1. {ஆண்டவரின் திருச்சட்டம்} [PS] [QS][SS] மாசற்ற வழியில் நடப்போர்[SE][SS] பேறுபெற்றோர்;[SE][SS] ஆண்டவர் திருச்சட்டப்படி[SE][SS] நடப்போர் பேறுபெற்றோர்.[SE][QE]
2. [QS][SS] அவர் தந்த ஒழுங்குமுறைகளைக்[SE][SS] கடைப்பிடிப்போர் பேறுபெற்றோர்;[SE][SS] முழுமனத்தோடு அவரைத் தேடுவோர்[SE][SS] பேறுபெற்றோர்.[SE][QE]
3. [QS][SS] அநீதி செய்யாமல் அவரது வழியில்[SE][SS] நடப்போர் பேறுபெற்றோர்.[SE][QE]
4. [QS][SS] ஆண்டவரே![SE][SS] நீர் உம் நியமங்களைத் தந்தீர்;[SE][SS] அவற்றை நாங்கள் முழுமையாய்க்[SE][SS] கடைப்பிடிக்க வேண்டும் என்றீர்.[SE][QE]
5. [QS][SS] உம்முடைய விதிமுறைகளை[SE][SS] நான் கடைப்பிடிக்க,[SE][SS] என் நடத்தை உறுதியுள்ளதாய் இருந்தால்[SE][SS] எவ்வளவோ நலம்![SE][QE]
6. [QS][SS] உம் கட்டளைகளை எல்லாம்[SE][SS] கருத்தில் கொண்டிருந்தால்,[SE][SS] இகழ்ச்சியுறேன்;[SE][QE]
7. [QS][SS] உம் நீதிநெறிகளை நான் கற்றுக்கொண்டு[SE][SS] நேரிய உள்ளத்தோடு உம்மைப் புகழ்வேன்.[SE][QE]
8. [QS][SS] உம் விதிமுறைகளை[SE][SS] நான் கடைப்பிடிப்பேன்;[SE][SS] என்னை ஒருபோதும்[SE][SS] கைவிட்டுவிடாதேயும்.[SE][PE][QE]
9. {திருச்சட்டப்படி நடத்தல்} [PS] [QS][SS] இளைஞர் தம் நடத்தையை[SE][SS] மாசற்றதாய்க் காத்துக் கொள்வது[SE][SS] எவ்வாறு? உம் வாக்கைக்[SE][SS] கடைப்பிடிப்பதால் அன்றோ?[SE][QE]
10. [QS][SS] முழுமனத்தோடு[SE][SS] நான் உம்மைத் தேடுகின்றேன்;[SE][SS] உம் கட்டளைகளைவிட்டு[SE][SS] என்னை விலகவிடாதேயும்.[SE][QE]
11. [QS][SS] உமக்கெதிராய்[SE][SS] நான் பாவம் செய்யாதவாறு[SE][SS] உமது வாக்கை[SE][SS] என் இதயத்தில் இருத்தியுள்ளேன்.[SE][QE]
12. [QS][SS] ஆண்டவரே, நீர் போற்றுதற்கு உரியவர்;[SE][SS] எனக்கு உம் விதிமுறைகளைக்[SE][SS] கற்பித்தருளும்.[SE][QE]
13. [QS][SS] உம் வாயினின்று வரும்[SE][SS] நீதித்தீர்ப்புகளை எல்லாம்[SE][SS] என் இதழால் எடுத்துரைக்கின்றேன்.[SE][QE]
14. [QS][SS] பெருஞ்செல்வத்தில்[SE][SS] மகிழ்ச்சி அடைவதுபோல்,[SE][SS] நான் உம் ஒழுங்குமுறைகளின்படி[SE][SS] நடப்பதில் மகிழ்ச்சியுறுகின்றேன்.[SE][QE]
15. [QS][SS] உம் நியமங்களைக் குறித்து[SE][SS] நான் சிந்திப்பேன்;[SE][SS] உம் நெறிகளில்[SE][SS] என் சிந்தையைச் செலுத்துவேன்;[SE][QE]
16. [QS][SS] உம் விதிமுறைகளில்[SE][SS] நான் மகிழ்ச்சியுறுகின்றேன்;[SE][SS] உம் வாக்குகளை நான் மறக்கமாட்டேன்.[SE][PE][QE]
17. {திருச்சட்டம் தரும் இன்பம்} [PS] [QS][SS] உம் அடியானுக்கு நன்மை செய்யும்;[SE][SS] அப்பொழுது, நான் உம் சொற்களைக்[SE][SS] கடைப்பிடித்து வாழ்வேன்.[SE][QE]
18. [QS][SS] உம் திருச்சட்டத்தில் வியப்பானவற்றை[SE][SS] நான் கண்டுணருமாறு[SE][SS] என் கண்களைத் திறந்தருளும்.[SE][QE]
19. [QS][SS] இவ்வுலகில் நான்[SE][SS] அன்னியனாய் உள்ளேன்;[SE][SS] உம் கட்டளைகளை[SE][SS] என்னிடமிருந்து மறைக்காதேயும்.[SE][QE]
20. [QS][SS] எந்நேரமும்[SE][SS] உம் நீதிநெறிகளை முன்னிட்டு[SE][SS] என் உள்ளம் ஏங்கி உருகுகின்றது.[SE][QE]
21. [QS][SS] செருக்குற்றோரைக் கண்டிக்கின்றிர்;[SE][SS] உம் கட்டளைகளைப் புறக்கணிப்போர்[SE][SS] சபிக்கப்பட்டவரே.[SE][QE]
22. [QS][SS] பழிச்சொல்லையும், இழிவையும்[SE][SS] என்னிடமிருந்து அகற்றியருளும்;[SE][SS] ஏனெனில், உம் ஒழுங்குமுறைகளை[SE][SS] நான் கடைப்பிடித்துள்ளேன்.[SE][QE]
23. [QS][SS] தலைவர்கள் ஒன்றுகூடி[SE][SS] எனக்கெதிராய்ச் சூழ்ச்சி செய்தாலும்,[SE][SS] உம் ஊழியன்[SE][SS] உம்முடைய விதிமுறைகளைக் குறித்தே[SE][SS] சிந்திக்கின்றேன்.[SE][QE]
24. [QS][SS] ஏனெனில், உம் ஒழுங்குமுறைகள்[SE][SS] எனக்கு இன்பம் தருகின்றன;[SE][SS] அவையே எனக்கு அறிவுரையாளர்.[SE][PE][QE]
25. {திருச்சட்டத்தின்படி நடக்க உறுதி கொள்ளல்} [PS] [QS][SS] நான் புழுதியில் வீழ்ந்து கிடக்கின்றேன்;[SE][SS] உம் வாக்கின்படி[SE][SS] எனக்கு வாழ்வளித்தருளும்.[SE][QE]
26. [QS][SS] என் வழிமுறைகளை[SE][SS] உமக்கு எடுத்துச் சொன்னேன்;[SE][SS] நீர் என் மன்றாட்டைக் கேட்டருளினீர்;[SE][SS] உம் விதிமுறைகளை[SE][SS] எனக்குக் கற்றுத்தாரும்.[SE][QE]
27. [QS][SS] உம் நியமங்கள் காட்டும் வழியை[SE][SS] என்றும் உணர்த்தியருளும்;[SE][SS] உம் வியத்தகு செயல்கள்பற்றி[SE][SS] நான் சிந்தனை செய்வேன்.[SE][QE]
28. [QS][SS] துயரத்தால் என் உள்ளம்[SE][SS] கலக்கமுற்றுள்ளது;[SE][SS] உமது வாக்கின்படி[SE][SS] என்னைத் திடப்படுத்தும்.[SE][QE]
29. [QS][SS] பொய் வழியை[SE][SS] என்னைவிட்டு விலக்கியருளும்;[SE][SS] உமது திருச்சட்டத்தை[SE][SS] எனக்குக் கற்றுத்தாரும்.[SE][QE]
30. [QS][SS] உண்மையின் பாதையை[SE][SS] நான் தேர்ந்துகோண்டேன்;[SE][SS] உம் நீதிநெறிகளை[SE][SS] என் கண்முன் நிறுத்தியுள்ளேன்.[SE][QE]
31. [QS][SS] உம் ஒழுங்குமுறைகளை நான்[SE][SS] உறுதியாய்ப் பற்றிக்கொண்டுள்ளேன்;[SE][SS] ஆண்டவரே![SE][SS] என்னை வெட்கமடையவிடாதேயும்.[SE][QE]
32. [QS][SS] நீர் என் அறிவை விரிவாக்கும்போது,[SE][SS] உம் கட்டளைகள் காட்டும் வழியில்[SE][SS] நான் விரைந்து செல்வேன்.[SE][PE][QE]
33. {நுண்ணறிவுக்காக வேண்டல்} [PS] [QS][SS] ஆண்டவரே! உம் விதிமுறைகள்[SE][SS] காட்டும் வழியை[SE][SS] எனக்குக் கற்றுத்தாரும்;[SE][SS] நான் அவற்றை[SE][SS] இறுதிவரை கடைப்பிடிப்பேன்.[SE][QE]
34. [QS][SS] உம் திருச்சட்டத்தின்படி நடக்க[SE][SS] எனக்கு மெய்யுணர்வுதாரும்.[SE][SS] அதை நான் முழு உள்ளத்தோடு[SE][SS] கடைப்பிடிப்பேன்.[SE][QE]
35. [QS][SS] உம் கட்டளைகள் காட்டும் நெறியில்[SE][SS] என்னை நடத்தும்; ஏனெனில்,[SE][SS] அதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்.[SE][QE]
36. [QS][SS] உம் ஒழுங்குமுறைகளில் என் இதயம்[SE][SS] நாட்டங்கொள்ளச் செய்யும்;[SE][SS] தன்னலத்தை நாடவிடாதேயும்.[SE][QE]
37. [QS][SS] வீணானவற்றை நான் பாராதபடி[SE][SS] என் கண்களைத் திருப்பிவிடும்;[SE][SS] உம் வழிகளின் வாயிலாய்[SE][SS] எனக்கு வாழ்வளித்தருளும்.[SE][QE]
38. [QS][SS] உமக்கு அஞ்சி நடப்போர்க்கு[SE][SS] அளித்த வாக்குறுதியை[SE][SS] உம் ஊழியனுக்கும் நிறைவேற்றியருளும்.[SE][QE]
39. [QS][SS] என்னை அச்சுறுத்தும்[SE][SS] பழிச்சொல் எதற்கும்[SE][SS] என்னை உள்ளாக்காதேயும்; ஏனெனில்,[SE][SS] உம் நீதிநெறிகள் நலமார்ந்தவை.[SE][QE]
40. [QS][SS] உம் நியமங்களைப்[SE][SS] பெரிதும் விரும்பினேன்;[SE][SS] நீர் நீதியுள்ளவராய் இருப்பதால்[SE][SS] எனக்கு வாழ்வளியும்.[SE][PE][QE]
41. {திருச்சட்டத்தின் மீது நம்பிக்கை} [PS] [QS][SS] ஆண்டவரே! உமது பேரன்பு[SE][SS] எனக்குக் கிடைக்கச் செய்யும்;[SE][SS] உமது வாக்குறுதியின்படி[SE][SS] நீர் என்னை மீட்பீராக![SE][QE]
42. [QS][SS] அப்போது, என்னைப் பழிப்போர்க்கு[SE][SS] நான் ஏற்ற பதில் கூறுவேன்;[SE][SS] ஏனெனில், உமது வாக்கில்[SE][SS] எனக்கு நம்பிக்கை உண்டு.[SE][QE]
43. [QS][SS] என் வாயினின்று உண்மையின் சொற்கள்[SE][SS] நீங்கவிடாதேயும்;[SE][SS] ஏனெனில், உம் நீதிநெறிகள்மீது[SE][SS] நான் நம்பிக்கை வைத்துள்ளேன்.[SE][QE]
44. [QS][SS] உமது திருச்சட்டத்தை[SE][SS] நான் எப்போதும் கடைப்பிடிப்பேன்;[SE][SS] என்றென்றும் எக்காலமும்[SE][SS] அதைப் பின்பற்றுவேன்.[SE][QE]
45. [QS][SS] உம் நியமங்களை நான் நாடியுள்ளதால்[SE][SS] பரந்த பாதையில்[SE][SS] தடையின்றி நான் நடப்பேன்.[SE][QE]
46. [QS][SS] உம் ஒழுங்குமுறைகளைப் பற்றி[SE][SS] நான் அரசர் முன்னிலையிலும் பேசுவேன்;[SE][SS] வெட்கமுறமாட்டேன்.[SE][QE]
47. [QS][SS] உம் கட்டளைகளில் நான்[SE][SS] மகிழ்ச்சியுறுகின்றேன்;[SE][SS] அவற்றைப் பெரிதும் விரும்புகின்றேன்.[SE][QE]
48. [QS][SS] நான் விரும்பும் உம் கட்டளைகளை நோக்கி[SE][SS] என் கைகளை உயர்த்துகின்றேன்;[SE][SS] உம் விதிமுறைகளைப் பற்றி[SE][SS] நான் சிந்திப்பேன்.[SE][PE][QE]
49. {திருச்சட்டத்தின் மீது நம்பிக்கை} [PS] [QS][SS] உம் ஊழியனுக்கு நீர் தந்த[SE][SS] வாக்கை நினைவுகூரும்;[SE][SS] அதனால் எனக்கு நம்பிக்கை அளித்தீர்.[SE][QE]
50. [QS][SS] உம் வாக்கு என் துன்பத்தில்[SE][SS] எனக்கு ஆறுதல் அளிக்கின்றது;[SE][SS] ஏனெனில், அது எனக்கு[SE][SS] வாழ்வளிக்கின்றது.[SE][QE]
51. [QS][SS] செருக்குற்றோர் என்னை[SE][SS] அளவின்றி ஏளனம் செய்கின்றனர்;[SE][SS] ஆனால், உம் திருச்சட்டத்தினின்று[SE][SS] நான் விலகவில்லை.[SE][QE]
52. [QS][SS] ஆண்டவரே! முற்காலத்தில் நீர் அளித்த[SE][SS] நீதித் தீர்ப்புகளை[SE][SS] நான் நினைவு கூர்கின்றேன்;[SE][SS] அவற்றால் நான் ஆறுதல் அடைகின்றேன்.[SE][QE]
53. [QS][SS] உம் திருச்சட்டத்தைக் கைவிடும்[SE][SS] தீயோரைப் பார்க்கும்போது[SE][SS] சீற்றம் என்னைக் கவ்விக்கொள்கின்றது.[SE][QE]
54. [QS][SS] என் வாழ்க்கைப் பயணத்தில்[SE][SS] உம் விதிமுறைகள் எனக்குப்[SE][SS] புகழ்ப் பாக்களாய் உள்ளன.[SE][QE]
55. [QS][SS] ஆண்டவரே! இரவிலும் நான்[SE][SS] உமது பெயரை நினைவு கூர்கின்றேன்;[SE][SS] உமது திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்பேன்.[SE][QE]
56. [QS][SS] நான் இந்நிலையை அடைந்துள்ளது[SE][SS] உமது நியமங்களைக்[SE][SS] கடைப்பிடிப்பதால்தான்.[SE][PE][QE]
57. {திருச்சட்டத்தின் மீது ஆர்வம்} [PS] [QS][SS] ஆண்டவரே! நீரே எனக்குரிய பங்கு;[SE][SS] உம் சொற்களைக் கடைப்பிடிப்பதாக[SE][SS] நான் வாக்களித்துள்ளேன்.[SE][QE]
58. [QS][SS] என் முழுமனத்தோடு[SE][SS] உம் திருமுகத்தை நாடினேன்;[SE][SS] உமது வாக்குறுதிக்கேற்ப எனக்கு[SE][SS] அருள்கூரும்.[SE][QE]
59. [QS][SS] நான் நடக்கும் வழிகளை[SE][SS] நன்கு ஆய்ந்தேன்;[SE][SS] உம் ஒழுங்குமுறைகளின் பக்கமாய்[SE][SS] அடியெடுத்து வைத்தேன்.[SE][QE]
60. [QS][SS] உம் கட்டளைகளைக் கடைப்பிடிக்க[SE][SS] நான் விரைகின்றேன்;[SE][SS] காலம் தாழ்த்தவில்லை.[SE][QE]
61. [QS][SS] தீயோரின் கட்டுகள்[SE][SS] என்னை இறுக்குகின்றன;[SE][SS] ஆயினும், உம் திருச்சட்டத்தை[SE][SS] நான் மறவேன்.[SE][QE]
62. [QS][SS] நீதிநிறை உம் தீர்ப்புகளைக் குறித்து,[SE][SS] உம்மைப் புகழ்ந்துபாட[SE][SS] நள்ளிரவில் எழுகின்றேன்.[SE][QE]
63. [QS][SS] உமக்கு அஞ்சி நடப்போர் யாவர்க்கும்[SE][SS] உம் நியமங்களைக்[SE][SS] கடைப்பிடிப்போர்க்கும் நான் நண்பன்.[SE][QE]
64. [QS][SS] ஆண்டவரே! உமது பேரன்பால்[SE][SS] பூவுலகு நிறைந்துள்ளது;[SE][SS] உம் விதிமுறைகளை[SE][SS] எனக்குக் கற்பியும்![SE][PE][QE]
65. {திருச்சட்டத்தின் பயன்} [PS] [QS][SS] ஆண்டவரே![SE][SS] உமது வாக்குறுதிக்கேற்ப,[SE][SS] உம் ஊழியனுக்கு[SE][SS] நன்மையை செய்துள்ளீர்![SE][QE]
66. [QS][SS] நன் மதியையும் அறிவாற்றலையும்[SE][SS] எனக்குப் புகட்டும்;[SE][SS] ஏனெனில், உம் கட்டளைகள் மீது[SE][SS] நம்பிக்கை வைக்கின்றேன்.[SE][QE]
67. [QS][SS] நீர் என்னைத் தண்டிக்குமுன்பு[SE][SS] நான் தவறிழைத்தேன்;[SE][SS] ஆனால், இப்போது[SE][SS] உம் வாக்கைக் கடைப்பிடிக்கின்றேன்.[SE][QE]
68. [QS][SS] நீர் நல்லவர்! நன்மையே செய்பவர்;[SE][SS] எனக்கு உம் விதிமுறைகளைக் கற்பியும்.[SE][QE]
69. [QS][SS] செருக்குற்றோர் என்னைப்பற்றிப்[SE][SS] பொய்களைப் புனைகின்றார்கள்;[SE][SS] நானோ முழுமனத்துடன்[SE][SS] உம் நியமங்களைக்[SE][SS] கடைப்பிடிக்கின்றேன்.[SE][QE]
70. [QS][SS] அவர்கள் இதயம்[SE][SS] கொழுப்பேறிப் போயிற்று.[SE][SS] நானோ உம் திருச்சட்டத்தில்[SE][SS] மகிழ்ச்சியுறுகின்றேன்.[SE][QE]
71. [QS][SS] எனக்குத் துன்பம் விளைந்தது[SE][SS] என் நன்மைக்காகவே;[SE][SS] அதனால், உம் விதிமுறைகளை[SE][SS] நான் கற்றுக்கொண்டேன்.[SE][QE]
72. [QS][SS] நீர் திருவாய் மலர்ந்த சட்டம்,[SE][SS] ஆயிரக்கணக்கான பொன்,[SE][SS] வெள்ளிக் காசுகளைவிட[SE][SS] எனக்கு மேலானது.[SE][PE][QE]
73. {திருச்சட்டத்தின் ஒழுங்குமுறை} [PS] [QS][SS] உம் கைகளே என்னை உருவாக்கின;[SE][SS] என்னை வடிவமைத்தன;[SE][SS] உம் கட்டளைகளை நான் கற்றுக்கொள்ள[SE][SS] எனக்கு மெய்யுணர்வு தாரும்.[SE][QE]
74. [QS][SS] உமக்கு அஞ்சுவோர்,[SE][SS] உமது வாக்கை நான் நம்பினதற்காக[SE][SS] என்னைக் கண்டு மகிழ்ச்சியுறுவர்.[SE][QE]
75. [QS][SS] ஆண்டவரே! உம் நீதித்தீர்ப்புகள்[SE][SS] நேரியவை என அறிவேன்;[SE][SS] நீர் என்னைச் சிறுமைப்படுத்தியது சரியே.[SE][QE]
76. [QS][SS] எனக்கு ஆறுதலளிக்குமாறு[SE][SS] உமது பேரன்பு எனக்குக் கிடைக்கட்டும்;[SE][SS] உம் ஊழியனுக்கு[SE][SS] வாக்குறுதி அளித்தீர் அன்றோ![SE][QE]
77. [QS][SS] நான் பிழைத்திருக்கும்படி[SE][SS] உமது இரக்கம் என்னை வந்தடையட்டும்;[SE][SS] ஏனெனில், உமது திருச்சட்டமே[SE][SS] எனக்கு இன்பம்.[SE][QE]
78. [QS][SS] செருக்குற்றோர் வெட்கிப்போவார்களாக![SE][SS] அவர்கள் பொய்யுரை கூறி[SE][SS] என்னை ஒடுக்கினார்கள்;[SE][SS] நானோ உம் நியமங்கள் பற்றிச்[SE][SS] சிந்தனை செய்வேன்.[SE][QE]
79. [QS][SS] உமக்கு அஞ்சிநடப்போர்,[SE][SS] உம் ஒழுங்குமுறைகளைப்பற்றிய[SE][SS] அறிவுடையோர்[SE][SS] என் பக்கம் திரும்புவராக![SE][QE]
80. [QS][SS] உம் நியமங்களைப் பொறுத்த மட்டில்[SE][SS] என் உள்ளம் மாசற்றதாய் இருப்பதாக![SE][SS] அதனால், நான் வெட்கமுறேன்.[SE][PE][QE]
81. {விடுதலைக்காக மன்றாடல்} [PS] [QS][SS] நீர் அளிக்கும் மீட்புக்காக[SE][SS] என் நெஞ்சம் ஏங்குகின்றது;[SE][SS] உம் வாக்கை நான் நம்புகின்றேன்.[SE][QE]
82. [QS][SS] உம் வாக்குறுதியை எதிர்நோக்கி[SE][SS] என் கண்கள் பூத்துப்போயின;[SE][SS] ‘எப்போது எனக்கு ஆறுதல் தருவீர்?’[SE][SS] என்று வினவினேன்.[SE][QE]
83. [QS][SS] புகைபடிந்த தோற்பைபோல் ஆனேன்;[SE][SS] உம் விதிமுறைகளை நான் மறக்கவில்லை.[SE][QE]
84. [QS][SS] உம் ஊழியன் எத்தனை நாள்[SE][SS] காத்திருக்கவேண்டும்?[SE][SS] என்னைக் கொடுமைப்படுத்துவோரை[SE][SS] என்று தண்டிப்பீர்?[SE][QE]
85. [QS][SS] உமது திருச்சட்டப்படி நடக்காமல்,[SE][SS] செருக்குற்றோர் எனக்குக் குழிவெட்டினர்;[SE][QE]
86. [QS][SS] உம் கட்டளைகள் எல்லாம்[SE][SS] நம்பத்தக்கவை; [BR] அவர்கள் பொய்யுரை கூறி[SE][SS] என்னை ஒடுக்குகின்றனர்;[SE][SS] எனக்குத் துணை செய்யும்.[SE][QE]
87. [QS][SS] அவர்கள் பூவுலகினின்று என் வாழ்வை[SE][SS] ஏறக்குறைய அழித்துவிட்டனர்;[SE][SS] நானோ உம் நியமங்களைக்[SE][SS] கைவிடவில்லை.[SE][QE]
88. [QS][SS] உமது பேரன்புக்கேற்ப[SE][SS] என்னை உயிரோடு வைத்திரும்,[SE][SS] நீர் திருவாய்மலர்ந்த ஒழுங்கு முறைகளை[SE][SS] நான் கடைப்பிடிப்பேன்.[SE][PE][QE]
89. {திருச்சட்டத்தின் மீது நம்பிக்கை} [PS] [QS][SS] ஆண்டவரே! என்றென்றைக்கும் உள்ளது[SE][SS] உமது வாக்கு;[SE][SS] விண்ணுலகைப்போல்[SE][SS] அது நிலைத்துள்ளது.[SE][QE]
90. [QS][SS] தலைமுறை தலைமுறையாய் உள்ளது[SE][SS] உமது வாக்குப் பிறழாமை;[SE][SS] நீர் பூவுலகை உறுதியாய் இருக்கச் செய்தீர்,[SE][SS] அது நிலைபெற்றுள்ளது.[SE][QE]
91. [QS][SS] உம் ஒழுங்குமுறைகளின்படியே[SE][SS] அனைத்தும் இன்றுவரை[SE][SS] நிலைத்துள்ளன.[SE][SS] ஏனெனில், அவை[SE][SS] உமக்கு ஊழியம் செய்கின்றன.[SE][QE]
92. [QS][SS] உமது திருச்சட்டம் எனக்கு[SE][SS] இன்பம் தருவதாய் இல்லாதிருந்தால்[SE][SS] என் துன்பத்தில் நான்[SE][SS] மடிந்து போயிருப்பேன்.[SE][QE]
93. [QS][SS] உம் நியமங்களை நான்[SE][SS] எந்நாளும் மறவேன்;[SE][SS] ஏனெனில், அவற்றைக்கொண்டு[SE][SS] என்னைப் பிழைக்க வைத்தீர்.[SE][QE]
94. [QS][SS] உமக்கே நான் உரிமை;[SE][SS] என்னைக் காத்தருளும்;[SE][SS] ஏனெனில், உம் நியமங்களையே[SE][SS] நான் நாடியுள்ளேன்.[SE][QE]
95. [QS][SS] தீயோர் என்னை அழிக்கக்[SE][SS] காத்திருக்கின்றனர்;[SE][SS] நானோ உம் ஒழுங்குமுறைகளை[SE][SS] ஆழ்ந்து சிந்திக்கின்றேன்.[SE][QE]
96. [QS][SS] நிறைவான அனைத்தின் எல்லையையும்[SE][SS] நான் பார்த்துவிட்டேன்;[SE][SS] உமது கட்டளையின் நிறைவோ[SE][SS] எல்லை அற்றது.[SE][PE][QE]
97. {திருச்சட்டத்தின் மீது அன்பு} [PS] [QS][SS] ஆண்டவரே! நான்[SE][SS] உமது திருச்சட்டத்தின்மீது[SE][SS] எத்துணைப் பற்றுக் கொண்டுள்ளேன்![SE][SS] நாள் முழுவதும்[SE][SS] அதைப்பற்றியே சிந்திக்கின்றேன்.[SE][QE]
98. [QS][SS] என் எதிரிகளைவிட என்னை[SE][SS] ஞானியாக்கியது உமது கட்டளை;[SE][SS] ஏனெனில், என்றென்றும்[SE][SS] அது என்னோடு உள்ளது.[SE][QE]
99. [QS][SS] எனக்கு அறிவு புகட்டுவோர்[SE][SS] அனைவரினும் நான்[SE][SS] விவேகமுள்ளனவாய் இருக்கின்றேன்;[SE][SS] ஏனெனில், உம் ஒழுங்குமுறைகளையே[SE][SS] நான் சிந்திக்கின்றேன்;[SE][QE]
100. [QS][SS] முதியோர்களைவிட[SE][SS] நான் நுண்ணறிவு பெற்றுள்ளேன்.[SE][SS] ஏனெனில், உம் நியமங்களைக்[SE][SS] கடைப்பிடிக்கின்றேன்.[SE][QE]
101. [QS][SS] உம் வாக்கைக் கடைப்பிடிக்குமாறு[SE][SS] தீயவழி எதிலும் நான் கால் வைக்காது[SE][SS] பார்த்துக் கொள்கின்றேன்.[SE][QE]
102. [QS][SS] உம் நீதிநெறிகளைவிட்டு[SE][SS] நான் விலகவில்லை;[SE][SS] ஏனெனில், நீர்தாமே[SE][SS] எனக்குக் கற்றுத் தந்தீர்.[SE][QE]
103. [QS][SS] உம் சொற்கள் என் நாவுக்கு[SE][SS] எத்துணை இனிமையானவை![SE][SS] என் வாய்க்குத்[SE][SS] தேனினும் இனிமையானவை.[SE][QE]
104. [QS][SS] உம் நியமங்களால் நான்[SE][SS] நுண்ணறிவு பெறுகின்றேன்.[SE][SS] ஆகவேதான் பொய்வழிகள் அனைத்தையும்[SE][SS] நான் வெறுக்கின்றேன்.[SE][PE][QE]
105. {திருச்சட்டத்தின் ஒளி} [PS] [QS][SS] என் காலடிக்கு உம் வாக்கே விளக்கு![SE][SS] என் பாதைக்கு ஒளியும் அதுவே![SE][QE]
106. [QS][SS] நீதியான உம் நெறிமுறைகளை[SE][SS] நான் கடைப்பிடிப்பதாக ஆணையிட்டு[SE][SS] உறுதிமொழி தந்துள்ளேன்.[SE][QE]
107. [QS][SS] ஆண்டவரே! மிக மிகத்[SE][SS] துன்புறுத்தப்படுகின்றேன்;[SE][SS] உம் வாக்குறுதியின்படி[SE][SS] என்னை உயிரோடு வைத்தருளும்.[SE][QE]
108. [QS][SS] நான் மனமுவந்து வாயார[SE][SS] உம்மைப் புகழ்வதை ஆண்டவரே![SE][SS] தயைகூர்ந்து ஏற்றுக்கொள்ளும்;[SE][SS] உம் நீதிநெறிகளை எனக்குக் கற்பியும்.[SE][QE]
109. [QS][SS] நான் என்னுயிரைக்[SE][SS] கையில்வைத்துள்ளேன்;[SE][SS] ஆயினும், உம் திருச்சட்டத்தை[SE][SS] நான் மறவேன்.[SE][QE]
110. [QS][SS] தீயோர் எனக்குக் கண்ணிவைத்தனர்;[SE][SS] ஆனால், உம் நியமங்களினின்று[SE][SS] நான் பிறழவில்லை.[SE][QE]
111. [QS][SS] உம் ஒழுங்குமறைகளை என்றும்[SE][SS] என் உரிமைச் சொத்தாய்க்[SE][SS] கொண்டுள்ளேன்.[SE][SS] ஆகவே, அவை என் இதயத்தை[SE][SS] மகிழ்விக்கின்றன.[SE][QE]
112. [QS][SS] உம் விதிமுறைகளைச்[SE][SS] செயல்படுத்துவதில் என் உள்ளம்,[SE][SS] என்றென்றும், இறுதிவரை[SE][SS] நாட்டம் கொண்டிருக்கும்.[SE][PE][QE]
113. {திருச்சட்டம் தரும் பாதுகாப்பு} [PS] [QS][SS] இருமனத்தோரை நான் வெறுக்கின்றேன்;[SE][SS] உமது திருச்சட்டத்தின்மீது[SE][SS] பற்றுக்கொண்டுள்ளேன்.[SE][QE]
114. [QS][SS] நீரே என் புகலிடம்; நீரே என் கேடயம்;[SE][SS] உமது வாக்கில்[SE][SS] நான் நம்பிக்கை வைக்கின்றேன்.[SE][QE]
115. [QS][SS] தீயன செய்வோரே![SE][SS] என்னை விட்டு விலகுங்கள்;[SE][SS] என் கடவுளின் கட்டளைகளை[SE][SS] நான் கடைப்பிடிப்பேன்;[SE][QE]
116. [QS][SS] நான் பிழைக்குமாறு,[SE][SS] உமது வாக்குறுதிக்கேற்ப[SE][SS] என்னைத் தாங்கியருளும்;[SE][SS] எனது நம்பிக்கை[SE][SS] வீண்போகவிடாதேயும்.[SE][QE]
117. [QS][SS] என்னைத் தாங்கிக்கொள்ளும்;[SE][SS] நான் மீட்புப் பெறுவேன்;[SE][SS] எந்நாளும் உம் விதிமுறைகளைக்[SE][SS] கருத்தில் கொண்டிருப்பேன்.[SE][QE]
118. [QS][SS] உம் விதிமுறைகளைவிட்டு[SE][SS] விலகுவோர் அனைவரையும்[SE][SS] நீர் ஒதுக்கித் தள்ளுகின்றீர்;[SE][SS] அவர்களின் சூழ்ச்சிகள்[SE][SS] வீணாய்ப் போகும்.[SE][QE]
119. [QS][SS] பூவுலகின் பொல்லார் அனைவரையம்[SE][SS] நீர் களிம்பெனக் கருதுகின்றீர்;[SE][SS] ஆகவே, நான் உம் ஒழுங்குமுறைகள்[SE][SS] மீது பற்றுக்கொண்டுள்ளேன்.[SE][QE]
120. [QS][SS] உம்மீது கொண்டுள்ள அச்சத்தால்[SE][SS] என் உடல் சிலிர்க்கின்றது;[SE][SS] உம் நீதித்தீர்ப்புகளை முன்னிட்டு[SE][SS] நான் அஞ்சி நடுங்குகின்றேன்.[SE][PE][QE]
121. {திருச்சட்டத்தின்படி நடத்தல்} [PS] [QS][SS] நீதியும் நேர்மையும் ஆனவற்றையே[SE][SS] செய்துள்ளேன்;[SE][SS] என்னை ஒடுக்குவோர் கையில்[SE][SS] என்னை விட்டுவிடாதேயும்.[SE][QE]
122. [QS][SS] உம் ஊழியனின் நலத்தை[SE][SS] உறுதிப்படுத்தும்;[SE][SS] செருக்குற்றோர் என்னை[SE][SS] ஒடுக்கவிடாதேயும்.[SE][QE]
123. [QS][SS] நீர் தரும் விடுதலையையும்[SE][SS] உமது நீதியான[SE][SS] வாக்குறுதிகளையும் எதிர்பார்த்து,[SE][SS] என் கண்கள் பூத்துப்போயின.[SE][QE]
124. [QS][SS] உம் பேரன்பிற்கேற்ப[SE][SS] உம் ஊழியனுக்குச் செய்தருளும்;[SE][SS] உம் விதிமுறைகளை எனக்குக் கற்பியும்.[SE][QE]
125. [QS][SS] உம் ஊழியன் நான்,[SE][SS] எனக்கு நுண்ணறிவு புகட்டும்;[SE][SS] அப்போது உம் ஒழுங்குமுறைகளை[SE][SS] அறிந்துகொள்வேன்.[SE][QE]
126. [QS][SS] ஆண்டவரே! நீர் செயலாற்றும்[SE][SS] நேரம் வந்துவிட்டது;[SE][SS] உம் திருச்சட்டம் மீறப்பட்டுவிட்டது.[SE][QE]
127. [QS][SS] ஆகவே, பொன்னிலும்[SE][SS] பசும்பொன்னிலும் மேலாக[SE][SS] உம் கட்டளைகளை விரும்புகின்றேன்.[SE][QE]
128. [QS][SS] உம் நியமங்களை எல்லாம்[SE][SS] நீதியானவை என்று[SE][SS] ஏற்றுக்கொண்டேன்;[SE][SS] பொய்யான வழி அனைத்தையும்[SE][SS] வெறுக்கின்றேன்.[SE][PE][QE]
129. {திருச்சட்டத்தின் மீது ஆவல்} [PS] [QS][SS] உம் ஒழுங்குமுறைகள் வியப்புக்குரியவை;[SE][SS] ஆகவே, நான் அவற்றைக்[SE][SS] கடைப்பிடித்து வருகின்றேன்.[SE][QE]
130. [QS][SS] உம் சொற்களைப்பற்றிய விளக்கம்[SE][SS] ஒளி தருகின்றது;[SE][SS] அது பேதைகளுக்கு[SE][SS] நுண்ணறிவு ஊட்டுகிறது.[SE][QE]
131. [QS][SS] வாயை ‛ஆ’வெனத் திறக்கின்றேன்;[SE][SS] பெருமூச்சு விடுகின்றேன்;[SE][SS] ஏனெனில், உம் கட்டளைகளுக்காக[SE][SS] ஏங்குகின்றேன்.[SE][QE]
132. [QS][SS] உம் பெயரின்மீது பற்றுக்கொண்டோருக்கு[SE][SS] நீர் வழக்கமாய்ச் செய்வதுபோல்,[SE][SS] என் பக்கம் திரும்பி[SE][SS] எனக்கும் இரங்கும்![SE][QE]
133. [QS][SS] உமது வாக்கில் என் காலடிகளை[SE][SS] நிலைப்படுத்தும்![SE][SS] தீயது எதுவும் என்னை[SE][SS] மேற்கொள்ளவிடாதேயும்![SE][QE]
134. [QS][SS] மனிதர் செய்யும் கொடுமையினின்று[SE][SS] என்னை விடுவியும்![SE][SS] உம் நியமங்களை நான்[SE][SS] கடைப்பிடிப்பேன்.[SE][QE]
135. [QS][SS] உம் ஊழியன்மீது உமது முகஒளி[SE][SS] வீசச் செய்யும்![SE][SS] உம் விதிமுறைகளை எனக்குக்[SE][SS] கற்பித்தருளும்.[SE][QE]
136. [QS][SS] உமது திருச்சட்டத்தைப்[SE][SS] பலர் கடைப்பிடிக்காததைக் கண்டு,[SE][SS] என் கண்களினின்று நீர்[SE][SS] அருவியாய் வழிந்தது.[SE][PE][QE]
137. {திருச்சட்டத்தின் ஒழுங்குமுறை} [PS] [QS][SS] ஆண்டவரே! நீர் நீதி உள்ளவர்;[SE][SS] உம் நீதிநெறிகள் நேர்மையானவை.[SE][QE]
138. [QS][SS] நீர் தந்த ஒழுங்குமுறைகள் நீதியானவை;[SE][SS] அவை முற்றிலும் நம்பத்தக்கவை.[SE][QE]
139. [QS][SS] என் பகைவர் உம் வார்த்தைகளை[SE][SS] மறந்துவிட்டதால்,[SE][SS] அவற்றின்மீது நான் கொண்டுள்ள[SE][SS] தணியாத ஆர்வம்[SE][SS] என்னை எரித்துவிடுகின்றது.[SE][QE]
140. [QS][SS] உம் வாக்குறுதி முற்றிலும் சரியென மெய்ப்பிக்கப்பட்டுள்ளது,[SE][SS] உம் ஊழியன் அதன்மீது[SE][SS] பற்றுக்கொண்டுள்ளான்.[SE][QE]
141. [QS][SS] சிறியன் அடியேன்![SE][SS] இழிவுக்கு உள்ளானவன்;[SE][SS] ஆனால், உம் நியமங்களை மறக்காதவன்.[SE][QE]
142. [QS][SS] உமது நீதி என்றுமுள நீதி;[SE][SS] உமது திருச்சட்டம் என்றும் நம்பத்தக்கது.[SE][QE]
143. [QS][SS] துன்பமும் கவலையும்[SE][SS] என்னைப் பற்றிக்கொண்டன;[SE][SS] எனினும் உம் கட்டளைகள்[SE][SS] என்னை மகிழ்விக்கின்றன.[SE][QE]
144. [QS][SS] உம் ஒழுங்குமுறைகள்[SE][SS] எக்காலமும் நீதியுள்ளவை;[SE][SS] நான் வாழுமாறு[SE][SS] எனக்கு நுண்ணறிவு புகட்டும்.[SE][PE][QE]
145. {விடுதலைக்காக மன்றாடல்} [PS] [QS][SS] முழு இதயத்தோடு[SE][SS] உம்மை நோக்கி மன்றாடுகின்றேன்;[SE][SS] ஆண்டவரே![SE][SS] என் மன்றாட்டைக் கேட்டருளும்;[SE][SS] உம் விதிமுறைகளை நான் பின்பற்றுவேன்.[SE][QE]
146. [QS][SS] உம்மை நோக்கி மன்றாடுகின்றேன்;[SE][SS] என்னைக் காத்தருளும்;[SE][SS] உம் ஒழுங்குமுறைகளை[SE][SS] நான் கடைப்பிடித்தேன்.[SE][QE]
147. [QS][SS] வைகறையில் நான் உம்மிடம் வந்து[SE][SS] உதவிக்காக மன்றாடுகின்றேன்;[SE][SS] உம் சொற்களில்[SE][SS] நம்பிக்கை வைக்கின்றேன்.[SE][QE]
148. [QS][SS] உம் வாக்குறுதிகளைச் சிந்திப்பதற்காக,[SE][SS] இரவுச் சாம நேரங்களில்[SE][SS] நான் கண்விழித்துள்ளேன்.[SE][QE]
149. [QS][SS] ஆண்டவரே! உமது பேரன்பிற்கேற்ப[SE][SS] என் குரலைக் கேட்டருளும்;[SE][SS] உமது நீதியின்பபடி[SE][SS] என்னுயிரைக் காத்தருளும்.[SE][QE]
150. [QS][SS] சதிசெய்து ஒடுக்குவோர்[SE][SS] என்னை நெருங்கி வருகின்றனர்;[SE][SS] உம் திருச்சட்டத்துக்கும் அவர்களுக்கும்[SE][SS] வெகு தொலைவு.[SE][QE]
151. [QS][SS] ஆண்டவரே! நீர் என் அருகில்[SE][SS] இருக்கின்றீர்;[SE][SS] உம் கட்டளைகள் எல்லாம் நிலையானவை.[SE][QE]
152. [QS][SS] அவற்றை நீர் எக்காலத்திற்குமாக[SE][SS] ஏற்படுத்தினீர் என்று நீர் தந்த[SE][SS] ஒழுங்குமுறைகளினின்று[SE][SS] முன்பே நான் அறிந்திருக்கின்றேன்.[SE][PE][QE]
153. {உதவிக்காக மன்றாடல்} [PS] [QS][SS] என் துன்ப நிலையைப் பார்த்து[SE][SS] என்னை விடுவித்தருளும்;[SE][SS] ஏனெனில், உமது திருச்சட்டத்தை[SE][SS] நான் மறக்கவில்லை.[SE][QE]
154. [QS][SS] எனக்காக வழக்காடி[SE][SS] என்னை மீட்டருளும்;[SE][SS] உமது வாக்குக்கேற்றபடி[SE][SS] என் உயிரைக் காத்தருளும்.[SE][QE]
155. [QS][SS] தீயோர்க்கு மீட்பு[SE][SS] வெகு தொலைவில் உள்ளது;[SE][SS] ஏனெனில், அவர்கள்[SE][SS] உம் விதிமுறைகளைத் தேடுவதில்லை.[SE][QE]
156. [QS][SS] ஆண்டவரே! உம் இரக்கம் மிகப் பெரியது;[SE][SS] உம் நீதித்தீர்ப்புகளின்படி[SE][SS] எனக்கு வாழ்வளியும்.[SE][QE]
157. [QS][SS] என்னைக் கொடுமைப்படுத்துவோரும்[SE][SS] பகைப்போரும் பலர்;[SE][SS] ஆனால், உம் ஒழுங்குமுறைகளை விட்டு[SE][SS] நான் தவறுவதில்லை.[SE][QE]
158. [QS][SS] துரோகம் செய்வோரை[SE][SS] அருவருப்புடன் பார்க்கின்றேன்;[SE][SS] ஏனெனில், அவர்கள்[SE][SS] உம் வாக்கைக் கடைப்பிடிப்பதில்லை.[SE][QE]
159. [QS][SS] ஆண்டவரே! நான் உம் கட்டளைகள்மீது[SE][SS] எத்துணைப் பற்றுக்கொண்டுள்ளேன்[SE][SS] என்பதைப் பாரும்;[SE][SS] உம் பேரன்பிற்கேற்ப[SE][SS] எனக்கு வாழ்வளியும்.[SE][QE]
160. [QS][SS] உண்மையே உமது வார்த்தையின்[SE][SS] உட்பொருள்;[SE][SS] நீதியான உம் நெறிமுறைகள் எல்லாம்[SE][SS] என்றும் நிலைத்துள்ளன.[SE][PE][QE]
161. {திருச்சட்டத்தின்மீது பேரன்பு} [PS] [QS][SS] தலைவர்கள் என்னைக் காரணமின்றிக்[SE][SS] கொடுமைப்படுத்துகின்றனர்;[SE][SS] ஆனால், உம் வாக்கை முன்னிட்டு[SE][SS] என் உள்ளம் நடுங்குகின்றது.[SE][QE]
162. [QS][SS] திரண்ட கொள்ளைப் பொருளை[SE][SS] அடைந்தவன் மகிழ்வதுபோல[SE][SS] உமது வாக்குறுதியில்[SE][SS] நான் மகிழ்ச்சியுறுகின்றேன்.[SE][QE]
163. [QS][SS] பொய்யை வெறுத்து ஒதுக்குகின்றேன்;[SE][SS] உமது திருச்சட்டத்தின்மீது[SE][SS] பற்றுக்கொண்டுள்ளேன்.[SE][QE]
164. [QS][SS] நீதியான உம் நெறிமுறைகளைக் குறித்து[SE][SS] ஒரு நாளைக்கு ஏழுமுறை[SE][SS] உம்மைப் புகழ்கின்றேன்.[SE][QE]
165. [QS][SS] உமது திருச்சட்டத்தை விரும்புவோர்க்கு[SE][SS] மிகுதியான நல்வாழ்வு உண்டு;[SE][SS] அவர்களை நிலைகுலையச் செய்வது[SE][SS] எதுவுமில்லை.[SE][QE]
166. [QS][SS] ஆண்டவரே! நீர் அளிக்கும் மீட்புக்காக[SE][SS] நான் காத்திருக்கின்றேன்;[SE][SS] உம் கட்டளைகளைச்[SE][SS] செயல்படுத்துகின்றேன்.[SE][QE]
167. [QS][SS] உம் ஒழுங்குமுறைகளை[SE][SS] நான் கடைப்பிடித்து வருகின்றேன்;[SE][SS] நான் அவற்றின்மீது[SE][SS] பற்றுக்கொண்டுள்ளேன்.[SE][QE]
168. [QS][SS] உம் நியமங்களையும்[SE][SS] ஒழுங்குமுறைகளையும்[SE][SS] நான் கடைப்பிடிக்கின்றேன்;[SE][SS] ஏனெனில், என் வழிகள் எல்லாம்[SE][SS] உமக்குத் தெரிந்தவை.[SE][PE][QE]
169. {உதவிக்காக மன்றாடல்} [PS] [QS][SS] ஆண்டவரே! என் வேண்டுதல்[SE][SS] உம் திருமுன் வருவதாக![SE][SS] உமது வாக்குறுதிக்கேற்ப[SE][SS] எனக்கு நுண்ணறிவு புகட்டும்.[SE][QE]
170. [QS][SS] என் மன்றாட்டு உம் திருமுன் வருவதாக![SE][SS] உம் வாக்குறுதியின்படி[SE][SS] என்னை விடுவியும்.[SE][QE]
171. [QS][SS] உம் விதிமுறைகளை[SE][SS] எனக்கு நீர் கற்பிப்பதால்,[SE][SS] என் இதழ்களினின்று திருப்புகழ்[SE][SS] பொங்கிவரும்.[SE][QE]
172. [QS][SS] உம் வாக்கைக் குறித்து[SE][SS] என் நா பாடுவதாக![SE][SS] ஏனெனில், உம் கட்டளைகள்[SE][SS] எல்லாம் நீதியானவை.[SE][QE]
173. [QS][SS] உம் கரம் எனக்குத்[SE][SS] துணையாய் இருப்பதாக![SE][SS] ஏனெனில், உம் நியமங்களை[SE][SS] நான் தேர்ந்தெடுத்தேன்.[SE][QE]
174. [QS][SS] ஆண்டவரே! உம்மிடமிருந்து[SE][SS] வரும் மீட்பை[SE][SS] நான் நாடுகின்றேன்;[SE][SS] உமது திருச்சட்டத்தில்[SE][SS] நான் மகிழ்ச்சி அடைகின்றேன்.[SE][QE]
175. [QS][SS] உயிர் பிழைத்து நான் [SE][SS] உம்மைப் புகழ்வேனாக![SE][SS] உம் நீதி நெறிகள் எனக்குத்[SE][SS] துணைபுரிவனவாக![SE][QE]
176. [QS][SS] காணாமல்போன ஆட்டைப் போல்[SE][SS] நான் அலைந்து திரிகின்றேன்;[SE][SS] உம் ஊழியனைத் தேடிப்பாரும்;[SE][SS] ஏனெனில், உம் கட்டளைகளை[SE][SS] நான் மறக்கவில்லை.[SE][PE]