தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
சங்கீதம்
1. {துன்புறுவோரின் மன்றாட்டு[BR](துன்புறும் ஒருவர் மனம் தளர்ந்து ஆண்டவரை நோக்கித் தம் உள்ளக் குமுறலை வெளிப்படுத்தும் மன்றாட்டு)} [PS] [QS][SS] ஆண்டவரே! என் மன்றாட்டைக்[SE][SS] கேட்டருளும்![SE][SS] என் அபயக்குரல்[SE][SS] உம்மிடம் வருவதாக![SE][QE]
2. [QS][SS] நான் இடுக்கண் உற்ற நாளிலே[SE][SS] உமது முகத்தை மறைக்காதீர்![SE][SS] உமது செவியை[SE][SS] என் பக்கமாகத் திருப்பியருளும்![SE][SS] நான் மன்றாடும் நாளில்[SE][SS] விரைவாய் எனக்குப் பதிலளியும்![SE][QE]
3. [QS][SS] என் வாழ்நாள்கள்[SE][SS] புகையென மறைகின்றன;[SE][SS] என் எலும்புகள்[SE][SS] தீச்சூழையென எரிகின்றன.[SE][QE]
4. [QS][SS] என் இதயம் புல்லைப்போலத்[SE][SS] தீய்ந்து கருகுகின்றது;[SE][SS] என் உணவையும்[SE][SS] நான் உண்ண மறந்தேன்.[SE][QE]
5. [QS][SS] என் பெருமூச்சின் பேரொலியால்,[SE][SS] என் எலும்புகள்[SE][SS] சதையோடு ஒட்டிக் கொண்டன.[SE][QE]
6. [QS][SS] நான் பாலைநிலப் பறவைபோல் ஆனேன்;[SE][SS] பாழ் நிலத்தின் ஆந்தைபோல் ஆனேன்.[SE][QE]
7. [QS][SS] நான் தூக்கமின்றித் தவிக்கின்றேன்;[SE][SS] கூரைமேல் தனிமையாய் இருக்கும்[SE][SS] பறவைபோல் ஆனேன்.[SE][QE]
8. [QS][SS] என் எதிரிகள் நாள்முழுதும்[SE][SS] என்னை இழித்துரைக்கின்றனர்;[SE][SS] என்னை எள்ளி நகையாடுவோர்[SE][SS] என் பெயரைச் சொல்லிப்[SE][SS] பிறரைச் சபிக்கின்றனர்.[SE][QE]
9. [QS][SS] சாம்பலை நான்[SE][SS] உணவாகக் கொள்கின்றேன்;[SE][SS] என் மதுக்கலவையோடு[SE][SS] கண்ணீரைக் கலக்கின்றேன்.[SE][QE]
10. [QS][SS] ஏனெனில், உமது சினத்திற்கும்[SE][SS] சீற்றத்திற்கும் உள்ளானேன்;[SE][SS] நீர் என்னைத் தூக்கி எறிந்துவிட்டீர்.[SE][QE]
11. [QS][SS] மாலை நிழலைப்போன்றது[SE][SS] எனது வாழ்நாள்;[SE][SS] புல்லென நான் உலர்ந்து போகின்றேன்.[SE][QE]
12. [QS][SS] ஆண்டவரே! நீர் என்றென்றும்[SE][SS] கொலுவீற்றிருக்கின்றீர்;[SE][SS] உமது புகழ் தலைமுறைதோறும்[SE][SS] நிலைத்திருக்கும்.[SE][QE]
13. [QS][SS] நீர் எழுந்தருளி,[SE][SS] சீயோனுக்கு இரக்கம் காட்டும்;[SE][SS] இதோ! குறித்த காலம் வந்துவிட்டது.[SE][QE]
14. [QS][SS] அதன் கற்கள்மீது[SE][SS] உம் ஊழியர் பற்றுக்கொண்டுள்ளனர்;[SE][SS] அதன் அழிவை நினைத்துப்[SE][SS] பரிதவிக்கின்றனர்.[SE][QE]
15. [QS][SS] வேற்றினத்தார்[SE][SS] ஆண்டவரின் பெயருக்கு அஞ்சுவர்;[SE][SS] பூவுலகின் மன்னர் யாவரும்[SE][SS] அவரது மாட்சியைக் கண்டு மருள்வர்.[SE][QE]
16. [QS][SS] ஏனெனில் ஆண்டவர்[SE][SS] சீயோனைக் கட்டியெழுப்புவார்;[SE][SS] அங்கு அவர் தம் மாட்சியுடன் திகழ்வார்.[SE][QE]
17. [QS][SS] திக்கற்றவர்களின் வேண்டுதலுக்கு[SE][SS] அவர் செவிகொடுப்பார்;[SE][SS] அவர்களின் மன்றாட்டை அவமதியார்.[SE][QE]
18. [QS][SS] இனி வரவிருக்கும் தலைமுறைக்கென[SE][SS] இது எழுதி வைக்கப்படட்டும்;[SE][SS] படைக்கப்படவிருக்கும் மக்கள்[SE][SS] ஆண்டவரைப் புகழட்டும்.[SE][QE]
19. [QS][SS] ஆண்டவர் தம் மேலுலகத்[SE][SS] திருத்தலத்தினின்று[SE][SS] கீழே நோக்கினார்;[SE][SS] அவர் விண்ணுலகினின்று[SE][SS] வையகத்தைக் கண்ணோக்கினார்.[SE][QE]
20. [QS][SS] அவர் சிறைப்பட்டோரின்[SE][SS] புலம்பலுக்குச் செவிசாய்ப்பார்;[SE][SS] சாவுக்கெனக் குறிக்கப்பட்டவர்களை[SE][SS] விடுவிப்பார்.[SE][QE]
21. [QS][SS] சீயோனில் ஆண்டவரின் பெயர்[SE][SS] போற்றப்படும்.[SE][SS] எருசலேமில் அவர்தம் புகழ்[SE][SS] அறிவிக்கப்படும்.[SE][QE]
22. [QS][SS] அப்போது, மக்களினங்களும்[SE][SS] அரசுகளும் ஒன்றுதிரண்டு[SE][SS] ஆண்டவரை வழிபடுவர்.[SE][QE]
23. [QS][SS] என் வாழ்க்கைப் பாதையின் நடுவில்[SE][SS] ஆண்டவர் என் வலிமையைக்[SE][SS] குன்றச் செய்தார்; அவர்[SE][SS] என் ஆயுளைக் குறுக்கிவிட்டார்.[SE][QE]
24. [QS][SS] நான் உரைத்தது; “என் இறைவா![SE][SS] என் வாழ்நாளின் இடையில்[SE][SS] என்னை எடுத்துக் கொள்ளாதேயும்;[SE][SS] உமது காலம் தலைமுறை[SE][SS] தலைமுறையாய் உள்ளதன்றோ?[SE][QE]
25. [QS][SS] முற்காலத்தில் நீர் பூவுலகுக்கு[SE][SS] அடித்தளமிட்டீர்;[SE][SS] விண்ணுலகம் உமது[SE][SS] கைவினைப் பொருள் அன்றோ![SE][QE]
26. [QS][SS] அவையோ அழிந்துவிடும்;[SE][SS] நீரோ நிலைத்திருப்பீர்;[SE][SS] அவையெல்லாம் ஆடைபோல்[SE][SS] பழமையாகும்;[SE][SS] அவற்றை நீர் உடையென மாற்றுகின்றீர்;[SE][SS] அவையும் மறைந்துபோம். [* எபி 1:10-12.[QE] ] [SE][QE]
27. [QS][SS] நீரோ மாறாதவர்![SE][SS] உமது காலமும் முடிவற்றது. [* எபி 1:10-12.[QE] ] [SE][QE]
28. [QS][SS] உம் அடியாரின் பிள்ளைகள்[SE][SS] பாதுகாப்புடன் வாழ்வர்;[SE][SS] அவர்களின் வழிமரபினர்[SE][SS] உமது திருமுன் நிலைத்திருப்பர்! [* எபி 1:10-12.[QE] ] [SE][PE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 102 / 150
சங்கீதம் 102:76
துன்புறுவோரின் மன்றாட்டு
(துன்புறும் ஒருவர் மனம் தளர்ந்து ஆண்டவரை நோக்கித் தம் உள்ளக் குமுறலை வெளிப்படுத்தும் மன்றாட்டு)

1 ஆண்டவரே! என் மன்றாட்டைக் கேட்டருளும்! என் அபயக்குரல் உம்மிடம் வருவதாக! 2 நான் இடுக்கண் உற்ற நாளிலே உமது முகத்தை மறைக்காதீர்! உமது செவியை என் பக்கமாகத் திருப்பியருளும்! நான் மன்றாடும் நாளில் விரைவாய் எனக்குப் பதிலளியும்! 3 என் வாழ்நாள்கள் புகையென மறைகின்றன; என் எலும்புகள் தீச்சூழையென எரிகின்றன. 4 என் இதயம் புல்லைப்போலத் தீய்ந்து கருகுகின்றது; என் உணவையும் நான் உண்ண மறந்தேன். 5 என் பெருமூச்சின் பேரொலியால், என் எலும்புகள் சதையோடு ஒட்டிக் கொண்டன. 6 நான் பாலைநிலப் பறவைபோல் ஆனேன்; பாழ் நிலத்தின் ஆந்தைபோல் ஆனேன். 7 நான் தூக்கமின்றித் தவிக்கின்றேன்; கூரைமேல் தனிமையாய் இருக்கும் பறவைபோல் ஆனேன். 8 என் எதிரிகள் நாள்முழுதும் என்னை இழித்துரைக்கின்றனர்; என்னை எள்ளி நகையாடுவோர் என் பெயரைச் சொல்லிப் பிறரைச் சபிக்கின்றனர். 9 சாம்பலை நான் உணவாகக் கொள்கின்றேன்; என் மதுக்கலவையோடு கண்ணீரைக் கலக்கின்றேன். 10 ஏனெனில், உமது சினத்திற்கும் சீற்றத்திற்கும் உள்ளானேன்; நீர் என்னைத் தூக்கி எறிந்துவிட்டீர். 11 மாலை நிழலைப்போன்றது எனது வாழ்நாள்; புல்லென நான் உலர்ந்து போகின்றேன். 12 ஆண்டவரே! நீர் என்றென்றும் கொலுவீற்றிருக்கின்றீர்; உமது புகழ் தலைமுறைதோறும் நிலைத்திருக்கும். 13 நீர் எழுந்தருளி, சீயோனுக்கு இரக்கம் காட்டும்; இதோ! குறித்த காலம் வந்துவிட்டது. 14 அதன் கற்கள்மீது உம் ஊழியர் பற்றுக்கொண்டுள்ளனர்; அதன் அழிவை நினைத்துப் பரிதவிக்கின்றனர். 15 வேற்றினத்தார் ஆண்டவரின் பெயருக்கு அஞ்சுவர்; பூவுலகின் மன்னர் யாவரும் அவரது மாட்சியைக் கண்டு மருள்வர். 16 ஏனெனில் ஆண்டவர் சீயோனைக் கட்டியெழுப்புவார்; அங்கு அவர் தம் மாட்சியுடன் திகழ்வார். 17 திக்கற்றவர்களின் வேண்டுதலுக்கு அவர் செவிகொடுப்பார்; அவர்களின் மன்றாட்டை அவமதியார். 18 இனி வரவிருக்கும் தலைமுறைக்கென இது எழுதி வைக்கப்படட்டும்; படைக்கப்படவிருக்கும் மக்கள் ஆண்டவரைப் புகழட்டும். 19 ஆண்டவர் தம் மேலுலகத் திருத்தலத்தினின்று கீழே நோக்கினார்; அவர் விண்ணுலகினின்று வையகத்தைக் கண்ணோக்கினார். 20 அவர் சிறைப்பட்டோரின் புலம்பலுக்குச் செவிசாய்ப்பார்; சாவுக்கெனக் குறிக்கப்பட்டவர்களை விடுவிப்பார். 21 சீயோனில் ஆண்டவரின் பெயர் போற்றப்படும். எருசலேமில் அவர்தம் புகழ் அறிவிக்கப்படும். 22 அப்போது, மக்களினங்களும் அரசுகளும் ஒன்றுதிரண்டு ஆண்டவரை வழிபடுவர். 23 என் வாழ்க்கைப் பாதையின் நடுவில் ஆண்டவர் என் வலிமையைக் குன்றச் செய்தார்; அவர் என் ஆயுளைக் குறுக்கிவிட்டார். 24 நான் உரைத்தது; “என் இறைவா! என் வாழ்நாளின் இடையில் என்னை எடுத்துக் கொள்ளாதேயும்; உமது காலம் தலைமுறை தலைமுறையாய் உள்ளதன்றோ? 25 முற்காலத்தில் நீர் பூவுலகுக்கு அடித்தளமிட்டீர்; விண்ணுலகம் உமது கைவினைப் பொருள் அன்றோ! 26 அவையோ அழிந்துவிடும்; நீரோ நிலைத்திருப்பீர்; அவையெல்லாம் ஆடைபோல் பழமையாகும்; அவற்றை நீர் உடையென மாற்றுகின்றீர்; அவையும் மறைந்துபோம். [* எபி 1:10-12. ] 27 நீரோ மாறாதவர்! உமது காலமும் முடிவற்றது. [* எபி 1:10-12. ] 28 உம் அடியாரின் பிள்ளைகள் பாதுகாப்புடன் வாழ்வர்; அவர்களின் வழிமரபினர் உமது திருமுன் நிலைத்திருப்பர்! [* எபி 1:10-12. ]
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 102 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References