1. {கடவுளின் அன்பு[BR](தாவீதுக்கு உரியது)} [PS] [QS][SS] என் உயிரே![SE][SS] ஆண்டவரைப் போற்றிடு![SE][SS] என் முழு உளமே![SE][SS] அவரது திருப்பெயரை ஏத்திடு![SE][QE]
2. [QS][SS] என் உயிரே![SE][SS] ஆண்டவரைப் போற்றிடு![SE][SS] அவருடைய கனிவான செயல்கள்[SE][SS] அனைத்தையும் மறவாதே![SE][QE]
3. [QS][SS] அவர் உன் குற்றங்களையெல்லாம்[SE][SS] மன்னிக்கின்றார்;[SE][SS] உன் நோய்களையெல்லாம்[SE][SS] குணமாக்குகின்றார்.[SE][QE]
4. [QS][SS] அவர் உன் உயிரைப்[SE][SS] படுகுழியினின்று மீட்கின்றார்;[SE][SS] அவர் உனக்குப்[SE][SS] பேரன்பையும் இரக்கத்தையும்[SE][SS] மணிமுடியாகச் சூட்டுகின்றார்.[SE][QE]
5. [QS][SS] அவர் உன் வாழ்நாளை நலன்களால்[SE][SS] நிறைவுறச் செய்கின்றார்;[SE][SS] உன் இளமை கழுகின் இளமையெனப்[SE][SS] புதிதாய்ப் பொலிவுறும்.[SE][QE]
6. [QS][SS] ஆண்டவரின் செயல்கள் நீதியானவை;[SE][SS] ஒடுக்கப்பட்டோர் அனைவருக்கும்[SE][SS] அவர் உரிமைகளை வழங்குகின்றார்.[SE][QE]
7. [QS][SS] அவர் தம் வழிகளை[SE][SS] மோசேக்கு வெளிப்படுத்தினார்;[SE][SS] அவர் தம் செயல்களை[SE][SS] இஸ்ரயேல் மக்கள் காணும்படி செய்தார்.[SE][QE]
8. [QS][SS] ஆண்டவர் இரக்கமும் அருளும்[SE][SS] கொண்டவர்;[SE][SS] நீடிய பொறுமையும் பேரன்பும் உள்ளவர்.[SE][QE]
9. [QS][SS] அவர் எப்பொழுதும்[SE][SS] கடிந்து கொள்பவரல்லர்;[SE][SS] என்றென்றும் சினங்கொள்பவரல்லர். [* யாக் 5:11.[QE] ] [SE][QE]
10. [QS][SS] அவர் நம் பாவங்களுக்கு ஏற்ப[SE][SS] நம்மை நடத்துவதில்லை;[SE][SS] நம் குற்றங்களுக்கு ஏற்ப[SE][SS] நம்மைத் தண்டிப்பதில்லை.[SE][QE]
11. [QS][SS] அவர் தமக்கு அஞ்சுவோர்க்குக்[SE][SS] காட்டும் பேரன்பு[SE][SS] மண்ணினின்று விண்ணளவு போன்று[SE][SS] உயர்ந்தது.[SE][QE]
12. [QS][SS] மேற்கினின்று கிழக்கு[SE][SS] எத்துணைத் தொலைவிலுள்ளதோ,[SE][SS] அத்துணைத் தொலைவிற்கு[SE][SS] நம் குற்றங்களை நம்மிடமிருந்து[SE][SS] அவர் அகற்றுகின்றார்.[SE][QE]
13. [QS][SS] தந்தை தம் பிள்ளைகள்மீது[SE][SS] இரக்கம் காட்டுவதுபோல்[SE][SS] ஆண்டவர் தமக்கு அஞ்சுவோர் மீது[SE][SS] இரங்குகிறார்.[SE][QE]
14. [QS][SS] அவர் நமது உருவத்தை அறிவார்;[SE][SS] நாம் தூசி என்பது[SE][SS] அவர் நினைவிலுள்ளது.[SE][QE]
15. [QS][SS] மனிதரின் வாழ்நாள்[SE][SS] புல்லைப் போன்றது;[SE][SS] வயல்வெளிப் பூவென[SE][SS] அவர்கள் மலர்கின்றார்கள்.[SE][QE]
16. [QS][SS] அதன்மீது காற்றடித்ததும்[SE][SS] அது இல்லாமல் போகின்றது;[SE][SS] அது இருந்த இடமே[SE][SS] தெரியாமல் போகின்றது.[SE][QE]
17. [QS][SS] ஆண்டவரது பேரன்போ[SE][SS] அவருக்கு அஞ்சுவோர்மீது[SE][SS] என்றென்றும் இருக்கும்;[SE][SS] அவரது நீதியோ[SE][SS] அவர்களின் பிள்ளைகளின்[SE][SS] பிள்ளைகள்மீதும் இருக்கும்.[SE][QE]
18. [QS][SS] அவருடைய உடன்படிக்கையைக்[SE][SS] கடைப்பிடித்து[SE][SS] அவரது கட்டளையின்படி நடப்பதில்[SE][SS] கருத்தாய் இருப்போர்க்கு அது நிலைக்கும்.[SE][QE]
19. [QS][SS] ஆண்டவர் தமது அரியணையை[SE][SS] விண்ணகத்தில் நிலைநிறுத்தியுள்ளார்;[SE][SS] அவரது அரசு[SE][SS] அனைத்தின்மீதும் பரவியுள்ளது.[SE][QE]
20. [QS][SS] அவர்தம் சொற்கேட்டு நடக்கும்[SE][SS] வலிமைமிக்கோரே![SE][SS] ஆண்டவரின் தூதர்களே![SE][SS] அவரைப் போற்றுங்கள்.[SE][QE]
21. [QS][SS] ஆண்டவரின் படைகளே![SE][SS] அவர் திருவுளப்படி நடக்கும்[SE][SS] அவர்தம் பணியாளரே![SE][SS] அவரைப் போற்றுங்கள்.[SE][QE]
22. [QS][SS] ஆண்டவரின் ஆட்சித் தலத்தில் வாழும்[SE][SS] அனைத்துப் படைப்புகளே![SE][SS] ஆண்டவரைப் போற்றுங்கள்![SE][SS] என்னுயிரே! ஆண்டவரைப் போற்றிடு![SE][PE]