தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
நீதிமொழிகள்
1. {அரசனுக்கு அறிவுரை} [PS] [QS][SS] மாசாவின் அரசனான இலமுவேலின் மொழிகள்: இவை அவனுடைய தாய் தந்த அறிவுரைகள்: [* * ‘ஈத்தியேல்’ என்பதை ‘கடவுளே, நான் சோர்ந்துபோனேன்’ எனவும், ‘ஊக்கால்’ என்பதை ‘நான் நொந்துபோனேன்’ எனவும் மொழிபெயர்க்கலாம்.. ] [SE][QE]
2. [QS][SS] பிள்ளாய், என் வயிற்றில் பிறந்தவனே, என் வேண்டுதலின் பயனாய்க் கிடைத்த என் பிள்ளாய், நான் சொல்வதைக் கவனி.[SE][QE]
3. [QS][SS] உன் வீரியத்தையெல்லாம் பெண்களிடம் செலவழித்துவிடாதே; அரசரை அழிப்பவர்களை அணுகாதே.[SE][QE]
4. [QS][SS] இலமுவேலே, கேள், அரசருக்குக் குடிப்பழக்கம் இருத்தலாகாது; அது அரசருக்கு அடுத்ததன்று; வெறியூட்டும் மதுவை ஆட்சி யாளர் அருந்தலாகாது.[SE][QE]
5. [QS][SS] அருந்தினால், சட்டத்தை மறந்து விடு வார்கள்; துன்புறுத்தப்படுவோருக்கு நீதி வழங்கத் தவறுவார்கள்.[SE][QE]
6. [QS][SS] ஆனால் சாகும் தறுவாயில் இருப்பவருக்கு மதுவைக் கொடு; மனமுடைந்த நிலையில் இருப்பவருக்கும் திராட்சை இரசத்தைக் கொடு.[SE][QE]
7. [QS][SS] அவர்கள் குடித்துக் தங்கள் வறுமையை மறக்கட்டும்; தங்கள் துன்பத்தை நினையா திருக்கட்டும்.[SE][QE]
8. [QS][SS] பேசத் தெரியாதவர் சார்பாகப் பேசு; திக்கற்றவர்கள் எல்லாருடைய உரிமைகளுக் காகவும் போராடு.[SE][QE]
9. [QS][SS] அவர்கள் சார்பாகப் பேசி நியாயமான தீர்ப்பை வழங்கு; எளியோருக்கும் வறியோருக்கும் நீதி வழங்கு.[SE][PE][QE]
10. {நல்ல மனையாள்} [PS] [QS][SS] திறமைவாய்ந்த மனத்திடமுள்ள மனையாளைக் காண்பது மிக மிக அரிது; அவள் பவளத்தைவிடப் பெருமதிப்புள்ளவள்.[SE][QE]
11. [QS][SS] அவளுடைய கணவன் அவளை மனமார நம்புகிறான்; அவளால் அவனுக்கு நலமும் வளமும் பெருகும்.[SE][QE]
12. [QS][SS] அவள் தன் வாழ்நாள் முழுவதும் அவனுக்கு நல்லதையே செய்வாள்; ஒரு நாளும் தீங்கு நினையாள்.[SE][QE]
13. [QS][SS] கம்பளி, சணல் ஆகிய பொருள்களைத் தானே தேடிக் கொணர்வாள்; தன் வேலையனைத் தையும் விருப்புடன் தானே செய்வாள்.[SE][QE]
14. [QS][SS] அவளை ஒரு வணிகக் கப்பலுக்கு ஒப்பிட லாம்; அவள் உணவுப் பொருள்களைத் தொலையி லிருந்து வாங்கி வருவாள்.[SE][QE]
15. [QS][SS] வைகறையில் துயிலெழுவாள்; வீட்டாருக்கு உணவு சமைப்பாள்; வேலைக்காரிகளுக்குரிய வேலைகளைக் குறிப்பாள்.[SE][QE]
16. [QS][SS] ஒரு நிலத்தை வாங்கும்போது தீர எண்ணிப்பார்த்தே வாங்குவாள்; தன் ஊதி யத்தைகொண்டு அதில் கொடிமுந்திரித் தோட்டம் அமைப்பாள்.[SE][QE]
17. [QS][SS] சுறுசுறுப்புடன் அவள் வேலை செய்வாள்; அயர்வின்றி நாள் முழுதும் ஊக்கம் குன்றாது உழைப்பாள்.[SE][QE]
18. [QS][SS] தன் உழைப்பு நற்பலன் தருமென்பது அவளுக்குத் தெரியும்; அவள் தன் வீட்டில் ஏற்றிவைத்த விளக்கு ஒருபோதும் அணையாது.[SE][QE]
19. [QS][SS] இராட்டினத்தைத் தானே பிடித்து வேலை செய்வாள்; நூல் இழைகளைத் தன் விரல்களால் திரிப்பாள்.[SE][QE]
20. [QS][SS] எளியவனுக்கு உதவி செய்யத் தன் கையை நீட்டுவாள். வறியவனுக்கு வயிறார உணவளிப்பாள். [* *…* ‘அவள் சாப்பிட்டபின் வாயைத் துடைத்துவிட்டு’ எனவும் மொழிபெயர்க்கலாம்.[QE]. ] [SE][QE]
21. [QS][SS] குளிர்காலத்தில் அவள் வீட்டாரைப்பற்றிய கவலை அவளுக்கு இராது; ஏனெனில், எல்லார்க்கும் திண்மையான கம்பளிப் போர்வை உண்டு.[SE][QE]
22. [QS][SS] தனக்கு வேண்டிய போர்வையைத் தானே நெய்வாள்; அவள் உடுத்துவது பட்டாடையும் பல வண்ண உடைகளுமே.[SE][QE]
23. [QS][SS] அவளை மணந்த கணவன் ஊர்ப் பெரியோருள் ஒருவனாய் இருப்பான்; மக்கள் மன்றத்தில் புகழ் பெற்றவனாயுமிருப்பான்.[SE][QE]
24. [QS][SS] அவள் பட்டாடைகளை நெய்து விற்பாள்; வணிகரிடம் இடுப்புக் கச்சைகளை விற்பனை செய்வாள்.[SE][QE]
25. [QS][SS] அவள் ஆற்றலையும் பெருமையையும் அணிகலனாகப் பூண்டவள்; வருங்காலத்தைக் கவலை இன்றி எதிர்நோக்கியிருப்பாள்.[SE][QE]
26. [QS][SS] அவள் பேசும்போது ஞானத்தோடு பேசுவாள்; அன்போடு அறிவுரை கூறுவாள்.[SE][QE]
27. [QS][SS] தன் இல்லத்தின் அலுவல்களில் கண்ணும் கருத்துமாய் இருப்பாள்; உணவுக் காகப் பிறர் கையை எதிர்பார்த்துச் சோம்பி யிருக்கமாட்டாள்.[SE][QE]
28. [QS][SS] அவளுடைய பிள்ளைகள் அவளை நற்பேறு பெற்றவள் என வாழ்த்துவார்கள்; அவளுடைய கணவன் அவளை மனமாரப் புகழ்வான்.[SE][QE]
29. [QS][SS] “திறமை வாய்ந்த பெண்கள் பலர் உண்டு; அவர்கள் அனைவரிலும் சிறந்தவள் நீயே” என்று அவன் சொல்வான்.[SE][QE]
30. [QS][SS] எழில் ஏமாற்றும், அழகு அற்றுப் போகும்; ஆண்டவரிடம் அச்சம் கொண்டுள்ள பெண்ணே புகழத்தக்கவள்.[SE][QE]
31. [QS][SS] அவளுடைய செயல்களின் நற்பயனை எண்ணி அவளை வாழ்த்துங்கள்; அவளது உழைப்பை மக்கள் மன்றம் பாராட்டுவதாக.[SE][PE][QE]
மொத்தம் 31 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 31 / 31
அரசனுக்கு அறிவுரை 1 மாசாவின் அரசனான இலமுவேலின் மொழிகள்: இவை அவனுடைய தாய் தந்த அறிவுரைகள்: <b> /b> ‘ஈத்தியேல்’ என்பதை ‘கடவுளே, நான் சோர்ந்துபோனேன்’ எனவும், ‘ஊக்கால்’ என்பதை ‘நான் நொந்துபோனேன்’ எனவும் மொழிபெயர்க்கலாம்.. 2 பிள்ளாய், என் வயிற்றில் பிறந்தவனே, என் வேண்டுதலின் பயனாய்க் கிடைத்த என் பிள்ளாய், நான் சொல்வதைக் கவனி. 3 உன் வீரியத்தையெல்லாம் பெண்களிடம் செலவழித்துவிடாதே; அரசரை அழிப்பவர்களை அணுகாதே. 4 இலமுவேலே, கேள், அரசருக்குக் குடிப்பழக்கம் இருத்தலாகாது; அது அரசருக்கு அடுத்ததன்று; வெறியூட்டும் மதுவை ஆட்சி யாளர் அருந்தலாகாது. 5 அருந்தினால், சட்டத்தை மறந்து விடு வார்கள்; துன்புறுத்தப்படுவோருக்கு நீதி வழங்கத் தவறுவார்கள். 6 ஆனால் சாகும் தறுவாயில் இருப்பவருக்கு மதுவைக் கொடு; மனமுடைந்த நிலையில் இருப்பவருக்கும் திராட்சை இரசத்தைக் கொடு. 7 அவர்கள் குடித்துக் தங்கள் வறுமையை மறக்கட்டும்; தங்கள் துன்பத்தை நினையா திருக்கட்டும். 8 பேசத் தெரியாதவர் சார்பாகப் பேசு; திக்கற்றவர்கள் எல்லாருடைய உரிமைகளுக் காகவும் போராடு. 9 அவர்கள் சார்பாகப் பேசி நியாயமான தீர்ப்பை வழங்கு; எளியோருக்கும் வறியோருக்கும் நீதி வழங்கு. நல்ல மனையாள் 10 திறமைவாய்ந்த மனத்திடமுள்ள மனையாளைக் காண்பது மிக மிக அரிது; அவள் பவளத்தைவிடப் பெருமதிப்புள்ளவள். 11 அவளுடைய கணவன் அவளை மனமார நம்புகிறான்; அவளால் அவனுக்கு நலமும் வளமும் பெருகும். 12 அவள் தன் வாழ்நாள் முழுவதும் அவனுக்கு நல்லதையே செய்வாள்; ஒரு நாளும் தீங்கு நினையாள். 13 கம்பளி, சணல் ஆகிய பொருள்களைத் தானே தேடிக் கொணர்வாள்; தன் வேலையனைத் தையும் விருப்புடன் தானே செய்வாள். 14 அவளை ஒரு வணிகக் கப்பலுக்கு ஒப்பிட லாம்; அவள் உணவுப் பொருள்களைத் தொலையி லிருந்து வாங்கி வருவாள். 15 வைகறையில் துயிலெழுவாள்; வீட்டாருக்கு உணவு சமைப்பாள்; வேலைக்காரிகளுக்குரிய வேலைகளைக் குறிப்பாள். 16 ஒரு நிலத்தை வாங்கும்போது தீர எண்ணிப்பார்த்தே வாங்குவாள்; தன் ஊதி யத்தைகொண்டு அதில் கொடிமுந்திரித் தோட்டம் அமைப்பாள். 17 சுறுசுறுப்புடன் அவள் வேலை செய்வாள்; அயர்வின்றி நாள் முழுதும் ஊக்கம் குன்றாது உழைப்பாள். 18 தன் உழைப்பு நற்பலன் தருமென்பது அவளுக்குத் தெரியும்; அவள் தன் வீட்டில் ஏற்றிவைத்த விளக்கு ஒருபோதும் அணையாது. 19 இராட்டினத்தைத் தானே பிடித்து வேலை செய்வாள்; நூல் இழைகளைத் தன் விரல்களால் திரிப்பாள். 20 எளியவனுக்கு உதவி செய்யத் தன் கையை நீட்டுவாள். வறியவனுக்கு வயிறார உணவளிப்பாள். [ …* ‘அவள் சாப்பிட்டபின் வாயைத் துடைத்துவிட்டு’ எனவும் மொழிபெயர்க்கலாம்.. ] 21 குளிர்காலத்தில் அவள் வீட்டாரைப்பற்றிய கவலை அவளுக்கு இராது; ஏனெனில், எல்லார்க்கும் திண்மையான கம்பளிப் போர்வை உண்டு. 22 தனக்கு வேண்டிய போர்வையைத் தானே நெய்வாள்; அவள் உடுத்துவது பட்டாடையும் பல வண்ண உடைகளுமே. 23 அவளை மணந்த கணவன் ஊர்ப் பெரியோருள் ஒருவனாய் இருப்பான்; மக்கள் மன்றத்தில் புகழ் பெற்றவனாயுமிருப்பான். 24 அவள் பட்டாடைகளை நெய்து விற்பாள்; வணிகரிடம் இடுப்புக் கச்சைகளை விற்பனை செய்வாள். 25 அவள் ஆற்றலையும் பெருமையையும் அணிகலனாகப் பூண்டவள்; வருங்காலத்தைக் கவலை இன்றி எதிர்நோக்கியிருப்பாள். 26 அவள் பேசும்போது ஞானத்தோடு பேசுவாள்; அன்போடு அறிவுரை கூறுவாள். 27 தன் இல்லத்தின் அலுவல்களில் கண்ணும் கருத்துமாய் இருப்பாள்; உணவுக் காகப் பிறர் கையை எதிர்பார்த்துச் சோம்பி யிருக்கமாட்டாள். 28 அவளுடைய பிள்ளைகள் அவளை நற்பேறு பெற்றவள் என வாழ்த்துவார்கள்; அவளுடைய கணவன் அவளை மனமாரப் புகழ்வான். 29 “திறமை வாய்ந்த பெண்கள் பலர் உண்டு; அவர்கள் அனைவரிலும் சிறந்தவள் நீயே” என்று அவன் சொல்வான். 30 எழில் ஏமாற்றும், அழகு அற்றுப் போகும்; ஆண்டவரிடம் அச்சம் கொண்டுள்ள பெண்ணே புகழத்தக்கவள். 31 அவளுடைய செயல்களின் நற்பயனை எண்ணி அவளை வாழ்த்துங்கள்; அவளது உழைப்பை மக்கள் மன்றம் பாராட்டுவதாக.
மொத்தம் 31 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 31 / 31
×

Alert

×

Tamil Letters Keypad References