1. {ஆண்டவரும் அவர் தேர்ந்து கொண்ட அரசரும்[BR](தாவீதின் புகழ்ப்பா)} [PS] [QS][SS] ஆண்டவர் என் தலைவரிடம்,[SE][SS] ‛நான் உம் பகைவரை[SE][SS] உமக்குப் கால்மணையாக்கும்வரை[SE][SS] நீர் என் வலப்பக்கம் வீற்றிரும்’[SE][SS] என்று உரைத்தார்.[SE][QE]
2. [QS][SS] வலிமைமிகு உமது செங்கோலை[SE][SS] ஆண்டவர் சீயோனிலிருந்து [SE][SS] ஒங்கச் செய்வார்; [SE][SS] உம் எதிரிகளிடையே ஆட்சி செலுத்தும்! [* மத் 22:44; மாற் 12:36; லூக் 20:42-43; திப 2:34-35; 1 கொரி 15:25; எபே 1:20-22; கொலோ 3:1; எபி 1:13; 8:1; 10:12-13 ] [SE][QE]
3. [QS][SS] நீர் உமது படைக்குத் [SE][SS] தலைமை தாங்கும் நாளில்[SE][SS] தூய கோலத்துடன் உம் மக்கள்[SE][SS] தம்மை உவந்தளிப்பர்; [SE][SS] வைகறை கருவுயிர்த்த பனியைப்போல [SE][SS] உம் இளம் வீரர் உம்மை வந்தடைவர்.[SE][QE]
4. [QS][SS] ‛மெல்கிசெதேக்கின் முறைப்படி[SE][SS] நீர் என்றென்றும் குருவே’ என்று[SE][SS] ஆண்டவர் ஆணையிட்டுச்[SE][SS] சொன்னார்; அவர் தம் மனத்தை[SE][SS] மாற்றிக் கொள்ளார்.[SE][QE]
5. [QS][SS] என் தலைவர் [SE][SS] உம் வலப்பக்கத்தில் உள்ளார்;[SE][SS] தம் சினத்தின் நாளில்[SE][SS] மன்னர்களை நொறுக்குவார். [* எபி 5:6; 6:20; 7:17,21.[QE] ] [SE][QE]
6. [QS][SS] வேற்று நாடுகளுக்கு அவர் தீர்ப்பளித்து [SE][SS] அவற்றைப் பிணத்தால் நிரப்புவார்;[SE][SS] பாருலகெங்கும் தலைவர்களை[SE][SS] அவர் நொறுக்குவார்.[SE][QE]
7. [QS][SS] வழியில் உள்ள நீரோடையிலிருந்து[SE][SS] அவர் பருகுவார்; [SE][SS] ஆகவே அவர் தலைநிமிர்ந்து நிற்பார்.[SE][PE]