1. {கடவுள் தம் மக்களுக்குக் காட்டிய கருணை} [PS] [QS][SS] அல்லேலூயா! ஆண்டவருக்கு[SE][SS] நன்றி செலுத்துங்கள்;[SE][SS] ஏனெனில் அவர் நல்லவர்![SE][SS] என்றென்றுமுள்ளது அவரது பேரன்பு![SE][QE]
2. [QS][SS] ஆண்டவரின் வலிமைமிகு செயல்களை[SE][SS] யாரால் இயம்ப இயலும்?[SE][SS] ஆவர்தம் புகழை[SE][SS] யாரால் விளம்பக் கூடும்? [* 1 குறி 16:34; 2 குறி 5:13; 7:3; எஸ்ரா 3:11; திபா 100:5; 107:1; 118:1, 29; 136:1; எரே 33:11 ] [SE][QE]
3. [QS][SS] நீதிநெறி காப்போர் பேறு பெற்றோர்![SE][SS] எப்போதும் நேரியதே செய்வோர்[SE][SS] பேறுபேற்றோர்![SE][QE]
4. [QS][SS] ஆண்டவரே! நீர் உம்மக்கள்மீது[SE][SS] இரக்கம் காட்டும்போது[SE][SS] என்னை நினைவு கூரும்![SE][SS] அவர்களை நீர் விடுவிக்கும்போது[SE][SS] எனக்கும் துணைசெய்யும்![SE][QE]
5. [QS][SS] நீர் தேர்ந்தெடுத்த மக்களின்[SE][SS] நல்வாழ்வை நான் காணும்படி செய்யும்;[SE][SS] உம்முடைய மக்களின் மகிழ்ச்சியில்[SE][SS] நானும் பங்கு கொள்ளும்படிச் செய்யும்![SE][SS] அப்போது, உமது உரிமைச் சொத்தான[SE][SS] மக்களோடு உம்மைப் போற்றிட இயலும்.[SE][QE]
6. [QS][SS] எங்கள் மூதாதையரின் வழிநடந்து,[SE][SS] நாங்களும் பாவம் செய்தோம்;[SE][SS] குற்றம் புரிந்தோம்; தீமை செய்தோம்.[SE][QE]
7. [QS][SS] எங்கள் மூதாதையர் எகிப்தில் நீர்செய்த[SE][SS] வியத்தகு செயல்களைப் பற்றிச்[SE][SS] சிந்திக்கவில்லை;[SE][SS] உமது மாபெரும் பேரன்பை[SE][SS] அவர்கள் நினைவில் கொள்ளவில்லை;[SE][SS] மாறாக உன்னதமானவரை எதிர்த்துச்[SE][SS] செங்கடல் ஓரத்தில்* கலகம் செய்தனர்.[SE][QE]
8. [QS][SS] அவரோ தமது பெயரின் பொருட்டு[SE][SS] அவர்களை விடுவித்தார்;[SE][SS] இவ்வாறு அவர் தமது வலிமையை[SE][SS] வெளிப்படுத்தினார். [* விப 14:10-12 ] [SE][QE]
9. [QS][SS] அவர் செங்கடலை அதட்டினார்;[SE][SS] அது உலர்ந்து போயிற்று;[SE][SS] பாலை நிலத்தில் நடத்திச் செல்வது போல்[SE][SS] அவர்களை ஆழ்கடல் வழியே[SE][SS] நடத்திச்சென்றார்.[SE][QE]
10. [QS][SS] எதிரியின் கையினின்று[SE][SS] அவர்களை விடுவித்தார்;[SE][SS] பகைவரின் பிடியினின்று[SE][SS] அவர்களை மீட்டார். [* விப 14:21-31 ] [SE][QE]
11. [QS][SS] அவர்களுடைய எதிரிகளைக்[SE][SS] கடல்நீர் மூழ்கடித்தது;[SE][SS] அவர்களுள் ஒருவர்கூட[SE][SS] எஞ்சியிருக்கவில்லை. [* விப 14:21-31 ] [SE][QE]
12. [QS][SS] அப்பொழுது, அவர்கள்[SE][SS] அவருடைய வாக்குறுதிகளில்[SE][SS] நம்பிக்கை வைத்தார்கள்;[SE][SS] அவரைப் புகழ்ந்து பாடினார்கள். [* விப 14:21-31 ] [SE][QE]
13. [QS][SS] ஆயினும், அவர் செய்தவற்றை[SE][SS] அவர்கள் விரைவிலேயே[SE][SS] மறந்துவிட்டார்கள்;[SE][SS] அவரது அறிவுரைக்காக[SE][SS] அவர்கள் காத்திருக்கவில்லை. [* விப 14:21-31; விப 15:1-12 ] [SE][QE]
14. [QS][SS] பாலைநிலத்தில் அவர்கள்[SE][SS] பெருவிருப்புக்கு இடங்கொடுத்தார்கள்.[SE][SS] பாழ்வெளியில் அவர்கள்[SE][SS] இறைவனைச் சோதித்தார்கள்.[SE][QE]
15. [QS][SS] அவர்கள் கேட்டதை[SE][SS] அவர் அவர்களுக்குச் கொடுத்தார்;[SE][SS] அவர்களின் உயிரை அழிக்குமாறு[SE][SS] அவர்கள்மீது நோயை அனுப்பினார். [* எண் 11:4-34 ] [SE][QE]
16. [QS][SS] பாளையத்தில் இருக்கும்போது[SE][SS] மோசேயின்மீதும்,[SE][SS] ஆண்டவருக்காகத் திருநிலைபெற்ற[SE][SS] ஆரோன்மீதும்,[SE][SS] அவர்கள் பொறாமை கொண்டார்கள். [* எண் 11:4-34 ] [SE][QE]
17. [QS][SS] நிலம் பிளந்து தாத்தானை விழுங்கியது;[SE][SS] அபிராமின் கும்பலை[SE][SS] அப்படியே புதைத்துவிட்டது. [* எண் 16:1-35 ] [SE][QE]
18. [QS][SS] அக்கும்பலிடையே நெருப்பு[SE][SS] கொழுந்துவிட்டு எரிந்தது;[SE][SS] தீயோரைத் தீப்பிழம்பு எரித்தது. [* எண் 16:1-35 ] [SE][QE]
19. [QS][SS] அவர்கள் ஓரேபில் ஒரு[SE][SS] கன்றுக் குட்டியைச் செய்துகொண்டனர்;[SE][SS] வார்ப்புச் சிலையை விழுந்து வணங்கினர்; [* எண் 16:1-35 ] [SE][QE]
20. [QS][SS] தங்கள் ‘மாட்சி’க்குப் பதிலாக,[SE][SS] புல்தின்னும் காளையின்[SE][SS] உருவத்தைச் செய்து கொண்டனர்; [* விப 32:1-14 ] [SE][QE]
21. [QS][SS] தங்களை விடுவித்த[SE][SS] இறைவனை மறந்தனர்;[SE][SS] எகிப்தில் பெரியன புரிந்தவரை மறந்தனர்; [* விப 32:1-14 ] [SE][QE]
22. [QS][SS] காம் நாட்டில் அவர் செய்த[SE][SS] வியத்தகு செயல்களை மறந்தனர்;[SE][SS] செங்கடலில் அவர் செய்த[SE][SS] அச்சுறுத்தும் செயல்களையும்[SE][SS] மறந்தனர். [* விப 32:1-14 ] [SE][QE]
23. [QS][SS] ஆகையால், அவர்களை அவர்[SE][SS] அழித்துவிடுவதாகக் கூறினார்;[SE][SS] ஆனால், அவரால் தேர்ந்து கொள்ளப்பட்ட[SE][SS] மோசே, அவர்முன்[SE][SS] உடைமதில் காவலர் போல் நின்று[SE][SS] அவரது கடுஞ்சினம் அவர்களை[SE][SS] அழிக்காதவாறு தடுத்தார். [* விப 32:1-14 ] [SE][QE]
24. [QS][SS] அருமையான நாட்டை[SE][SS] அவர்கள் இகழ்ந்தார்கள்;[SE][SS] அவரது வாக்குறுதியில்[SE][SS] நம்பிக்கை கொள்ளவில்லை. [* விப 32:1-14 ] [SE][QE]
25. [QS][SS] அவர்கள் தங்களின் கூடாரங்களில்[SE][SS] முறுமுறுத்தார்கள்;[SE][SS] ஆண்டவரின் குரலுக்குச்[SE][SS] செவிகொடுக்கவில்லை. [* எண் 14:1-35 ] [SE][QE]
26. [QS][SS] ஆகவே அவர் அவர்களுக்கு எதிராகத்[SE][SS] தம் கையை ஓங்கி[SE][SS] ‘நான் உங்களைப் பாலைநிலத்தில்[SE][SS] வீழ்ச்சியுறச் செய்வேன்; [* எண் 14:1-35 ] [SE][QE]
27. [QS][SS] உங்கள் வழிமரபினரை[SE][SS] வேற்றினங்களிடையிலும்[SE][SS] அன்னிய நாடுகளிலும்[SE][SS] சிதறடிப்பேன்’ என்றார். [* எண் 14:1-35 ] [SE][QE]
28. [QS][SS] பின்னர் அவர்கள் பாகால்பெயோரைப்[SE][SS] பற்றிக் கொண்டார்கள்.[SE][SS] உயிரற்ற தெய்வங்களுக்குப்[SE][SS] பலியிட்டவற்றை உண்டார்கள்; [* லேவி 26:33 ] [SE][QE]
29. [QS][SS] இவ்வாறு தங்கள் செய்கைகளினால்[SE][SS] அவருக்குச் சினமூட்டினார்கள்;[SE][SS] ஆகவே, கொள்ளைநோய்[SE][SS] அவர்களிடையே பரவிற்று. [* எண் 25:1-13 ] [SE][QE]
30. [QS][SS] பினகாசு கொதித்தெழுந்து[SE][SS] தலையிட்டதால்[SE][SS] கொள்ளைநோய் நீங்கிற்று. [* எண் 25:1-13 ] [SE][QE]
31. [QS][SS] இதனால், தலைமுறை தலைமுறையாக[SE][SS] என்றென்றும், அவரது செயல்[SE][SS] நீதியாகக் கருதப்பட்டது. [* எண் 25:1-13 ] [SE][QE]
32. [QS][SS] மெரிபாவின் ஊற்றினருகில்[SE][SS] அவருக்குச் சினமூட்டினார்கள்.[SE][SS] அவர்களின் பொருட்டு[SE][SS] மோசேக்கும் தீங்கு நேரிட்டது. [* எண் 25:1-13 ] [SE][QE]
33. [QS][SS] மோசேக்கு அவர்கள்[SE][SS] மனக்கசப்பை ஏற்படுத்தியதால்[SE][SS] அவர் முன்பின் பாராது பேசினார். [* எண் 20:2-13 ] [SE][QE]
34. [QS][SS] ஆண்டவர் இட்ட கட்டளைக்கு மாறாக,[SE][SS] மக்களினங்களை அவர்கள்[SE][SS] அழிக்கவில்லை. [* எண் 20:2-13 ] [SE][QE]
35. [QS][SS] வேற்றினத்தாரோடு கலந்துறவாடி,[SE][SS] அவர்களின் வழக்கங்களைக்[SE][SS] கற்றுக்கொண்டனர்; [* நீத 2:1; 3:5-6 ] [SE][QE]
36. [QS][SS] அவர்களின் தெய்வச் சிலைகளைத்[SE][SS] தொழுதனர்; அவையே[SE][SS] அவர்களுக்குக் கண்ணிகளாயின. [* நீத 2:1; 3:5-6 ] [SE][QE]
37. [QS][SS] அவர்கள் தங்கள் புதல்வர், புதல்வியரைப்[SE][SS] பேய்களுக்குப் பலியிட்டனர்; [* நீத 2:1; 3:5-6 ] [SE][QE]
38. [QS][SS] மாசற்ற இரத்தத்தை,[SE][SS] தங்கள் புதல்வர் புதல்வியரின்[SE][SS] இரத்தத்தைச் சிந்தினர்;[SE][SS] கானான் நாட்டுத்[SE][SS] தெய்வங்களின் சிலைகளுக்கு[SE][SS] அவர்களைப் பலியிட்டார்கள்;[SE][SS] அவர்களின் இரத்தத்தால்[SE][SS] நாடு தீட்டுப்பட்டது. [* 2 அர 17:7 ] [SE][QE]
39. [QS][SS] அவர்கள் தங்கள் செயல்களால் தங்களைக்[SE][SS] கறைப்படுத்திக் கொண்டனர்;[SE][SS] தங்கள் செயல்கள் மூலம்[SE][SS] வேசித்தனம் செய்தனர். [* எண் 35:33 ] [SE][QE]
40. [QS][SS] எனவே, ஆண்டவரின் சினம்[SE][SS] அவர்தம் மக்களுக்கெதிராகப்[SE][SS] பற்றியெரிந்தது;[SE][SS] தமது உரிமைச் சொத்தை[SE][SS] அவர் அருவருத்தார்.[SE][QE]
41. [QS][SS] வேற்றினத்தாரின் கையில்[SE][SS] அவர் அவர்களை ஒப்படைத்தார்;[SE][SS] அவர்களை வெறுத்தோரே[SE][SS] அவர்களை ஆட்சி செய்தனர். [* நீத 2:14-18 ] [SE][QE]
42. [QS][SS] அவர்கள் எதிரிகள்[SE][SS] அவர்களை ஒடுக்கினர்;[SE][SS] தங்கள் கையின்கீழ்[SE][SS] அவர்களைத் தாழ்த்தினர். [* நீத 2:14-18 ] [SE][QE]
43. [QS][SS] பன்முறை அவர்[SE][SS] அவர்களை விடுவித்தார்;[SE][SS] அவர்களோ திட்டமிட்டே[SE][SS] அவருக்கு எதிராகக் கலகம் செய்தனர்;[SE][SS] தங்கள் தீச்செயல்களினால்[SE][SS] அவர்கள் தாழ்நிலை அடைந்தனர். [* நீத 2:14-18 ] [SE][QE]
44. [QS][SS] எனினும் அவர் அவர்களது[SE][SS] மன்றாட்டுக்குச் செவிசாய்த்து,[SE][SS] அவர்களது துன்பத்தைக் கண்டு[SE][SS] மனமிரங்கினார். [* நீத 2:14-18 ] [SE][QE]
45. [QS][SS] அவர்களுக்கு உதவுமாறு,[SE][SS] அவர் தமது உடன்படிக்கையை[SE][SS] நினைவு கூர்ந்தார்;[SE][SS] தமது பேரன்பிற்கேற்பக்[SE][SS] கழிவிரக்கம் கொண்டார்; [* நீத 2:14-18 ] [SE][QE]
46. [QS][SS] அவர்களைச் சிறைசெய்த[SE][SS] அனைவர் முன்னிலையிலும்[SE][SS] அவர்கள் இரக்கம் பெறும்படி செய்தார். [* நீத 2:14-18 ] [SE][QE]
47. [QS][SS] எங்கள் கடவுளாகிய ஆண்டவரே![SE][SS] எங்களை விடுவித்தருளும்;[SE][SS] வேற்று நாடுகளினின்று[SE][SS] எங்களை ஒன்று சேர்த்தருளும்;[SE][SS] அப்பொழுது நாங்கள்[SE][SS] உமது திருப்பெயருக்கு[SE][SS] நன்றி செலுத்துவோம்;[SE][SS] உம்மைப் புகழ்வதில்[SE][SS] பெருமை கொள்வோம். [* நீத 2:14-18 ] [SE][QE]
48. [QS][SS] இஸ்ரயேலின் கடவுளான ஆண்டவர்[SE][SS] ஊழி ஊழியாய்ப் புகழப் பெறுவாராக![SE][SS] மக்கள் அனைவரும்[SE][SS] ‘ஆமென்’ எனச் சொல்வார்களாக![SE][SS] அல்லேலூயா! [* 1 குறி 16:35-36 ] [SE][PE]