தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
சங்கீதம்
1. {ஆண்டவரே உண்மையான கடவுள்} [PS] [QS][SS] எங்களுக்கன்று, ஆண்டவரே![SE][SS] எங்களுக்கன்று;[SE][SS] மாட்சியை உம் பெயருக்கே[SE][SS] உரித்தாக்கும்;[SE][SS] உம் பேரன்பையும்[SE][SS] உண்மையையும் முன்னிட்டு[SE][SS] அதை உமக்கே உரியதாக்கும்.[SE][QE]
2. [QS][SS] ‘அவர்களுடைய கடவுள் எங்கே’ எனப்[SE][SS] பிற இனத்தார் வினவுவது ஏன்?[SE][QE]
3. [QS][SS] நம் கடவுளோ விண்ணுலகில் உள்ளார்;[SE][SS] தம் திருவுளப்படி[SE][SS] அனைத்தையும் செய்கின்றார்.[SE][QE]
4. [QS][SS] அவர்களுடைய தெய்வச்சிலைகள்[SE][SS] வெறும் வெள்ளியும் பொன்னுமே,[SE][SS] வெறும் மனிதக் கைவேலையே! [* திபா 135:15-18; திவெ 9:20. ] [SE][QE]
5. [QS][SS] அவற்றுக்கு வாய்கள் உண்டு;[SE][SS] ஆனால் அவை பேசுவதில்லை;[SE][SS] கண்கள் உண்டு;[SE][SS] ஆனால் அவை பார்ப்பதில்லை; [* திபா 135:15-18; திவெ 9:20. ] [SE][QE]
6. [QS][SS] செவிகள் உண்டு;[SE][SS] ஆனால் அவை கேட்பதில்லை;[SE][SS] மூக்குகள் உண்டு;[SE][SS] ஆனால் அவை முகர்வதில்லை. [* திபா 135:15-18; திவெ 9:20. ] [SE][QE]
7. [QS][SS] கைகள் உண்டு;[SE][SS] ஆனால் அவை தொட்டுணர்வதில்லை;[SE][SS] கால்கள் உண்டு;[SE][SS] ஆனால் அவை நடப்பதில்லை;[SE][SS] தொண்டைகள் உண்டு;[SE][SS] ஆனால் அவை குரல் எழுப்புவதில்லை. [* திபா 135:15-18; திவெ 9:20. ] [SE][QE]
8. [QS][SS] அவற்றைச் செய்கின்றோரும்[SE][SS] அவற்றில் நம்பிக்கை கொள்ளும்[SE][SS] அனைவரும் அவற்றைப்போல் ஆவர். [* திபா 135:15-18; திவெ 9:20. ] [SE][QE]
9. [QS][SS] இஸ்ரயேலரே! ஆண்டவர்மீது[SE][SS] நம்பிக்கைக் கொள்ளுங்கள்;[SE][SS] அவரே உங்களுக்குத் துணையும் கேடயமும் ஆவார்.[SE][QE]
10. [QS][SS] ஆரோனின் குலத்தாரே![SE][SS] ஆண்டவர்மீது[SE][SS] நம்பிக்கைக் கொள்ளுங்கள்;[SE][SS] அவரே உங்களுக்குத்[SE][SS] துணையும் கேடயமும் ஆவார்.[SE][QE]
11. [QS][SS] ஆண்டவருக்கு அஞ்சி நடப்போரே![SE][SS] அவர்மீது நம்பிக்கை கொள்ளுங்கள்;[SE][SS] அவரே உங்களுக்குத்[SE][SS] துணையும் கேடயமும் ஆவார்.[SE][QE]
12. [QS][SS] ஆண்டவர்[SE][SS] நம்மை நினைவு கூர்ந்துள்ளார்;[SE][SS] நமக்குத் தம் ஆசியை அளிப்பார்.[SE][SS] இஸ்ரயேல் குடும்பத்தாருக்கு[SE][SS] ஆசி வழங்குவார்;[SE][SS] ஆரோனின் குடும்பத்தாருக்கு[SE][SS] ஆசி வழங்குவார்;[SE][QE]
13. [QS][SS] தமக்கு அஞ்சிநடப்போர்க்கு[SE][SS] ஆண்டவர் ஆசி வழங்குவார்;[SE][SS] சிறியோர்க்கும் பெரியோர்க்கும்[SE][SS] ஆசி வழங்குவார். [* திவெ 11:18; 19:5.[QE]. ] [SE][QE]
14. [QS][SS] ஆண்டவர் உங்கள் இனத்தைப்[SE][SS] பெருகச் செய்வார்;[SE][SS] உங்களையும் உங்கள் பிள்ளைகளையும்[SE][SS] வளரச் செய்வார்.[SE][QE]
15. [QS][SS] நீங்கள் ஆண்டவரிடமிருந்து[SE][SS] ஆசி பெறுவீர்களாக![SE][SS] விண்ணையும் மண்ணையும்[SE][SS] உருவாக்கியவர் அவரே.[SE][QE]
16. [QS][SS] விண்ணகமோ ஆண்டவருக்கு உரியது;[SE][SS] மண்ணகத்தையோ[SE][SS] அவர் மானிடர்க்கு வழங்கியுள்ளார்.[SE][QE]
17. [QS][SS] இறந்தோர் ஆண்டவரைப் புகழ்வதில்லை;[SE][SS] மௌன உலகிற்குள் இறங்குவோர்[SE][SS] எவருமே அவரைப் புகழ்வதில்லை;[SE][QE]
18. [QS][SS] நாமோ ஆண்டவரை வாழ்த்துகின்றோம்;[SE][SS] இப்பொழுதும் எப்பொழுதும்[SE][SS] வாழ்த்துகின்றோம்.[SE][PE]
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 115 / 150
ஆண்டவரே உண்மையான கடவுள் 1 எங்களுக்கன்று, ஆண்டவரே! எங்களுக்கன்று; மாட்சியை உம் பெயருக்கே உரித்தாக்கும்; உம் பேரன்பையும் உண்மையையும் முன்னிட்டு அதை உமக்கே உரியதாக்கும். 2 ‘அவர்களுடைய கடவுள் எங்கே’ எனப் பிற இனத்தார் வினவுவது ஏன்? 3 நம் கடவுளோ விண்ணுலகில் உள்ளார்; தம் திருவுளப்படி அனைத்தையும் செய்கின்றார். 4 அவர்களுடைய தெய்வச்சிலைகள் வெறும் வெள்ளியும் பொன்னுமே, வெறும் மனிதக் கைவேலையே! * திபா 135:15-18; திவெ 9: 20. 5 அவற்றுக்கு வாய்கள் உண்டு; ஆனால் அவை பேசுவதில்லை; கண்கள் உண்டு; ஆனால் அவை பார்ப்பதில்லை; * திபா 135:15-18; திவெ 9: 20. 6 செவிகள் உண்டு; ஆனால் அவை கேட்பதில்லை; மூக்குகள் உண்டு; ஆனால் அவை முகர்வதில்லை. * திபா 135:15-18; திவெ 9: 20. 7 கைகள் உண்டு; ஆனால் அவை தொட்டுணர்வதில்லை; கால்கள் உண்டு; ஆனால் அவை நடப்பதில்லை; தொண்டைகள் உண்டு; ஆனால் அவை குரல் எழுப்புவதில்லை. * திபா 135:15-18; திவெ 9: 20. 8 அவற்றைச் செய்கின்றோரும் அவற்றில் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் அவற்றைப்போல் ஆவர். * திபா 135:15-18; திவெ 9: 20. 9 இஸ்ரயேலரே! ஆண்டவர்மீது நம்பிக்கைக் கொள்ளுங்கள்; அவரே உங்களுக்குத் துணையும் கேடயமும் ஆவார். 10 ஆரோனின் குலத்தாரே! ஆண்டவர்மீது நம்பிக்கைக் கொள்ளுங்கள்; அவரே உங்களுக்குத் துணையும் கேடயமும் ஆவார். 11 ஆண்டவருக்கு அஞ்சி நடப்போரே! அவர்மீது நம்பிக்கை கொள்ளுங்கள்; அவரே உங்களுக்குத் துணையும் கேடயமும் ஆவார். 12 ஆண்டவர் நம்மை நினைவு கூர்ந்துள்ளார்; நமக்குத் தம் ஆசியை அளிப்பார். இஸ்ரயேல் குடும்பத்தாருக்கு ஆசி வழங்குவார்; ஆரோனின் குடும்பத்தாருக்கு ஆசி வழங்குவார்; 13 தமக்கு அஞ்சிநடப்போர்க்கு ஆண்டவர் ஆசி வழங்குவார்; சிறியோர்க்கும் பெரியோர்க்கும் ஆசி வழங்குவார். [* திவெ 11:18; 19:5.. ] 14 ஆண்டவர் உங்கள் இனத்தைப் பெருகச் செய்வார்; உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் வளரச் செய்வார். 15 நீங்கள் ஆண்டவரிடமிருந்து ஆசி பெறுவீர்களாக! விண்ணையும் மண்ணையும் உருவாக்கியவர் அவரே. 16 விண்ணகமோ ஆண்டவருக்கு உரியது; மண்ணகத்தையோ அவர் மானிடர்க்கு வழங்கியுள்ளார். 17 இறந்தோர் ஆண்டவரைப் புகழ்வதில்லை; மௌன உலகிற்குள் இறங்குவோர் எவருமே அவரைப் புகழ்வதில்லை; 18 நாமோ ஆண்டவரை வாழ்த்துகின்றோம்; இப்பொழுதும் எப்பொழுதும் வாழ்த்துகின்றோம்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 115 / 150
×

Alert

×

Tamil Letters Keypad References