தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
சங்கீதம்
1. {எருசலேமே நீ வாழி![BR](சீயோன்மலைத் திருப்பயணப் பாடல்; தாவீதுக்கு உரியது)} [PS] [QS][SS] “ஆண்டவரது இல்லத்திற்குப்[SE][SS] போவோம்”, என்ற அழைப்பை[SE][SS] நான் கேட்டபோது அகமகிழ்ந்தேன்.[SE][QE]
2. [QS][SS] எருசலேமே! இதோ,[SE][SS] நாங்கள் அடியெடுத்து வைத்து[SE][SS] உன் வாயில்களில் நிற்கின்றோம்.[SE][QE]
3. [QS][SS] எருசலேம் செம்மையாக[SE][SS] ஒன்றிணைத்துக்கட்டப்பட்ட நகர் ஆகும்.[SE][QE]
4. [QS][SS] ஆண்டவரின் திருக்குலத்தார்[SE][SS] அங்கே செல்கின்றனர்;[SE][SS] இஸ்ரயேல் மக்களுக்கு இட்ட[SE][SS] கட்டளைக்களுக்கிணங்க[SE][SS] ஆண்டவரது பெயருக்கு அவர்கள்[SE][SS] நன்றி செலுத்தச் செல்வார்கள்.[SE][QE]
5. [QS][SS] அங்கே நீதி வழங்க[SE][SS] அரியணைகள் இருக்கின்றன.[SE][SS] அவை தாவீது வீட்டாரின் அரியணைகள்.[SE][QE]
6. [QS][SS] எருசலேமில்[SE][SS] சமாதானம் நிலைத்திருக்கும்படி[SE][SS] வேண்டிக்கொள்ளுங்கள்;[SE][SS] “உன்னை விரும்புவோர்[SE][SS] வளமுடன் வாழ்வார்களாக![SE][QE]
7. [QS][SS] உன் கோட்டைகளுக்குள்[SE][SS] அமைதி நிலவுவதாக![SE][SS] உம் மாளிகைகளில்[SE][SS] நல்வாழ்வு இருப்பதாக![SE][QE]
8. [QS][SS] உன்னுள் சமாதானம் நிலவுவதாக!” என்று[SE][SS] நான் என் சகோதரர் சார்பிலும்[SE][SS] என் நண்பர் சார்பிலும்[SE][SS] உன்னை வாழ்த்துகின்றேன்.[SE][QE]
9. [QS][SS] நம் கடவுளாகிய ஆண்டவரின் இல்லம்[SE][SS] இங்கே இருப்பதால், உன்னில்[SE][SS] நலம் பெருகும்படி நான் மன்றாடுவேன்.[SE][PE][QE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 122 / 150
சங்கீதம் 122:118
எருசலேமே நீ வாழி!
(சீயோன்மலைத் திருப்பயணப் பாடல்; தாவீதுக்கு உரியது)

1 “ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்”, என்ற அழைப்பை நான் கேட்டபோது அகமகிழ்ந்தேன். 2 எருசலேமே! இதோ, நாங்கள் அடியெடுத்து வைத்து உன் வாயில்களில் நிற்கின்றோம். 3 எருசலேம் செம்மையாக ஒன்றிணைத்துக்கட்டப்பட்ட நகர் ஆகும். 4 ஆண்டவரின் திருக்குலத்தார் அங்கே செல்கின்றனர்; இஸ்ரயேல் மக்களுக்கு இட்ட கட்டளைக்களுக்கிணங்க ஆண்டவரது பெயருக்கு அவர்கள் நன்றி செலுத்தச் செல்வார்கள். 5 அங்கே நீதி வழங்க அரியணைகள் இருக்கின்றன. அவை தாவீது வீட்டாரின் அரியணைகள். 6 எருசலேமில் சமாதானம் நிலைத்திருக்கும்படி வேண்டிக்கொள்ளுங்கள்; “உன்னை விரும்புவோர் வளமுடன் வாழ்வார்களாக! 7 உன் கோட்டைகளுக்குள் அமைதி நிலவுவதாக! உம் மாளிகைகளில் நல்வாழ்வு இருப்பதாக! 8 உன்னுள் சமாதானம் நிலவுவதாக!” என்று நான் என் சகோதரர் சார்பிலும் என் நண்பர் சார்பிலும் உன்னை வாழ்த்துகின்றேன். 9 நம் கடவுளாகிய ஆண்டவரின் இல்லம் இங்கே இருப்பதால், உன்னில் நலம் பெருகும்படி நான் மன்றாடுவேன்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 122 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References