தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
சங்கீதம்
1. {இஸ்ரயேலின் எதிரிகளை முன்னிட்டு மன்றாடியது[BR](சீயோன்மலைத் திருப்பயணப் பாடல்)} [PS] [QS][SS] ‟என் இளமை முதற்கொண்டே[SE][SS] என்னைப் பெரிதும்[SE][SS] துன்புறுத்தினார்கள்” –[SE][SS] இஸ்ரயேல் மக்கள் சொல்வார்களாக![SE][QE]
2. [QS][SS] ‟என் இளமை முதற்கொண்டே[SE][SS] என்னைப் பெரிதும்[SE][SS] துன்புறுத்தினார்கள்;[SE][SS] எனினும், அவர்கள்[SE][SS] என்மீது வெற்றி பெறவில்லை.[SE][QE]
3. [QS][SS] உழவர் என் முதுகின்மீது உழுது[SE][SS] நீண்ட படைச்சால்களை உண்டாக்கினர்.”[SE][QE]
4. [QS][SS] ஆண்டவர் நீதியுள்ளவர்; எனவே,[SE][SS] பொல்லார் கட்டிய கயிறுகளை[SE][SS] அவர் அறுத்தெறிந்தார்.[SE][QE]
5. [QS][SS] சீயோனைப் பகைக்கும் அனைவரும்[SE][SS] அவமானப்பட்டுப் புறமுதுகிடுவராக![SE][QE]
6. [QS][SS] கூரைமேல் முளைக்கும் புல்லுக்கு[SE][SS] அவர்கள் ஒப்பாவார்கள்;[SE][SS] வளருமுன் அது உலர்ந்துபோகும்.[SE][QE]
7. [QS][SS] அதை அறுப்போரின் கைக்கு,[SE][SS] ஒரு பிடி கூடக் கிடைக்காது;[SE][SS] அரிகளைச் சேர்த்தால்[SE][SS] ஒரு சுமைகூடத் தேறாது.[SE][QE]
8. [QS][SS] வழிப்போக்கரும் அவர்களைப் பார்த்து,[SE][SS] ‛ஆண்டவர் உங்களுக்கு ஆசி[SE][SS] வழங்குவாராக!’ என்றோ[SE][SS] ‛ஆண்டவரின் பெயரால்[SE][SS] ஆசி வழங்குகிறோம்’ என்றோ சொல்லார்.[SE][PE][QE]
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 129 / 150
இஸ்ரயேலின் எதிரிகளை முன்னிட்டு மன்றாடியது
(சீயோன்மலைத் திருப்பயணப் பாடல்)

1 ‟என் இளமை முதற்கொண்டே என்னைப் பெரிதும் துன்புறுத்தினார்கள்” – இஸ்ரயேல் மக்கள் சொல்வார்களாக! 2 ‟என் இளமை முதற்கொண்டே என்னைப் பெரிதும் துன்புறுத்தினார்கள்; எனினும், அவர்கள் என்மீது வெற்றி பெறவில்லை. 3 உழவர் என் முதுகின்மீது உழுது நீண்ட படைச்சால்களை உண்டாக்கினர்.” 4 ஆண்டவர் நீதியுள்ளவர்; எனவே, பொல்லார் கட்டிய கயிறுகளை அவர் அறுத்தெறிந்தார். 5 சீயோனைப் பகைக்கும் அனைவரும் அவமானப்பட்டுப் புறமுதுகிடுவராக! 6 கூரைமேல் முளைக்கும் புல்லுக்கு அவர்கள் ஒப்பாவார்கள்; வளருமுன் அது உலர்ந்துபோகும். 7 அதை அறுப்போரின் கைக்கு, ஒரு பிடி கூடக் கிடைக்காது; அரிகளைச் சேர்த்தால் ஒரு சுமைகூடத் தேறாது. 8 வழிப்போக்கரும் அவர்களைப் பார்த்து, ‛ஆண்டவர் உங்களுக்கு ஆசி வழங்குவாராக!’ என்றோ ‛ஆண்டவரின் பெயரால் ஆசி வழங்குகிறோம்’ என்றோ சொல்லார்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 129 / 150
×

Alert

×

Tamil Letters Keypad References