1. ஆண்டவரே, காத்தருளும்; ஏனெனில் உலகில் இறையன்பர்கள் அற்றுப் போயினர்; மானிடருள் மெய்யடியார் மறைந்து போயினர்.
|
3. தேனொழுகப் பேசும் எல்லா உதடுகளையும் ஆண்டவரே, துண்டித்துவிடுவாராக! பெருமையடித்துக் கொள்ளும் நாவை அறுத்துவிடுவீராக!
|
4. 'எங்கள் நாவன்மை எங்கள் வலிமை; எங்கள் பேச்சுத்திறனே எங்கள் பக்கத் துணை; எங்களுக்குத் தலைவர் வேறு யார்?' என்று சொல்பவரை ஒழித்துவிடுவீராக!
|
5. 'எளியோரின் புலம்பலையும் வறியோரின் பெருமூச்சையும் கேட்டு இப்பொழுதே எழுந்து வருகின்றேன்;; அவர்கள் ஏங்குகின்றபடி அவர்களைப் பாதுகாப்பில் வைப்பேன்' என்கின்றார் ஆண்டவர்.
|
6. ஆண்டவரின் வாக்குறுதிகள் கலப்பற்ற வாக்குறுதிகள்; மண் உலையில் தூய்மையாக்கப்பட்ட வெள்ளி போன்றவை; ஏழுமுறை புடமிடப்பட்டவை.
|