3. கிழக்கினின்றும், மேற்கினின்றும் வடக்கினின்றும் தெற்கினின்றும், பல நாடுகளினின்றும் ஒன்று சேர்க்கப்பட்டோர் சொல்வார்களாக.
|
4. பாலைநிலத்தில் பாழ் வெளியில் சிலர் அலைந்து திரிந்தனர்; குடியிருக்குமாறு ஒரு நகருக்குச் செல்ல அவர்கள் வழி காணவில்லை;
|
6. தம் நெருக்கடியில் ஆண்டவரைக் கூவியழைத்தனர்; அவர்களுக்குற்ற துன்பங்களிலிருந்து அவர்களை அவர் விடுவித்தார்.
|
8. ஆண்டவரின்; பேரன்பை முன்னிட்டு, மானிடர்களுக்காக அவர் செய்த வியத்தகு செயல்களை முன்னிட்டு, அவர்கள் அவருக்கு நன்றி செலுத்துவார்களாக!
|
12. கடும் வேலையால் அவர் அவர்களின் உள்ளத்தைச் சிறுமைப்படுத்தினார்; அவர்கள் நிலைகுலைந்து போயினர்; அவர்களுக்குத் துணைசெய்வார் எவருமிலர்.
|
13. அவர்கள் தம் நெருக்கடியில் ஆண்டவரைக் கூவியழைத்தனர்; அவர் அவர்களைத் துன்பங்களிலிருந்து விடுவித்தார்.
|
14. காரிருளிலும் சாவின் நிழலிலும் கிடந்த அவர்களை அவர் வெளிக்கொணர்ந்தார். அவர்களைப் பிணித்திருந்த தளைகளைத் தகர்த்தெறிந்தார்.
|
15. ஆண்டவரின் பேரன்பை முன்னிட்டு, மானிடரான அவர்களுக்கு அவர் செய்த வியத்தகு செயல்களை முன்னிட்டு, அவர்கள் அவருக்கு நன்றி செலுத்துவார்களாக!
|
17. சிலர் தங்கள் தீயநெறிகளை முன்னிட்டு நோய்களுக்கு உள்ளாயினர்; அவர்களுடைய தீச்செயல்களின் பொருட்டுத் துன்பங்களுக்கு உள்ளாயினர்.
|
19. அவர்கள் தம் நெருக்கடியில் ஆண்டவரைக் கூவியழைத்தனர்; அவர் அவர்களைத் துன்பங்களினின்று விடுவித்தார்.
|
21. ஆண்டவரின் பேரன்பை முன்னிட்டு, மானிடரான அவர்களுக்கு அவர் செய்த வியத்தகு செயல்களை முன்னிட்டு, அவர்கள் அவருக்கு நன்றி செலுத்துவார்களாக!
|
26. அவர்கள் வானமட்டும் மேலே வீசப்பட்டனர்; பாதாளமட்டும் கீழே தள்ளப்பட்டனர்; அவர்கள் உள்ளமோ இக்கட்டால் நிலைகுலைந்தது.
|
28. தம் நெருக்கடியில் அவர்கள் ஆண்டவரைக் கூவியழைத்தனர்; அவர்களுக்குற்ற துன்பங்களிலிருந்து அவர் அவர்களை விடுவித்தார்.
|
30. அமைதி உண்டானதால் அவர்கள் மகிழ்ச்சியுற்றனர்; அவர்கள் விரும்பிய துறைமுகத்திற்கு அவர் அவர்களைக் கொண்டு போய்ச் சேர்த்தார்.
|
31. ஆண்டவரின் பேரன்பை முன்னிட்டு, மானிடரான அவர்களுக்கு அவர் செய்த வியத்தகு செயல்களை முன்னிட்டு அவர்கள் அவருக்கு நன்றி செலுத்தவார்களாக!
|
34. செழிப்பான நிலத்தை உவர் நிலமாக்கினார்; அங்குக் குடியிருந்தோரின் தீச்செயலை முன்னிட்டு இப்படிச் செய்தார்.
|
38. அவர் ஆசி வழங்கினார்; அவர்கள் மிகுதியாகப் பல்கிப் பெருகினர்; அவர்களின் கால்நடைகளைக் குறைந்துபோக விடவில்லை.
|
39. பின்பு, அவர்களின் தொகை குறைந்தது; அவர்கள் ஒடுக்கப்பட்டு, துன்புறுத்துப்பட்டு இகழ்ச்சிக்கு உள்ளாயினர்.
|
41. ஆனால், எளியோரை அவர் துன்ப நிலையினின்று தூக்கிவிட்டார், அவர்கள் குடும்பங்களை மந்தை போல் பெருகச் செய்தார்.
|