1. {பாஸ்காப் பாடல்} [PS] [QS][SS] எகிப்து நாட்டைவிட்டு[SE][SS] இஸ்ரயேலர்[SE][SS] வெளியேறியபொழுது,[SE][SS] வேற்று மொழி பேசிய மக்களை விட்டு[SE][SS] யாக்கோபின் குடும்பம் புறப்பட்டபொழுது,[SE][QE]
2. [QS][SS] யூதா அவருக்குத் தூயகம் ஆயிற்று;[SE][SS] இஸ்ரயேல் அவரது ஆட்சித்தளம் ஆனது. [* விப 12:51 ] [SE][QE]
3. [QS][SS] செங்கடல் கண்டது;[SE][SS] ஓட்டம் பிடித்தது;[SE][SS] யோர்தான் பின்னோக்கிச் சென்றது.[SE][QE]
4. [QS][SS] மலைகள் செம்மறிக் கிடாய்கள் போலும்[SE][SS] குன்றுகள் ஆட்டுக்குட்டிகள் போலும்[SE][SS] துள்ளிக் குதித்தன. [* விப 14:21; யோசு 3:16 ] [SE][QE]
5. [QS][SS] கடலே! நீ விலகி ஓடும்படி[SE][SS] உனக்கு நேர்ந்தது என்ன?[SE][SS] யோர்தானே! நீ[SE][SS] பின்னோக்கிச் சென்றது ஏன்?[SE][QE]
6. [QS][SS] மலைகளே! நீங்கள்[SE][SS] செம்மறிக் கிடாய்கள்போல்[SE][SS] குதித்தது ஏன்?[SE][SS] குன்றுகளே![SE][SS] நீங்கள் ஆட்டுக் குட்டிகள் போல்[SE][SS] துள்ளியது ஏன்?[SE][QE]
7. [QS][SS] பூவுலகே![SE][SS] தலைவர் முன்னிலையில்[SE][SS] நடுநடுங்கு![SE][SS] யாக்கோபின் கடவுள் முன்னிலையில்[SE][SS] நடுக்கமுறு![SE][QE]
8. [QS][SS] அவர் பாறையைத்[SE][SS] தண்ணீர்த் தடாகம் ஆக்குகின்றார்;[SE][SS] கற்பாறையை வற்றாத[SE][SS] நீர்ச்சுனை ஆக்குகின்றார்.[SE][PE]