1. {படைப்பின் மேன்மை} [PS] [QS][SS] என் உயிரே![SE][SS] ஆண்டவரைப் போற்றிடு![SE][SS] என் கடவுளாகிய ஆண்டவரே![SE][SS] நீர் எத்துணை மேன்மைமிக்கவர்![SE][SS] நீர் மாண்பையும் மாட்சியையும்[SE][SS] அணிந்துள்ளவர்.[SE][QE]
2. [QS][SS] பேரொளியை[SE][SS] ஆடையென அணிந்துள்ளவர்;[SE][SS] வான்வெளியைக்[SE][SS] கூடாரமென விரித்துள்ளவர்;[SE][QE]
3. [QS][SS] நீர்த்திரள்மீது உமது உறைவிடத்தின்[SE][SS] அடித்தளத்தை அமைத்துள்ளவர்;[SE][SS] கார் முகில்களைத்[SE][SS] தேராகக் கொண்டுள்ளவர்;[SE][SS] காற்றின் இறக்கைகளில் பவனி வருகின்றவர்![SE][QE]
4. [QS][SS] காற்றுகளை உம்[SE][SS] தூதராய் நியமித்துள்ளவர்;[SE][SS] தீப்பிழம்புகளை உம்[SE][SS] பணியாளராய்க் கொண்டுள்ளவர். [* எபி 1:7. ] [SE][QE]
5. [QS][SS] நீவீர் பூவுலகை அதன்[SE][SS] அடித்தளத்தின்மீது நிலைநாட்டினீர்;[SE][SS] அது என்றென்றும் அசைவுறாது.[SE][QE]
6. [QS][SS] அதனை ஆழ்கடல்[SE][SS] ஆடையென மூடியிருந்தது;[SE][SS] மலைகளுக்கும் மேலாக[SE][SS] நீர்த்திரள் நின்றது;[SE][QE]
7. [QS][SS] நீவீர் கண்டிக்கவே அது விலகி ஓடியது;[SE][SS] நீவீர் இடியென முழங்க,[SE][SS] அது திகைப்புற்று ஓடியது;[SE][QE]
8. [QS][SS] அது மலைகள்மேல் ஏறி,[SE][SS] பள்ளத்தாக்குகளில் இறங்கி,[SE][SS] அதற்கெனக் குறித்த இடத்தை[SE][SS] அடைந்தது;[SE][QE]
9. [QS][SS] அது மீறிச்செல்லாதவாறு[SE][SS] அதற்கு எல்லை வகுத்தீர்;[SE][SS] பூவுலகை அது மீண்டும்[SE][SS] மூடிவிடாதபடி செய்தீர்;[SE][QE]
10. [QS][SS] பள்ளத்தாக்குகளில்[SE][SS] நீருற்றுகள் சுரக்கச் செய்கின்றீர்;[SE][SS] அவை மலைகளிடையே பாய்ந்தோடும்;[SE][QE]
11. [QS][SS] அவை காட்டு விலங்குகள்[SE][SS] அனைத்திற்கும் குடிக்கத் தரும்;[SE][SS] காட்டுக் கழுதைகள்[SE][SS] தாகத்தைத் தீர்த்துக்கொள்ளும்;[SE][QE]
12. [QS][SS] நீருற்றுகளின் அருகில்[SE][SS] வானத்துப் பறவைகள்[SE][SS] கூடுகட்டிக் கொள்கின்றன;[SE][SS] அவை மரக்கிளைகளினின்று[SE][SS] இன்னிசை இசைக்கின்றன;[SE][QE]
13. [QS][SS] உம் மேலறைகளினின்று[SE][SS] மலைகளுக்கு நீர் பாய்ச்சுகின்றீர்;[SE][SS] உம் செயல்களின் பணியால்[SE][SS] பூவுலகம் நிறைவடைகின்றது.[SE][QE]
14. [QS][SS] கால்நடைகளுக்கெனப்[SE][SS] புல்லை முளைக்கச் செய்கின்றீர்;[SE][SS] மானிடருக்கெனப் பயிர்வகைகளை[SE][SS] வளரச் செய்கின்றர்;[SE][SS] இதனால் பூவுலகினின்று அவர்களுக்கு[SE][SS] உணவு கிடைக்கச் செய்கின்றீர்;[SE][QE]
15. [QS][SS] மனித உளத்திற்கு மகிழ்ச்சியூட்டத்[SE][SS] திராட்சை இரசமும்,[SE][SS] முகத்திற்குக் களையூட்ட எண்ணெயும்[SE][SS] மனித உள்ளத்திற்குப் புத்துணர்வூட்ட[SE][SS] அப்பமும் அளிக்கின்றீர்.[SE][QE]
16. [QS][SS] ஆண்டவரின் மரங்களுக்கு —[SE][SS] லெபனோனில் அவர் நட்ட[SE][SS] கேதுரு மரங்களுக்கு —[SE][SS] நிறைய நீர் கிடைக்கின்றது.[SE][QE]
17. [QS][SS] அங்கே பறவைகள்[SE][SS] கூடுகள் கட்டுகின்றன;[SE][SS] தேவதாரு மரங்களில்[SE][SS] கொக்குகள் குடியிருக்கின்றன.[SE][QE]
18. [QS][SS] உயர்ந்த மலைகள்[SE][SS] வரையாடுகளுக்குத் தங்குமிடமாகும்;[SE][SS] கற்பாறைகள்[SE][SS] குழிமுயல்களுக்குப் புகலிடமாகும்.[SE][QE]
19. [QS][SS] காலங்களைக் கணிக்க[SE][SS] நிலவை நீர் அமைத்தீர்;[SE][SS] ஆதவன் தான் மறையும்[SE][SS] நேரத்தை அறிவான்.[SE][QE]
20. [QS][SS] இருளை நீர் தோன்றச் செய்யவே,[SE][SS] இரவு வருகின்றது;[SE][SS] அப்போது, காட்டு விலங்குகள்[SE][SS] அனைத்தும் நடமாடும்.[SE][QE]
21. [QS][SS] இளஞ்சிங்கங்கள் இரைக்காகக்[SE][SS] கர்ச்சிக்கின்றன;[SE][SS] அவை இறைவனிடமிருந்து[SE][SS] தங்கள் உணவைத் தேடுகின்றன.[SE][QE]
22. [QS][SS] கதிரவன் எழவே அவை திரும்பிச் சென்று[SE][SS] தம் குகைகளுக்குள்[SE][SS] படுத்துக்கொள்கின்றன.[SE][QE]
23. [QS][SS] அப்பொழுது மானிடர்[SE][SS] வேலைக்குப் புறப்பட்டுச் செல்கின்றனர்;[SE][SS] அவர்கள் மாலைவரை உழைக்கின்றனர்.[SE][QE]
24. [QS][SS] ஆண்டவரே! உம் வேலைப்பாடுகள்[SE][SS] எத்தனை எத்தனை![SE][SS] நீர் அனைத்தையும்[SE][SS] ஞானத்தோடு செய்துள்ளீர்![SE][SS] பூவுலகம்[SE][SS] உம் படைப்புகளால் நிறைந்துள்ளது.[SE][QE]
25. [QS][SS] இதோ! பரந்து விரிந்து கிடக்கும் கடல்கள்;[SE][SS] அவற்றில் சிறியனவும் பெரியனவுமாக[SE][SS] வாழும் உயிரினங்கள் எண்ணிறந்தன.[SE][QE]
26. [QS][SS] அங்கே கப்பல்கள் செல்கின்றன;[SE][SS] அங்கே துள்ளிவிளையாட[SE][SS] லிவியத்தானைப் படைத்தீர்! [* யோபு 41:1; திபா 74:14; எசா 27:1.[QE]. ] [SE][QE]
27. [QS][SS] தக்க காலத்தில் நீர் உணவளிப்பீர் என்று[SE][SS] இவையெல்லாம்[SE][SS] உம்மையே நம்பியிருக்கின்றன.[SE][QE]
28. [QS][SS] நீர் கொடுக்க,[SE][SS] அவை சேகரித்துக் கொள்கின்றன;[SE][SS] நீர் உமது கையைத் திறக்க,[SE][SS] அவை நலன்களால் நிறைவுறுகின்றன.[SE][QE]
29. [QS][SS] நீர் உமது முகத்தை மறைக்க,[SE][SS] அவை திகிலடையும்;[SE][SS] நீர் அவற்றின் மூச்சை நிறுத்திவிட்டால்,[SE][SS] அவை மாண்டு மறுபடியும்[SE][SS] புழுதிக்கே திரும்பும்.[SE][QE]
30. [QS][SS] உமது ஆவியை நீர் அனுப்ப,[SE][SS] அவை படைக்கப்பெறுகின்றன;[SE][SS] மண்ணகத்தின் முகத்தைப்[SE][SS] புதுப்பிக்கின்றீர்.[SE][QE]
31. [QS][SS] ஆண்டவரின் மாட்சி[SE][SS] என்றென்றும் நிலைத்திருப்பதாக![SE][SS] அவர் தம் செயல்களைக் குறித்து[SE][SS] மகிழ்வாராக![SE][QE]
32. [QS][SS] மண்ணுலகின்மீது[SE][SS] அவர் தம் பார்வையைத் திருப்ப,[SE][SS] அது நடுங்கும்; மலைகளை அவர் தொட,[SE][SS] அவை புகை கக்கும்.[SE][QE]
33. [QS][SS] நான் வாழும் நாளெல்லாம்[SE][SS] ஆண்டவரைப் போற்றிப் பாடுவேன்;[SE][SS] என்னுயிர் உள்ளவரையிலும்[SE][SS] என் கடவுளுக்குப் புகழ் சாற்றிடுவேன்.[SE][QE]
34. [QS][SS] என் தியானப் பாடல்[SE][SS] அவருக்கு உகந்ததாய் இருப்பதாக![SE][SS] நான் ஆண்டவரில் மகிழ்ச்சி கொள்வேன்.[SE][QE]
35. [QS][SS] பாவிகள் பூவுலகினின்று[SE][SS] ஒழிந்து போவார்களாக![SE][SS] தீயோர்கள் இனி[SE][SS] இல்லாது போவார்களாக![SE][SS] என் உயிரே! நீ ஆண்டவரைப் போற்றிடு![SE][SS] அல்லேலூயா![SE][PE]