தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
சங்கீதம்
1. {ஆண்டவரைப் போற்றுதல்} [PS] [QS][SS] அல்லேலூயா! நெஞ்சார[SE][SS] ஆண்டவருக்கு[SE][SS] நன்றி செலுத்துவேன்;[SE][SS] நீதிமான்களின் மன்றத்திலும் சபையிலும்[SE][SS] அவருக்கு நன்றி செலுத்துவேன்.[SE][QE]
2. [QS][SS] ஆண்டவரின் செயல்கள் உயர்ந்தவை;[SE][SS] அவற்றில் இன்பம் காண்போர்[SE][SS] அனைவரும் அவற்றை ஆய்ந்துணர்வர்.[SE][QE]
3. [QS][SS] அவரது செயல்[SE][SS] மேன்மையும் மாண்பும் மிக்கது;[SE][SS] அவரது நீதி என்றென்றும்[SE][SS] நிலைத்துள்ளது.[SE][QE]
4. [QS][SS] அவர் தம் வியத்தகு செயல்களை என்றும்[SE][SS] நினைவில் நிலைக்கச் செய்துள்ளார்;[SE][SS] அருளும் இரக்கமும் உடையவர் ஆண்டவர்.[SE][QE]
5. [QS][SS] அவர் தமக்கு அஞ்சி நடப்போர்க்கு[SE][SS] உணவு அளிக்கின்றார்;[SE][SS] தமது உடன்படிக்கையை[SE][SS] என்றும் நினைவில் கொள்கின்றார்;[SE][QE]
6. [QS][SS] வேற்றினத்தாரின் உரிமைச் சொத்தைத்[SE][SS] தம் மக்களுக்கு அளித்தார்;[SE][SS] இவ்வாறு ஆற்றல்மிக்க தம் செயல்களை[SE][SS] அவர்களுக்கு வெளிப்படுத்தினார்.[SE][QE]
7. [QS][SS] அவர்தம் ஆற்றல்மிகு செயல்கள்[SE][SS] நம்பிக்கைக்குரியவை; நீதியானவை;[SE][SS] அவர்தம் கட்டளைகள் அனைத்தும்[SE][SS] நிலையானவை.[SE][QE]
8. [QS][SS] என்றென்றும் எக்காலமும்[SE][SS] அவை நிலைமாறாதவை;[SE][SS] உண்மையாலும் நீதியாலும்[SE][SS] அவை உருவானவை.[SE][QE]
9. [QS][SS] தம் மக்களுக்கு அவர் மீட்பை அளித்தார்;[SE][SS] தம் உடன்படிக்கை[SE][SS] என்றென்றும் நிலைக்குமாறு செய்தார்;[SE][SS] அவரது திருப்பெயர் தூயது;[SE][SS] அஞ்சுதற்கு உரியது.[SE][QE]
10. [QS][SS] ஆண்டவர்பற்றிய அச்சமே[SE][SS] ஞானத்தின் தொடக்கம்;[SE][SS] அவர்தம் கட்டளைகளைக்[SE][SS] கடைப்பிடிப்போர் நல்லறிவுடையோர்;[SE][SS] அவரது புகழ்[SE][SS] என்றென்றும் நிலைத்துள்ளது. [* யோபு 28:8; நீமொ 1:7;9:10.[QE]. ] [SE][PE]
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 111 / 150
ஆண்டவரைப் போற்றுதல் 1 அல்லேலூயா! நெஞ்சார ஆண்டவருக்கு நன்றி செலுத்துவேன்; நீதிமான்களின் மன்றத்திலும் சபையிலும் அவருக்கு நன்றி செலுத்துவேன். 2 ஆண்டவரின் செயல்கள் உயர்ந்தவை; அவற்றில் இன்பம் காண்போர் அனைவரும் அவற்றை ஆய்ந்துணர்வர். 3 அவரது செயல் மேன்மையும் மாண்பும் மிக்கது; அவரது நீதி என்றென்றும் நிலைத்துள்ளது. 4 அவர் தம் வியத்தகு செயல்களை என்றும் நினைவில் நிலைக்கச் செய்துள்ளார்; அருளும் இரக்கமும் உடையவர் ஆண்டவர். 5 அவர் தமக்கு அஞ்சி நடப்போர்க்கு உணவு அளிக்கின்றார்; தமது உடன்படிக்கையை என்றும் நினைவில் கொள்கின்றார்; 6 வேற்றினத்தாரின் உரிமைச் சொத்தைத் தம் மக்களுக்கு அளித்தார்; இவ்வாறு ஆற்றல்மிக்க தம் செயல்களை அவர்களுக்கு வெளிப்படுத்தினார். 7 அவர்தம் ஆற்றல்மிகு செயல்கள் நம்பிக்கைக்குரியவை; நீதியானவை; அவர்தம் கட்டளைகள் அனைத்தும் நிலையானவை. 8 என்றென்றும் எக்காலமும் அவை நிலைமாறாதவை; உண்மையாலும் நீதியாலும் அவை உருவானவை. 9 தம் மக்களுக்கு அவர் மீட்பை அளித்தார்; தம் உடன்படிக்கை என்றென்றும் நிலைக்குமாறு செய்தார்; அவரது திருப்பெயர் தூயது; அஞ்சுதற்கு உரியது. 10 ஆண்டவர்பற்றிய அச்சமே ஞானத்தின் தொடக்கம்; அவர்தம் கட்டளைகளைக் கடைப்பிடிப்போர் நல்லறிவுடையோர்; அவரது புகழ் என்றென்றும் நிலைத்துள்ளது. [* யோபு 28:8; நீமொ 1:7;9:10.. ]
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 111 / 150
×

Alert

×

Tamil Letters Keypad References