1. {கடவுளும் அவர்தம் மக்களும்[BR](1 குறி 16:8-22)} [PS] [QS][SS] ஆண்டவருக்கு[SE][SS] நன்றி செலுத்துங்கள்![SE][SS] அவர்தம் பெயரைச்[SE][SS] சொல்லி வழிபடுங்கள்![SE][SS] அவர்தம் செயல்களை[SE][SS] மக்களினங்கள் அறியச் செய்யுங்கள்.[SE][QE]
2. [QS][SS] அவருக்குப் பாடல் பாடுங்கள்;[SE][SS] அவரைப் புகழ்ந்தேத்துங்கள்![SE][SS] அவர்தம் வியத்தகு செயல்கள்[SE][SS] அனைத்தையும் எடுத்துரையுங்கள்![SE][QE]
3. [QS][SS] அவர்தம் திருப்பெயரை[SE][SS] மாட்சிப்படுத்துங்கள்;[SE][SS] ஆண்டவரைத் தேடுவோரின் இதயம்[SE][SS] அக்களிப்பதாக![SE][QE]
4. [QS][SS] ஆண்டவரையும்[SE][SS] அவரது ஆற்றலையும் தேடுங்கள்![SE][SS] அவரது திருமுகத்தை[SE][SS] இடையறாது நாடுங்கள்![SE][QE]
5. [QS][SS] அவர் செய்த வியத்தகு செயல்களை[SE][SS] நினைவு கூருங்கள்![SE][SS] அவர்தம் அருஞ்செயல்களையும்,[SE][SS] அவரது வாய் மொழிந்த[SE][SS] நீதித் தீர்ப்புகளையும்[SE][SS] நினைவில் கொள்ளுங்கள்.[SE][QE]
6. [QS][SS] அவரின் ஊழியராம்[SE][SS] ஆபிரகாமின் வழிமரபே![SE][SS] அவர் தேர்ந்துகொண்ட[SE][SS] யாக்கோபின் பிள்ளைகளே![SE][QE]
7. [QS][SS] அவரே நம் கடவுளாகிய ஆண்டவர்![SE][SS] அவரின் நீதித்தீர்ப்புகள்[SE][SS] உலகம் அனைத்திற்கும் உரியன.[SE][QE]
8. [QS][SS] அவர் தமது உடன்படிக்கையை[SE][SS] என்றென்றும் நினைவில் கொள்கின்றார்;[SE][SS] ஆயிரம் தலைமுறைக்கென[SE][SS] தாம் அளித்த வாக்குறுதியை[SE][SS] நினைவுகூர்கின்றார்.[SE][QE]
9. [QS][SS] ஆபிரகாமுடன் தாம் செய்து கொண்ட[SE][SS] உடன்படிக்கையையும்[SE][SS] ஈசாக்குக்குத் தாம்[SE][SS] ஆணையிட்டுக் கூறியதையும்[SE][SS] அவர் நினைவில் கொண்டுள்ளார். [* தொநூ 12:7; 17:8; 26:3. ] [SE][QE]
10. [QS][SS] யாக்கோபுக்கு நியமமாகவும்[SE][SS] இஸ்ரயேலுக்கு[SE][SS] என்றுமுள உடன்படிக்கையாகவும்[SE][SS] அதை அவர் உறுதிப்படுத்தினார். [* தொநூ 28:13. ] [SE][QE]
11. [QS][SS] ‘கானான் நாட்டை[SE][SS] உங்களுக்கு அளிப்பேன்;[SE][SS] அப்பங்கே உங்களுக்கு[SE][SS] உரிமைச் சொத்தாய் இருக்கும்’[SE][SS] என்றார் அவர். [* தொநூ 28:13. ] [SE][QE]
12. [QS][SS] அப்போது, அவர்கள்[SE][SS] மதிப்பிலும் எண்ணிக்கையிலும்[SE][SS] குறைந்தவராய் இருந்தார்கள்;[SE][SS] அங்கே அவர்கள்[SE][SS] அன்னியராய் இருந்தார்கள்.[SE][QE]
13. [QS][SS] அவர்கள் ஒரு நாட்டினின்று[SE][SS] மற்றொரு நாட்டிற்கும்[SE][SS] ஓர் அரசினின்று மற்றொரு மக்களிடமும்[SE][SS] அலைந்து திரிந்தார்கள்.[SE][QE]
14. [QS][SS] யாரும் அவர்களை ஒடுக்குமாறு[SE][SS] அவர் விட்டு விடவில்லை;[SE][SS] அவர்களின் பொருட்டு மன்னர்களை[SE][SS] அவர் கண்டித்தார். [* தொநூ 20:3-7. ] [SE][QE]
15. [QS][SS] ‘நான் அருள்பொழிவு செய்தாரைத்[SE][SS] தொடாதீர்![SE][SS] என் இறைவாக்கினர்க்குத்[SE][SS] தீங்கிழைக்காதீர்’ என்றார் அவர். [* தொநூ 20:3-7. ] [SE][QE]
16. [QS][SS] நாட்டில் அவர் பஞ்சம் வரும்படி செய்தார்;[SE][SS] உணவெனும் ஊன்றுகோலை[SE][SS] முறித்துவிட்டார். [* தொநூ 41:53-57. ] [SE][QE]
17. [QS][SS] அவர்களுக்கு முன் ஒருவரை[SE][SS] அனுப்பிவைத்தார்;[SE][SS] யோசேப்பு என்பவர்[SE][SS] அடிமையாக விற்கப்பட்டார். [* தொநூ 37:28; 45:5. ] [SE][QE]
18. [QS][SS] அவர்தம் கால்களுக்கு விலங்கிட்டு[SE][SS] அவரைத் துன்புறுத்தினர்.[SE][SS] அவர்தம் கழுத்தில்[SE][SS] இரும்புப் பட்டையை மாட்டினர். [* தொநூ 39:20-40:23. ] [SE][QE]
19. [QS][SS] காலம் வந்தது;[SE][SS] அவர் உரைத்தது நிறைவேறிற்று;[SE][SS] ஆண்டவரின் வார்த்தை[SE][SS] அவர் உண்மையானவரென மெய்ப்பித்தது. [* தொநூ 39:20-40:23. ] [SE][QE]
20. [QS][SS] மன்னர் ஆளனுப்பி[SE][SS] அவரை விடுதலை செய்தார்;[SE][SS] மக்களினங்களின் தலைவர்[SE][SS] அவருக்கு விடுதலை அளித்தார்; [* தொநூ 41:14. ] [SE][QE]
21. [QS][SS] அவர் அவரைத் தம் அரண்மனைக்குத்[SE][SS] தலைவர் ஆக்கினார்;[SE][SS] தம் உடைமைகளுக்கெல்லாம்[SE][SS] பொறுப்பாளராக ஏற்படுத்தினார். [* தொநூ 41:39-41. ] [SE][QE]
22. [QS][SS] அவர் அரச அலுவலரைப் பயிற்றுவித்தார்;[SE][SS] அவருடைய அவைப்பெரியோருக்கு[SE][SS] நல்லறிவு புகட்டினார்.[SE][QE]
23. [QS][SS] பின்னர், இஸ்ரயேல் எகிப்துக்கு வந்தார்;[SE][SS] யாக்கோபு காம் நாட்டில்[SE][SS] அன்னியராய் வாழ்ந்தார். [* தொநூ 46:6; 47:11. ] [SE][QE]
24. [QS][SS] ஆண்டவர் தம் மக்களைப்[SE][SS] பல்கிப் பெருகச் செய்தார்;[SE][SS] அவர்களின் எதிரிகளைவிட அவர்களை[SE][SS] வலிமைமிக்கவர்கள் ஆக்கினார். [* விப 1:7-14. ] [SE][QE]
25. [QS][SS] தம் மக்களை வெறுக்கும்படியும்,[SE][SS] தம் அடியார்களுக்கு எதிராகச்[SE][SS] சூழ்ச்சி செய்யும்படியும்[SE][SS] அவர் எகிப்தியரின் மனத்தை மாற்றினார். [* விப 1:7-14. ] [SE][QE]
26. [QS][SS] அவர்தம் ஊழியராகிய மோசேயையும்,[SE][SS] தாம் தேர்ந்தெடுத்த[SE][SS] ஆரோனையும் அனுப்பினார். [* விப 3:1-4:17. ] [SE][QE]
27. [QS][SS] அவர்கள் எகிப்தியரிடையே[SE][SS] அவர்தம் அருஞ்செயல்களைச் செய்தனர்;[SE][SS] காம் நாட்டில் வியத்தகு செயல்களைச்[SE][SS] செய்து காட்டினர்.[SE][QE]
28. [QS][SS] அவர் இருளை அனுப்பி[SE][SS] நாட்டை இருட்டாக்கினார்;[SE][SS] அவருடைய சொற்களை[SE][SS] எதிர்ப்பார் இல்லை. [* விப 10:21-23. ] [SE][QE]
29. [QS][SS] அவர்களுடைய நீர்நிலைகளை[SE][SS] அவர் இரத்தமாக மாற்றினார்;[SE][SS] அவற்றிலிருந்த மீன்களைச் சாகடித்தார். [* விப 7:17-21. ] [SE][QE]
30. [QS][SS] அவர்களது நாட்டிற்குள்[SE][SS] தவளைகள் ஏறிவந்தன;[SE][SS] மன்னர்களின் பள்ளியறைகளுக்குள்ளும்[SE][SS] அவை நுழைந்தன. [* விப 8:1-6. ] [SE][QE]
31. [QS][SS] அவர் கட்டளையிட,[SE][SS] அவர்களுடைய நாடு முழுவதிலும்[SE][SS] ஈக்களும் கொசுக்களும் திரண்டு வந்தன. [* விப 8:16-17, 20-24. ] [SE][QE]
32. [QS][SS] அவர் நீருக்குப் பதிலாகக்[SE][SS] கல்லை மழையாகப் பொழிந்தார்;[SE][SS] அவர்களது நாடெங்கும்[SE][SS] மின்னல் தெறிக்கச் செய்தார். [* விப 9:22-25. ] [SE][QE]
33. [QS][SS] அவர் அவர்களின்[SE][SS] திராட்சைச் செடிகளையும்[SE][SS] அத்திமரங்களையும் அழித்தார்;[SE][SS] அவர்களது நாடெங்குமுள்ள[SE][SS] மரங்களை முறித்தார். [* விப 9:22-25. ] [SE][QE]
34. [QS][SS] அவரது சொல்லால் வெட்டுக் கிளிகளும்[SE][SS] எண்ணற்ற வெட்டுப்புழுக்களும்[SE][SS] அங்கே தோன்றின. [* விப 10:12-15. ] [SE][QE]
35. [QS][SS] அவை அவர்களது நாட்டின்[SE][SS] பயிர் பச்சைகளைத் தின்றுத்தீர்த்தன;[SE][SS] அவர்களது நிலத்தின் விளைச்சல்களை[SE][SS] விழுங்கிவிட்டன. [* விப 10:12-15. ] [SE][QE]
36. [QS][SS] அவர் அவர்களது நாட்டின்[SE][SS] தலைப்பேறுகள் அனைத்தையும்[SE][SS] தாக்கினார்; அவர்களது[SE][SS] ஆண்மையின் முதற்பேறுகள்[SE][SS] அனைத்தையும் வீழ்த்தினார். [* விப 12:29. ] [SE][QE]
37. [QS][SS] அவர் இஸ்ரயேலரை[SE][SS] வெள்ளியோடும் பொன்னோடும்[SE][SS] புறப்படச் செய்தார்;[SE][SS] அவர்கள் குலங்களில் எவரும்[SE][SS] தளர்ந்து போகவில்லை. [* விப 12:33-36. ] [SE][QE]
38. [QS][SS] அவர்கள் வெளியேறுகையில்[SE][SS] எகிப்தியர் அகமகிழ்ந்தனர்;[SE][SS] ஏனெனில், இஸ்ரயேலர் பற்றிய பேரச்சம்[SE][SS] அவர்களை ஆட்கொண்டிருந்தது. [* விப 12:33-36. ] [SE][QE]
39. [QS][SS] அவர் அவர்களைப் பாதுகாக்க[SE][SS] மேகத்தைப் பரப்பினார்;[SE][SS] இரவில் ஒளிதர நெருப்பைத் தந்தார். [* விப 13:21-22. ] [SE][QE]
40. [QS][SS] அவர்கள் கேட்டதால்[SE][SS] அவர் காடைகளை வரச்செய்தார்;[SE][SS] வானினின்று வந்த உணவால்[SE][SS] அவர்களை நிறைவுறச் செய்தார். [* விப 16:2-15. ] [SE][QE]
41. [QS][SS] அவர் கற்பாறையைப் பிளந்தார்;[SE][SS] தண்ணீர் பொங்கி வழிந்தது;[SE][SS] அது பாலைநிலங்களில் ஆறாய் ஓடிற்று. [* விப 17:1-7; எண் 20:2-13. ] [SE][QE]
42. [QS][SS] ஏனெனில், தம் அடியார்[SE][SS] ஆபிரகாமுக்கு அளித்த[SE][SS] தமது தூய வாக்குறுதியை[SE][SS] அவர் நினைவுகூர்ந்தார்.[SE][QE]
43. [QS][SS] அவர் தம் மக்களை[SE][SS] மகிழ்ச்சியோடு வெளிக்கொணர்ந்தார்;[SE][SS] அவர்தாம் தெரிந்தெடுத்தவர்களை[SE][SS] ஆரவாரத்தோடு கூட்டிச் சென்றார்.[SE][QE]
44. [QS][SS] அவர் வேற்றினத்தாரின் நாடுகளை[SE][SS] அவர்களுக்கு அளித்தார்;[SE][SS] மக்களினங்களது உழைப்பின் பயனை[SE][SS] அவர்கள் உரிமையாக்கிக்[SE][SS] கொள்ளுமாறு செய்தார். [* யோசு 11:16-23.[QE]. ] [SE][QE]
45. [QS][SS] அவர்கள் அவருடைய[SE][SS] கட்டளைகளைக் கடைப்பிடிக்கவும்,[SE][SS] அவருடைய சட்டங்களின்படி ஒழுகவுமே[SE][SS] அவர் இவ்வாறு செய்தார். அல்லேலூயா![SE][PE]