1. {உதவிக்காக மன்றாடல்[BR](பாடகர் தலைவர்க்கு: எட்டாம் கட்டையில்; தாவீதின் புகழ்ப்பா)} [PS] [QS][SS] ஆண்டவரே, காத்தருளும்;[SE][SS] ஏனெனில் உலகில்[SE][SS] இறையன்பர்கள் அற்றுப் போயினர்;[SE][SS] மானிடருள் மெய்யடியார் மறைந்து போயினர்.[SE][QE]
2. [QS][SS] ஒருவர் அடுத்திருப்பாரிடம்[SE][SS] பொய் பேசுகின்றனர்;[SE][SS] தேனொழுகும் இதழால்[SE][SS] இருமனத்தோடு பேசுகின்றனர்.[SE][QE]
3. [QS][SS] தேனொழுகப் பேசும் எல்லா உதடுகளையும்[SE][SS] ஆண்டவரே, துண்டித்துவிடுவீராக![SE][SS] பெருமையடித்துக் கொள்ளும் நாவை[SE][SS] அறுத்துவிடுவீராக![SE][QE]
4. [QS][SS] ‛எங்கள் நாவன்மை எங்கள் வலிமை;[SE][SS] எங்கள் பேச்சுத்திறனே[SE][SS] எங்கள் பக்கத் துணை;[SE][SS] எங்களுக்குத் தலைவர் வேறு யார்?’[SE][SS] என்று சொல்பவரை ஒழித்துவிடுவீராக![SE][QE]
5. [QS][SS] ‛எளியோரின் புலம்பலையும்[SE][SS] வறியோரின் பெருமூச்சையும் கேட்டு[SE][SS] இப்பொழுதே எழுந்து வருகின்றேன்;[SE][SS] அவர்கள் ஏங்குகின்றபடி[SE][SS] *அவர்களைப் பாதுகாப்பில் வைப்பேன்*’[SE][SS] என்கின்றார் ஆண்டவர். [* *…* ‘அவன் அவர்கள் மீது சீறுகின்றான்’ என்பது எபிரேய பாடம்.[QE]. ] [SE][QE]
6. [QS][SS] ஆண்டவரின் வாக்குறுதிகள்[SE][SS] கலப்பற்ற வாக்குறுதிகள்;[SE][SS] மண் உலையில் தூய்மையாக்கப்பட்ட[SE][SS] வெள்ளி போன்றவை;[SE][SS] ஏழுமுறை புடமிடப்பட்டவை.[SE][QE]
7. [QS][SS] ஆண்டவரே, நீர் எம்மைக் காத்தருளும்;[SE][SS] இத்தகைய தலைமுறையிடமிருந்து[SE][SS] எம்மை என்றும் காப்பாற்றும்.[SE][QE]
8. [QS][SS] பொல்லார் எம்மருங்கும்[SE][SS] உலாவருகின்றனர்; மானிடரிடையே[SE][SS] பொல்லாப்பே ஓங்கி நிற்கின்றது.[SE][PE]