1. {துன்புற்றவரின் முறையீடு[BR](பாடகர் தலைவர்க்கு: தாவீதின் புகழ்ப்பா)} [PS] [QS][SS] என் புகழ்ச்சிக்குரிய இறைவா,[SE][SS] மௌனமாய் இராதேயும்.[SE][QE]
2. [QS][SS] தீயோரும் வஞ்சனை செய்வோரும்[SE][SS] எனக்கெதிராய்த்[SE][SS] தம் வாயைத் திறந்துள்ளனர்;[SE][SS] எனக்கெதிராய் அவர்கள்[SE][SS] பொய்களைப் பேசியுள்ளனர்.[SE][QE]
3. [QS][SS] பகைவரின் சொற்கள்[SE][SS] என்னைச் சூழ்ந்துள்ளன;[SE][SS] அவர்கள் காரணமின்றி[SE][SS] என்னைத் தாக்குகின்றனர்.[SE][QE]
4. [QS][SS] நான் காட்டிய அன்புக்குக் கைம்மாறாக[SE][SS] என்மேல் குற்றம் சாட்டினர்;[SE][SS] நானோ அவர்களுக்காக மன்றாடினேன்.[SE][QE]
5. [QS][SS] நன்மைக்குப் பதிலாக அவர்கள்[SE][SS] எனக்குத் தீமையே செய்தனர்;[SE][SS] அன்புக்குப் பதிலாக அவர்கள்[SE][SS] வெறுப்பையே காட்டினர்;[SE][QE]
6. [QS][SS] அவர்கள் கூறியது:[SE][SS] “அவனுக்கு எதிராகத்[SE][SS] தீயவனை எழும்பச் செய்யும்![SE][SS] ‘குற்றம் சாட்டுவோன்’[SE][SS] அவனது வலப்பக்கம் நிற்பானாக![SE][QE]
7. [QS][SS] நீதி விசாரணையின்போது[SE][SS] அவன் தண்டனை பெறட்டும்![SE][SS] அவன் செய்யும் வேண்டுகோள்[SE][SS] குற்றமாகக் கருதப்படுவதாக![SE][QE]
8. [QS][SS] அவனது வாழ்நாள் சொற்பமாகட்டும்;[SE][SS] அவனது பதவியை வேறோருவன்[SE][SS] எடுத்துக் கொள்ளட்டும்! [* திப 1:20. ] [SE][QE]
9. [QS][SS] அவனுடைய பிள்ளைகள்[SE][SS] தந்தை இழந்தோர் ஆகட்டும்![SE][SS] அவனுடைய மனைவி[SE][SS] கைம்பெண் ஆகட்டும்![SE][QE]
10. [QS][SS] அவனுடைய பிள்ளைகள்[SE][SS] அலைந்து திரிந்து பிச்சை எடுக்கட்டும்![SE][SS] பாழான தங்கள் வீடுகளிலிருந்து[SE][SS] அவர்கள் விரட்டப்படட்டும்![SE][QE]
11. [QS][SS] அவனுக்கு உரியவற்றை எல்லாம்[SE][SS] கடன் கொடுத்தவன்[SE][SS] பறித்துக் கொள்ளட்டும்![SE][SS] அவனது உழைப்பின் பயனை[SE][SS] அன்னியர் கொள்ளையடிக்கட்டும்![SE][QE]
12. [QS][SS] அவனுக்கு இரக்கங்காட்ட[SE][SS] ஒருவனும் இல்லாதிருக்கட்டும்![SE][SS] தந்தையை இழந்த,[SE][SS] அவனுடைய பிள்ளைகள்மேல்[SE][SS] யாரும் இரங்காதிருக்கட்டும்![SE][QE]
13. [QS][SS] அவன் வழி மரபு அடியோடு அழியட்டும்![SE][SS] அடுத்த தலைமுறைக்கு[SE][SS] அவர்களுடைய பெயர்[SE][SS] இல்லாது போகட்டும்![SE][QE]
14. [QS][SS] அவனுடைய மூதாதையரின் குற்றத்தை[SE][SS] ஆண்டவர் நினைவில் கொள்ளட்டும்![SE][SS] அவனுடைய தாய் செய்த பாவத்தை[SE][SS] அவர் மன்னியாது இருக்கட்டும்![SE][QE]
15. [QS][SS] அவை என்றும்[SE][SS] ஆண்டவர் திருமுன்னே இருக்கட்டும்![SE][SS] அவனது நினைவை பூவுலகினின்று[SE][SS] அடியோடு அவர் அகற்றட்டும்![SE][QE]
16. [QS][SS] ஏனெனில், அவன்[SE][SS] இரக்கம் காட்ட நினைக்கவில்லை;[SE][SS] எளியோரையும் வறியோரையும்[SE][SS] கொடுமைப்படுத்தினான்;[SE][SS] நெஞ்சம் நொறுங்குண்டோரைக்[SE][SS] கொலைசெய்யத் தேடினான்.[SE][QE]
17. [QS][SS] சபிப்பதையே அவன் விரும்பினான்;[SE][SS] விரும்பிய அதுவே அவன்மீது விழட்டும்![SE][SS] ஆசி வழங்குவதை அவன் விரும்பவில்லை;[SE][SS] ஆகவே அது அவனைவிட்டுத்[SE][SS] தொலைவில் செல்லட்டும்![SE][QE]
18. [QS][SS] சாபமே அவன் அணிந்த ஆடை;[SE][SS] தண்ணீரென அவன் உடலையும்[SE][SS] எண்ணெயென அவன் எலும்புகளையும்[SE][SS] அது நனைக்கட்டும்![SE][QE]
19. [QS][SS] அது அவனைப் போர்த்தும்[SE][SS] ஆடைபோல் இருக்கட்டும்![SE][SS] நாள்தோறும் அவன் கட்டும்[SE][SS] கச்சைபோல் இருக்கட்டும்![SE][QE]
20. [QS][SS] என்னைக் குற்றம் சாட்டுவோருக்கும்,[SE][SS] எனக்கு எதிராகத்[SE][SS] தீயன பேசுவோருக்கும்[SE][SS] ஆண்டவர் அளிக்கும் கைம்மாறாக[SE][SS] அது இருப்பதாக![SE][QE]
21. [QS][SS] ஆனால், என் தலைவராகிய கடவுளே![SE][SS] உமது பெயரை முன்னிட்டு[SE][SS] என் சார்பாகச் செயல்படும்![SE][SS] உமது பேரன்பின் இனிமைபொருட்டு[SE][SS] என்னை மீட்டருளும்![SE][QE]
22. [QS][SS] நானோ எளியவன்; வறியவன்;[SE][SS] என் இதயம் என்னுள் புண்பட்டுள்ளது.[SE][QE]
23. [QS][SS] மாலைநேர நிழலைப்போல்[SE][SS] நான் மறைந்து போகின்றேன்;[SE][SS] வெட்டுக் கிளியைப் போல நான்[SE][SS] காற்றில் அடித்துச் செல்லப்படுகின்றேன்.[SE][QE]
24. [QS][SS] நோன்பினால் என் முழங்கால்கள்[SE][SS] தளர்வுறுகின்றன;[SE][SS] என் உடல் வலிமை இழந்து[SE][SS] மெலிந்து போகின்றது.[SE][QE]
25. [QS][SS] நானோ அவர்களது[SE][SS] பழிச்சொல்லுக்கு உள்ளானேன்;[SE][SS] என்னைப் பார்க்கின்றோர்[SE][SS] தலையை ஆட்டுகின்றனர். [* மத் 27:39; மாற் 15:29.[QE]. ] [SE][QE]
26. [QS][SS] ஆண்டவரே! என் கடவுளே![SE][SS] எனக்கு உதவியருளும்![SE][SS] உமது பேரன்பிற்கேற்ப[SE][SS] மீட்டருளும்![SE][QE]
27. [QS][SS] இது உம் ஆற்றலால் நிகழ்ந்தது என[SE][SS] அவர்கள் அறியட்டும்![SE][SS] ஆண்டவரே! இதைச் செய்தவர் நீரே என[SE][SS] அவர்கள் உணரட்டும்.[SE][QE]
28. [QS][SS] அவர்கள் என்னைச் சபித்தாலும்,[SE][SS] நீர் எனக்கு ஆசி வழங்கும்![SE][SS] எனக்கு எதிராக எழுவோர் இழிவுறட்டும்![SE][SS] உம் ஊழியனாகிய நான் அகமகிழ்வேன்.[SE][QE]
29. [QS][SS] என்னைக் குற்றஞ்சாட்டுவோர்க்கு[SE][SS] மானக்கேடு மேலாடை ஆகட்டும்![SE][SS] அவர்களின் வெட்கம்[SE][SS] அவர்களுக்கு மேலங்கி ஆகட்டும்![SE][QE]
30. [QS][SS] என் நாவினால் ஆண்டவரைப்[SE][SS] பெரிதும் போற்றிடுவேன்;[SE][SS] பெரும் கூட்டத்திடையே[SE][SS] அவரைப் புகழ்ந்திடுவேன்.[SE][QE]
31. [QS][SS] ஏனெனில், வறியோரின் வலப்பக்கம்[SE][SS] அவர் நிற்கின்றார்;[SE][SS] தண்டனைத் தீர்ப்பிடுவோரிடமிருந்து[SE][SS] அவர்களது உயிரைக் காக்க நிற்கின்றார்.[SE][PE]