தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
சங்கீதம்
1. {கடவுளும் அவர்தம் மக்களும்[BR](1 குறி 16:8-22)} [PS] [QS][SS] ஆண்டவருக்கு[SE][SS] நன்றி செலுத்துங்கள்![SE][SS] அவர்தம் பெயரைச்[SE][SS] சொல்லி வழிபடுங்கள்![SE][SS] அவர்தம் செயல்களை[SE][SS] மக்களினங்கள் அறியச் செய்யுங்கள்.[SE][QE]
2. [QS][SS] அவருக்குப் பாடல் பாடுங்கள்;[SE][SS] அவரைப் புகழ்ந்தேத்துங்கள்![SE][SS] அவர்தம் வியத்தகு செயல்கள்[SE][SS] அனைத்தையும் எடுத்துரையுங்கள்![SE][QE]
3. [QS][SS] அவர்தம் திருப்பெயரை[SE][SS] மாட்சிப்படுத்துங்கள்;[SE][SS] ஆண்டவரைத் தேடுவோரின் இதயம்[SE][SS] அக்களிப்பதாக![SE][QE]
4. [QS][SS] ஆண்டவரையும்[SE][SS] அவரது ஆற்றலையும் தேடுங்கள்![SE][SS] அவரது திருமுகத்தை[SE][SS] இடையறாது நாடுங்கள்![SE][QE]
5. [QS][SS] அவர் செய்த வியத்தகு செயல்களை[SE][SS] நினைவு கூருங்கள்![SE][SS] அவர்தம் அருஞ்செயல்களையும்,[SE][SS] அவரது வாய் மொழிந்த[SE][SS] நீதித் தீர்ப்புகளையும்[SE][SS] நினைவில் கொள்ளுங்கள்.[SE][QE]
6. [QS][SS] அவரின் ஊழியராம்[SE][SS] ஆபிரகாமின் வழிமரபே![SE][SS] அவர் தேர்ந்துகொண்ட[SE][SS] யாக்கோபின் பிள்ளைகளே![SE][QE]
7. [QS][SS] அவரே நம் கடவுளாகிய ஆண்டவர்![SE][SS] அவரின் நீதித்தீர்ப்புகள்[SE][SS] உலகம் அனைத்திற்கும் உரியன.[SE][QE]
8. [QS][SS] அவர் தமது உடன்படிக்கையை[SE][SS] என்றென்றும் நினைவில் கொள்கின்றார்;[SE][SS] ஆயிரம் தலைமுறைக்கென[SE][SS] தாம் அளித்த வாக்குறுதியை[SE][SS] நினைவுகூர்கின்றார்.[SE][QE]
9. [QS][SS] ஆபிரகாமுடன் தாம் செய்து கொண்ட[SE][SS] உடன்படிக்கையையும்[SE][SS] ஈசாக்குக்குத் தாம்[SE][SS] ஆணையிட்டுக் கூறியதையும்[SE][SS] அவர் நினைவில் கொண்டுள்ளார்.[SE][QE]
10. [QS][SS] யாக்கோபுக்கு நியமமாகவும்[SE][SS] இஸ்ரயேலுக்கு[SE][SS] என்றுமுள உடன்படிக்கையாகவும்[SE][SS] அதை அவர் உறுதிப்படுத்தினார். [* தொநூ 12:7; 17:8; 26:3 ] [SE][QE]
11. [QS][SS] ‘கானான் நாட்டை[SE][SS] உங்களுக்கு அளிப்பேன்;[SE][SS] அப்பங்கே உங்களுக்கு[SE][SS] உரிமைச் சொத்தாய் இருக்கும்’[SE][SS] என்றார் அவர். [* தொநூ 28:13 ] [SE][QE]
12. [QS][SS] அப்போது, அவர்கள்[SE][SS] மதிப்பிலும் எண்ணிக்கையிலும்[SE][SS] குறைந்தவராய் இருந்தார்கள்;[SE][SS] அங்கே அவர்கள்[SE][SS] அன்னியராய் இருந்தார்கள். [* தொநூ 28:13 ] [SE][QE]
13. [QS][SS] அவர்கள் ஒரு நாட்டினின்று[SE][SS] மற்றொரு நாட்டிற்கும்[SE][SS] ஓர் அரசினின்று மற்றொரு மக்களிடமும்[SE][SS] அலைந்து திரிந்தார்கள்.[SE][QE]
14. [QS][SS] யாரும் அவர்களை ஒடுக்குமாறு[SE][SS] அவர் விட்டு விடவில்லை;[SE][SS] அவர்களின் பொருட்டு மன்னர்களை[SE][SS] அவர் கண்டித்தார்.[SE][QE]
15. [QS][SS] ‘நான் அருள்பொழிவு செய்தாரைத்[SE][SS] தொடாதீர்![SE][SS] என் இறைவாக்கினர்க்குத்[SE][SS] தீங்கிழைக்காதீர்’ என்றார் அவர். [* தொநூ 20:3-7 ] [SE][QE]
16. [QS][SS] நாட்டில் அவர் பஞ்சம் வரும்படி செய்தார்;[SE][SS] உணவெனும் ஊன்றுகோலை[SE][SS] முறித்துவிட்டார். [* தொநூ 20:3-7 ] [SE][QE]
17. [QS][SS] அவர்களுக்கு முன் ஒருவரை[SE][SS] அனுப்பிவைத்தார்;[SE][SS] யோசேப்பு என்பவர்[SE][SS] அடிமையாக விற்கப்பட்டார். [* தொநூ 41:53-57 ] [SE][QE]
18. [QS][SS] அவர்தம் கால்களுக்கு விலங்கிட்டு[SE][SS] அவரைத் துன்புறுத்தினர்.[SE][SS] அவர்தம் கழுத்தில்[SE][SS] இரும்புப் பட்டையை மாட்டினர். [* தொநூ 37:28; 45:5 ] [SE][QE]
19. [QS][SS] காலம் வந்தது;[SE][SS] அவர் உரைத்தது நிறைவேறிற்று;[SE][SS] ஆண்டவரின் வார்த்தை[SE][SS] அவர் உண்மையானவரென மெய்ப்பித்தது. [* தொநூ 39:20-40:23 ] [SE][QE]
20. [QS][SS] மன்னர் ஆளனுப்பி[SE][SS] அவரை விடுதலை செய்தார்;[SE][SS] மக்களினங்களின் தலைவர்[SE][SS] அவருக்கு விடுதலை அளித்தார்; [* தொநூ 39:20-40:23 ] [SE][QE]
21. [QS][SS] அவர் அவரைத் தம் அரண்மனைக்குத்[SE][SS] தலைவர் ஆக்கினார்;[SE][SS] தம் உடைமைகளுக்கெல்லாம்[SE][SS] பொறுப்பாளராக ஏற்படுத்தினார். [* தொநூ 41:14 ] [SE][QE]
22. [QS][SS] அவர் அரச அலுவலரைப் பயிற்றுவித்தார்;[SE][SS] அவருடைய அவைப்பெரியோருக்கு[SE][SS] நல்லறிவு புகட்டினார். [* தொநூ 41:39-41 ] [SE][QE]
23. [QS][SS] பின்னர், இஸ்ரயேல் எகிப்துக்கு வந்தார்;[SE][SS] யாக்கோபு காம் நாட்டில்[SE][SS] அன்னியராய் வாழ்ந்தார்.[SE][QE]
24. [QS][SS] ஆண்டவர் தம் மக்களைப்[SE][SS] பல்கிப் பெருகச் செய்தார்;[SE][SS] அவர்களின் எதிரிகளைவிட அவர்களை[SE][SS] வலிமைமிக்கவர்கள் ஆக்கினார். [* தொநூ 46:6; 47:11 ] [SE][QE]
25. [QS][SS] தம் மக்களை வெறுக்கும்படியும்,[SE][SS] தம் அடியார்களுக்கு எதிராகச்[SE][SS] சூழ்ச்சி செய்யும்படியும்[SE][SS] அவர் எகிப்தியரின் மனத்தை மாற்றினார். [* விப 1:7-14 ] [SE][QE]
26. [QS][SS] அவர்தம் ஊழியராகிய மோசேயையும்,[SE][SS] தாம் தேர்ந்தெடுத்த[SE][SS] ஆரோனையும் அனுப்பினார். [* விப 1:7-14 ] [SE][QE]
27. [QS][SS] அவர்கள் எகிப்தியரிடையே[SE][SS] அவர்தம் அருஞ்செயல்களைச் செய்தனர்;[SE][SS] காம் நாட்டில் வியத்தகு செயல்களைச்[SE][SS] செய்து காட்டினர். [* விப 3:1-4:17 ] [SE][QE]
28. [QS][SS] அவர் இருளை அனுப்பி[SE][SS] நாட்டை இருட்டாக்கினார்;[SE][SS] அவருடைய சொற்களை[SE][SS] எதிர்ப்பார் இல்லை.[SE][QE]
29. [QS][SS] அவர்களுடைய நீர்நிலைகளை[SE][SS] அவர் இரத்தமாக மாற்றினார்;[SE][SS] அவற்றிலிருந்த மீன்களைச் சாகடித்தார். [* விப 10:21-23 ] [SE][QE]
30. [QS][SS] அவர்களது நாட்டிற்குள்[SE][SS] தவளைகள் ஏறிவந்தன;[SE][SS] மன்னர்களின் பள்ளியறைகளுக்குள்ளும்[SE][SS] அவை நுழைந்தன. [* விப 7:17-21 ] [SE][QE]
31. [QS][SS] அவர் கட்டளையிட,[SE][SS] அவர்களுடைய நாடு முழுவதிலும்[SE][SS] ஈக்களும் கொசுக்களும் திரண்டு வந்தன. [* விப 8:1-6 ] [SE][QE]
32. [QS][SS] அவர் நீருக்குப் பதிலாகக்[SE][SS] கல்லை மழையாகப் பொழிந்தார்;[SE][SS] அவர்களது நாடெங்கும்[SE][SS] மின்னல் தெறிக்கச் செய்தார். [* விப 8:16-17, 20-24 ] [SE][QE]
33. [QS][SS] அவர் அவர்களின்[SE][SS] திராட்சைச் செடிகளையும்[SE][SS] அத்திமரங்களையும் அழித்தார்;[SE][SS] அவர்களது நாடெங்குமுள்ள[SE][SS] மரங்களை முறித்தார். [* விப 9:22-25 ] [SE][QE]
34. [QS][SS] அவரது சொல்லால் வெட்டுக் கிளிகளும்[SE][SS] எண்ணற்ற வெட்டுப்புழுக்களும்[SE][SS] அங்கே தோன்றின. [* விப 9:22-25 ] [SE][QE]
35. [QS][SS] அவை அவர்களது நாட்டின்[SE][SS] பயிர் பச்சைகளைத் தின்றுத்தீர்த்தன;[SE][SS] அவர்களது நிலத்தின் விளைச்சல்களை[SE][SS] விழுங்கிவிட்டன. [* விப 10:12-15 ] [SE][QE]
36. [QS][SS] அவர் அவர்களது நாட்டின்[SE][SS] தலைப்பேறுகள் அனைத்தையும்[SE][SS] தாக்கினார்; அவர்களது[SE][SS] ஆண்மையின் முதற்பேறுகள்[SE][SS] அனைத்தையும் வீழ்த்தினார். [* விப 10:12-15 ] [SE][QE]
37. [QS][SS] அவர் இஸ்ரயேலரை[SE][SS] வெள்ளியோடும் பொன்னோடும்[SE][SS] புறப்படச் செய்தார்;[SE][SS] அவர்கள் குலங்களில் எவரும்[SE][SS] தளர்ந்து போகவில்லை. [* விப 12:29 ] [SE][QE]
38. [QS][SS] அவர்கள் வெளியேறுகையில்[SE][SS] எகிப்தியர் அகமகிழ்ந்தனர்;[SE][SS] ஏனெனில், இஸ்ரயேலர் பற்றிய பேரச்சம்[SE][SS] அவர்களை ஆட்கொண்டிருந்தது. [* விப 12:33-36 ] [SE][QE]
39. [QS][SS] அவர் அவர்களைப் பாதுகாக்க[SE][SS] மேகத்தைப் பரப்பினார்;[SE][SS] இரவில் ஒளிதர நெருப்பைத் தந்தார். [* விப 12:33-36 ] [SE][QE]
40. [QS][SS] அவர்கள் கேட்டதால்[SE][SS] அவர் காடைகளை வரச்செய்தார்;[SE][SS] வானினின்று வந்த உணவால்[SE][SS] அவர்களை நிறைவுறச் செய்தார். [* விப 13:21-22 ] [SE][QE]
41. [QS][SS] அவர் கற்பாறையைப் பிளந்தார்;[SE][SS] தண்ணீர் பொங்கி வழிந்தது;[SE][SS] அது பாலைநிலங்களில் ஆறாய் ஓடிற்று. [* விப 16:2-15 ] [SE][QE]
42. [QS][SS] ஏனெனில், தம் அடியார்[SE][SS] ஆபிரகாமுக்கு அளித்த[SE][SS] தமது தூய வாக்குறுதியை[SE][SS] அவர் நினைவுகூர்ந்தார். [* விப 17:1-7; எண் 20:2-13 ] [SE][QE]
43. [QS][SS] அவர் தம் மக்களை[SE][SS] மகிழ்ச்சியோடு வெளிக்கொணர்ந்தார்;[SE][SS] அவர்தாம் தெரிந்தெடுத்தவர்களை[SE][SS] ஆரவாரத்தோடு கூட்டிச் சென்றார்.[SE][QE]
44. [QS][SS] அவர் வேற்றினத்தாரின் நாடுகளை[SE][SS] அவர்களுக்கு அளித்தார்;[SE][SS] மக்களினங்களது உழைப்பின் பயனை[SE][SS] அவர்கள் உரிமையாக்கிக்[SE][SS] கொள்ளுமாறு செய்தார்.[SE][QE]
45. [QS][SS] அவர்கள் அவருடைய[SE][SS] கட்டளைகளைக் கடைப்பிடிக்கவும்,[SE][SS] அவருடைய சட்டங்களின்படி ஒழுகவுமே[SE][SS] அவர் இவ்வாறு செய்தார். அல்லேலூயா! [* யோசு 11:16-23.[QE] ] [SE][PE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 105 / 150
சங்கீதம் 105:118
கடவுளும் அவர்தம் மக்களும்
(1 குறி 16:8-22)

1 ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்! அவர்தம் பெயரைச் சொல்லி வழிபடுங்கள்! அவர்தம் செயல்களை மக்களினங்கள் அறியச் செய்யுங்கள். 2 அவருக்குப் பாடல் பாடுங்கள்; அவரைப் புகழ்ந்தேத்துங்கள்! அவர்தம் வியத்தகு செயல்கள் அனைத்தையும் எடுத்துரையுங்கள்! 3 அவர்தம் திருப்பெயரை மாட்சிப்படுத்துங்கள்; ஆண்டவரைத் தேடுவோரின் இதயம் அக்களிப்பதாக! 4 ஆண்டவரையும் அவரது ஆற்றலையும் தேடுங்கள்! அவரது திருமுகத்தை இடையறாது நாடுங்கள்! 5 அவர் செய்த வியத்தகு செயல்களை நினைவு கூருங்கள்! அவர்தம் அருஞ்செயல்களையும், அவரது வாய் மொழிந்த நீதித் தீர்ப்புகளையும் நினைவில் கொள்ளுங்கள். 6 அவரின் ஊழியராம் ஆபிரகாமின் வழிமரபே! அவர் தேர்ந்துகொண்ட யாக்கோபின் பிள்ளைகளே! 7 அவரே நம் கடவுளாகிய ஆண்டவர்! அவரின் நீதித்தீர்ப்புகள் உலகம் அனைத்திற்கும் உரியன. 8 அவர் தமது உடன்படிக்கையை என்றென்றும் நினைவில் கொள்கின்றார்; ஆயிரம் தலைமுறைக்கென தாம் அளித்த வாக்குறுதியை நினைவுகூர்கின்றார். 9 ஆபிரகாமுடன் தாம் செய்து கொண்ட உடன்படிக்கையையும் ஈசாக்குக்குத் தாம் ஆணையிட்டுக் கூறியதையும் அவர் நினைவில் கொண்டுள்ளார். 10 யாக்கோபுக்கு நியமமாகவும் இஸ்ரயேலுக்கு என்றுமுள உடன்படிக்கையாகவும் அதை அவர் உறுதிப்படுத்தினார். * தொநூ 12:7; 17:8; 26:3 11 ‘கானான் நாட்டை உங்களுக்கு அளிப்பேன்; அப்பங்கே உங்களுக்கு உரிமைச் சொத்தாய் இருக்கும்’ என்றார் அவர். * தொநூ 28:13 12 அப்போது, அவர்கள் மதிப்பிலும் எண்ணிக்கையிலும் குறைந்தவராய் இருந்தார்கள்; அங்கே அவர்கள் அன்னியராய் இருந்தார்கள். * தொநூ 28:13 13 அவர்கள் ஒரு நாட்டினின்று மற்றொரு நாட்டிற்கும் ஓர் அரசினின்று மற்றொரு மக்களிடமும் அலைந்து திரிந்தார்கள். 14 யாரும் அவர்களை ஒடுக்குமாறு அவர் விட்டு விடவில்லை; அவர்களின் பொருட்டு மன்னர்களை அவர் கண்டித்தார். 15 ‘நான் அருள்பொழிவு செய்தாரைத் தொடாதீர்! என் இறைவாக்கினர்க்குத் தீங்கிழைக்காதீர்’ என்றார் அவர். * தொநூ 20:3-7 16 நாட்டில் அவர் பஞ்சம் வரும்படி செய்தார்; உணவெனும் ஊன்றுகோலை முறித்துவிட்டார். * தொநூ 20:3-7 17 அவர்களுக்கு முன் ஒருவரை அனுப்பிவைத்தார்; யோசேப்பு என்பவர் அடிமையாக விற்கப்பட்டார். * தொநூ 41:53-57 18 அவர்தம் கால்களுக்கு விலங்கிட்டு அவரைத் துன்புறுத்தினர். அவர்தம் கழுத்தில் இரும்புப் பட்டையை மாட்டினர். * தொநூ 37:28; 45:5 19 காலம் வந்தது; அவர் உரைத்தது நிறைவேறிற்று; ஆண்டவரின் வார்த்தை அவர் உண்மையானவரென மெய்ப்பித்தது. * தொநூ 39:20-40:23 20 மன்னர் ஆளனுப்பி அவரை விடுதலை செய்தார்; மக்களினங்களின் தலைவர் அவருக்கு விடுதலை அளித்தார்; * தொநூ 39:20-40:23 21 அவர் அவரைத் தம் அரண்மனைக்குத் தலைவர் ஆக்கினார்; தம் உடைமைகளுக்கெல்லாம் பொறுப்பாளராக ஏற்படுத்தினார். * தொநூ 41:14 22 அவர் அரச அலுவலரைப் பயிற்றுவித்தார்; அவருடைய அவைப்பெரியோருக்கு நல்லறிவு புகட்டினார். * தொநூ 41:39-41 23 பின்னர், இஸ்ரயேல் எகிப்துக்கு வந்தார்; யாக்கோபு காம் நாட்டில் அன்னியராய் வாழ்ந்தார். 24 ஆண்டவர் தம் மக்களைப் பல்கிப் பெருகச் செய்தார்; அவர்களின் எதிரிகளைவிட அவர்களை வலிமைமிக்கவர்கள் ஆக்கினார். * தொநூ 46:6; 47:11 25 தம் மக்களை வெறுக்கும்படியும், தம் அடியார்களுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்யும்படியும் அவர் எகிப்தியரின் மனத்தை மாற்றினார். * விப 1:7-14 26 அவர்தம் ஊழியராகிய மோசேயையும், தாம் தேர்ந்தெடுத்த ஆரோனையும் அனுப்பினார். * விப 1:7-14 27 அவர்கள் எகிப்தியரிடையே அவர்தம் அருஞ்செயல்களைச் செய்தனர்; காம் நாட்டில் வியத்தகு செயல்களைச் செய்து காட்டினர். * விப 3:1-4:17 28 அவர் இருளை அனுப்பி நாட்டை இருட்டாக்கினார்; அவருடைய சொற்களை எதிர்ப்பார் இல்லை. 29 அவர்களுடைய நீர்நிலைகளை அவர் இரத்தமாக மாற்றினார்; அவற்றிலிருந்த மீன்களைச் சாகடித்தார். * விப 10:21-23 30 அவர்களது நாட்டிற்குள் தவளைகள் ஏறிவந்தன; மன்னர்களின் பள்ளியறைகளுக்குள்ளும் அவை நுழைந்தன. * விப 7:17-21 31 அவர் கட்டளையிட, அவர்களுடைய நாடு முழுவதிலும் ஈக்களும் கொசுக்களும் திரண்டு வந்தன. * விப 8:1-6 32 அவர் நீருக்குப் பதிலாகக் கல்லை மழையாகப் பொழிந்தார்; அவர்களது நாடெங்கும் மின்னல் தெறிக்கச் செய்தார். * விப 8:16-17, 20-24 33 அவர் அவர்களின் திராட்சைச் செடிகளையும் அத்திமரங்களையும் அழித்தார்; அவர்களது நாடெங்குமுள்ள மரங்களை முறித்தார். * விப 9:22-25 34 அவரது சொல்லால் வெட்டுக் கிளிகளும் எண்ணற்ற வெட்டுப்புழுக்களும் அங்கே தோன்றின. * விப 9:22-25 35 அவை அவர்களது நாட்டின் பயிர் பச்சைகளைத் தின்றுத்தீர்த்தன; அவர்களது நிலத்தின் விளைச்சல்களை விழுங்கிவிட்டன. * விப 10:12-15 36 அவர் அவர்களது நாட்டின் தலைப்பேறுகள் அனைத்தையும் தாக்கினார்; அவர்களது ஆண்மையின் முதற்பேறுகள் அனைத்தையும் வீழ்த்தினார். * விப 10:12-15 37 அவர் இஸ்ரயேலரை வெள்ளியோடும் பொன்னோடும் புறப்படச் செய்தார்; அவர்கள் குலங்களில் எவரும் தளர்ந்து போகவில்லை. * விப 12:29 38 அவர்கள் வெளியேறுகையில் எகிப்தியர் அகமகிழ்ந்தனர்; ஏனெனில், இஸ்ரயேலர் பற்றிய பேரச்சம் அவர்களை ஆட்கொண்டிருந்தது. * விப 12:33-36 39 அவர் அவர்களைப் பாதுகாக்க மேகத்தைப் பரப்பினார்; இரவில் ஒளிதர நெருப்பைத் தந்தார். * விப 12:33-36 40 அவர்கள் கேட்டதால் அவர் காடைகளை வரச்செய்தார்; வானினின்று வந்த உணவால் அவர்களை நிறைவுறச் செய்தார். * விப 13:21-22 41 அவர் கற்பாறையைப் பிளந்தார்; தண்ணீர் பொங்கி வழிந்தது; அது பாலைநிலங்களில் ஆறாய் ஓடிற்று. * விப 16:2-15 42 ஏனெனில், தம் அடியார் ஆபிரகாமுக்கு அளித்த தமது தூய வாக்குறுதியை அவர் நினைவுகூர்ந்தார். * விப 17:1-7; எண் 20:2-13 43 அவர் தம் மக்களை மகிழ்ச்சியோடு வெளிக்கொணர்ந்தார்; அவர்தாம் தெரிந்தெடுத்தவர்களை ஆரவாரத்தோடு கூட்டிச் சென்றார். 44 அவர் வேற்றினத்தாரின் நாடுகளை அவர்களுக்கு அளித்தார்; மக்களினங்களது உழைப்பின் பயனை அவர்கள் உரிமையாக்கிக் கொள்ளுமாறு செய்தார். 45 அவர்கள் அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்கவும், அவருடைய சட்டங்களின்படி ஒழுகவுமே அவர் இவ்வாறு செய்தார். அல்லேலூயா! [* யோசு 11:16-23. ]
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 105 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References