1. {பகைவரிடமிருந்து விடுவிக்குமாறு வேண்டல்[BR](தாவீதின் புகழ்ப்பாடல்)[BR](திப 57:7-11; 60:5-12)} [PS] [QS][SS] என் உள்ளம் உறுதியாய்[SE][SS] இருக்கின்றது;[SE][SS] கடவுளே! என் உள்ளம்[SE][SS] உறுதியாய் இருக்கின்றது;[SE][SS] நான் பாடுவேன். [BR] உம்மைப் புகழ்ந்து பாடுவேன்.[SE][SS] என் நெஞ்சே! விழித்தெழு; [* 1 குறி 16:34; 2 குறி 5:13; 7:3; எஸ்ரா 3:11; திபா 100:5; 106:1; 118:1; 136:1; எரே 33:11.[QE]. ] [SE][QE]
2. [QS][SS] வீணையே! யாழே! விழித்தெழுங்கள்;[SE][SS] வைகறையை விழித்தெழச் செய்வேன்.[SE][QE]
3. [QS][SS] ஆண்டவரே, மக்களினங்களிடையே[SE][SS] உமக்கு நன்றி செலுத்துவேன்;[SE][SS] எல்லா இனத்தாரிடையேயும்[SE][SS] உம்மைப் புகழ்ந்து பாடுவேன்.[SE][QE]
4. [QS][SS] ஏனெனில், வானளவு உயர்ந்துள்ளது[SE][SS] உமது பேரன்பு![SE][SS] முகில்களைத் தொடுகின்றது[SE][SS] உமது உண்மை![SE][QE]
5. [QS][SS] கடவுளே! வானங்களுக்கு மேலாக[SE][SS] நீர் உயர்வு பெறுவீராக![SE][SS] பாரெங்கும் உமது மாட்சி விளங்குவதாக![SE][QE]
6. [QS][SS] உம் அன்பர்கள் விடுதலை பெறுமாறு[SE][SS] உமது வலக்கையால்[SE][SS] அவர்களுக்குத் துணை செய்யும்![SE][SS] என் விண்ணப்பத்திற்குப் பதிலளியும்![SE][QE]
7. [QS][SS] கடவுள் தமது தூயகத்தினின்று[SE][SS] இவ்வாறு உரைத்தார்;[SE][SS] “வெற்றிக் களிப்பிடையே[SE][SS] செக்கேமைப் பங்கிடுவேன்;[SE][SS] சுக்கோத்துப் பள்ளத்தாக்கை[SE][SS] அளந்து கொடுப்பேன்![SE][QE]
8. [QS][SS] கிலயாது என்னுடையது;[SE][SS] மனாசேயும் என்னுடையதே;[SE][SS] எப்ராயிம் என் தலைச்சீரா,[SE][SS] யூதா என் செங்கோல்![SE][QE]
9. [QS][SS] மோவாபு! எனது பாதங்கழுவும் பாத்திரம்;[SE][SS] ஏதோமின்மீது[SE][SS] எனது மிதியடியை எறிவேன்;[SE][SS] பெலிஸ்தியாவை வென்று ஆர்ப்பரிப்பேன்!”[SE][QE]
10. [QS][SS] அரண்சூழ் நகரினுள்[SE][SS] என்னை இட்டுச் செல்பவர் யார்?[SE][SS] ஏதோம்வரைக்கும்[SE][SS] என்னைக் கூட்டிச் செல்பவர் யார்?[SE][QE]
11. [QS][SS] கடவுளே! நீர் எங்களைக்[SE][SS] கைவிட்டு விட்டீர் அன்றோ?[SE][SS] கடவுளே! நீர் எங்கள் படைகளோடு[SE][SS] புறப்படவில்லை அன்றோ?[SE][QE]
12. [QS][SS] எதிரியை மேற்கொள்ள[SE][SS] எங்களுக்கு உதவும்;[SE][SS] மனிதர் தரும் உதவியோ வீண்;[SE][QE]
13. [QS][SS] கடவுளின் துணையால்[SE][SS] வீரத்துடன் போரிடுவோம்;[SE][SS] அவரே நம் எதிரிகளை மிதித்துவிடுவார்.[SE][PE][QE]