேன்; 2 ஆண்டவரே! என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும்; என் விண்ணப்பக் குரலை உம்முடைய செவிகள் கவனத்துடன் கேட்கட்டும். 3 ஆண்டவரே! நீர் எம் குற்றங்களை மனத்தில் கொண்டிருந்தால், யார்தான் நிலைத்து நிற்க முடியும்? 4 நீரோ மன்னிப்பு அளிப்பவர்; மனிதரும் உமக்கு அஞ்சி நடப்பர். 5 ஆண்டவருக்காக ஆவலுடன் நான் காத்திருக்கின்றேன்; என் நெஞ்சம் காத்திருக்கின்றது; அவரது சொற்களுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றேன். 6 விடியலுக்காய்க் காத்திருக்கும் காவலரைவிட, ஆம், விடியலுக்காய்க் காத்திருக்கும் காவலரைவிட, என் நெஞ்சம் என் தலைவருக்காய் ஆவலுடன் காத்திருக்கின்றது. 7 இஸ்ரயேலே! ஆண்டவரையே நம்பியிரு; பேரன்பு ஆண்டவரிடமே உள்ளது; மிகுதியான மீட்பு அவரிடமே உண்டு. 8 எல்லாத் தீவினைகளினின்றும் இஸ்ரயேலரை மீட்பவர் அவரே! [* மத் 1:21; தீத் 2:14.. ]
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 130 / 150
×

Alert

×

Tamil Letters Keypad References