1. {நீதிக்காக வேண்டல்} [PS] [QS][SS] ஆண்டவரே, ஏன் தொலைவில்[SE][SS] நிற்கின்றீர்?[SE][SS] தொல்லைமிகு நேரங்களில்[SE][SS] ஏன் மறைந்துகொள்கின்றீர்?[SE][QE]
2. [QS][SS] பொல்லார் தம் இறுமாப்பினால்[SE][SS] எளியோரைக் கொடுமைப்படுத்துகின்றனர்;[SE][SS] அவர்கள் வகுத்த சதித்திட்டங்களில்[SE][SS] அவர்களே அகப்பட்டுக் கொள்வார்களாக.[SE][QE]
3. [QS][SS] பொல்லார் தம் தீய நாட்டங்களில்[SE][SS] தற்பெருமை கொள்கின்றனர்;[SE][SS] பேராசையுடையோர் ஆண்டவரைப்[SE][SS] பழித்துப் புறக்கணிக்கின்றனர்.[SE][QE]
4. [QS][SS] பொல்லார் செருக்கு உள்ளவராதலால்[SE][SS] அவரைத் தேடார்;[SE][SS] அவர்கள் எண்ணமெல்லாம்[SE][SS] ‛கடவுள் இல்லை![SE][QE]
5. [QS][SS] எம் வழிகள் என்றும் நிலைக்கும்’ என்பதே.[SE][SS] உம் தீர்ப்புகளோ மிக மேலானவை;[SE][SS] அவர்களின் அறிவுக்கு எட்டாதவை.[SE][SS] தம் பகைவர் அனைவரையும் பார்த்து[SE][SS] அவர்கள் நகைக்கின்றனர்.[SE][QE]
6. [QS][SS] ‛எவராலும் என்னை அசைக்க முடியாது;[SE][SS] எந்தத் தலைமுறையிலும்[SE][SS] எனக்குக் கேடு வராது’ என்று[SE][SS] அவர்கள் தமக்குள் சொல்லிக்கொள்வர்.[SE][QE]
7. [QS][SS] அவர்களது வாய் சாபமும் கபடும்[SE][SS] கொடுமையும் நிறைந்தது;[SE][SS] அவர்களது நாவினடியில்[SE][SS] கேடும் தீங்கும் இருக்கின்றன. [* உரோ 3:14.[QE]. ] [SE][QE]
8. [QS][SS] ஊர்களில் அவர்கள் ஒளிந்து[SE][SS] காத்திருக்கின்றனர்;[SE][SS] சூதறியாதவர்களை மறைவான இடங்களில்[SE][SS] கொலை செய்கின்றனர்;[SE][SS] திக்கற்றவர்களைப் பிடிப்பதிலேயே[SE][SS] அவர்கள் கண்ணாயிருக்கின்றனர்.[SE][QE]
9. [QS][SS] குகையிலிருக்கும் சிங்கம்போல் அவர்கள்[SE][SS] மறைவில் பதுங்கியிருக்கின்றனர்;[SE][SS] எளியோரைப் பிடிப்பதற்காகவே[SE][SS] அவர்கள் பதுங்கியிருக்கின்றனர்;[SE][SS] தம் வலையில் சிக்கவைத்து[SE][SS] இழுத்துச் செல்கின்றனர்.[SE][QE]
10. [QS][SS] அவர்கள் எளியோரை[SE][SS] நலிவுறச் செய்து நசுக்குகின்றனர்;[SE][SS] அவர்களது கொடிய வலிமையால்[SE][SS] ஏழைகள் வீழ்த்தப்படுகின்றனர்.[SE][QE]
11. [QS][SS] ‛இறைவன் மறந்துவிட்டார்;[SE][SS] தம் முகத்தை மூடிக்கொண்டார்;[SE][SS] என்றுமே எம்மைப் பார்க்க மாட்டார்’ என்று[SE][SS] பொல்லார் தமக்குள்[SE][SS] சொல்லிக் கொள்கின்றனர்.[SE][QE]
12. [QS][SS] ஆண்டவரே, எழுந்தருளும்! [BR] இறைவா, எமது ஆற்றலை வெளிப்படுத்தும்![SE][SS] எளியோரை மறந்துவிடாதேயும்.[SE][QE]
13. [QS][SS] பொல்லார் கடவுளைப் புறக்கணிப்பது ஏன்?[SE][SS] அவர் தம்மை விசாரணை[SE][SS] செய்யமாட்டாரென்று அவர்கள்[SE][SS] தமக்குள் சொல்லிக்கொள்வது ஏன்?[SE][QE]
14. [QS][SS] ஆனால், உண்மையில் நீர் கவனிக்கின்றீர்;[SE][SS] கேட்டையும் துயரத்தையும் பார்த்து,[SE][SS] உதவி செய்யக் காத்திருக்கின்றீர்;[SE][SS] திக்கற்றவர் தம்மை[SE][SS] உம்மிடம் ஒப்படைக்கின்றனர்;[SE][SS] அனாதைக்கு நீரே துணை.[SE][QE]
15. [QS][SS] பொல்லார் மற்றும் தீயோர் கைகளை[SE][SS] முறித்துவிடும்; அவர்களது[SE][SS] பொல்லாங்கைத் தேடிக் கண்டுபிடித்து,[SE][SS] அது அற்றுப்போகச் செய்யும்.[SE][QE]
16. [QS][SS] ஆண்டவர் என்றுமுள அரசர்;[SE][SS] அவரது நிலத்தினின்று[SE][SS] வேற்றினத்தார் அகன்று விடுவர்.[SE][QE]
17. [QS][SS] ஆண்டவரே, எளியோரின் விருப்பத்தை[SE][SS] நீர் நிறைவேற்றுகின்றீர்;[SE][SS] அவர்கள் உள்ளத்திற்கு ஊக்கம் அளித்து[SE][SS] அவர்களுக்குச் செவிசாய்க்கின்றீர்.[SE][QE]
18. [QS][SS] நீர் அனாதைகளுக்கும்[SE][SS] ஒடுக்கப்படுகிறவர்களுக்கும்[SE][SS] நீதி வழங்குகின்றீர்;[SE][SS] மண்ணினின்று தோன்றிய மனிதர்[SE][SS] இனியும் அவர்களைத் துன்புறுத்த மாட்டார்.[SE][PE]