தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
நீதிமொழிகள்
1. [PS] [QS][SS] பன்முறை கண்டிக்கப்பட்டும் ஒருவர் பிடிவாதமுள்ளவராகவே இருந்தால், அவர் ஒருநாள் திடீரென அழிவார்; மீண்டும் தலைதூக்கமாட்டார். [* யாக் 4:13-16.[QE]. ] [SE][QE]
2. [QS][SS] நேர்மையானவர்கள் ஆட்சி செலுத்தினால், குடிமக்கள் மகிழ்ச்சியுடனிருப்பார்கள்; பொல்லார் ஆட்சி செலுத்தினால் அவர்கள் புலம்பிக் கொண்டிருப்பார்கள்.[SE][QE]
3. [QS][SS] ஞானத்தை விரும்புவோர் தம் தந்தையை மகிழ்விப்பார்; விலைமகளின் உறவை விரும்பு கிறவர் சொத்தை அழித்துவிடுவார்.[SE][QE]
4. [QS][SS] நியாயம் வழங்குவதில் அரசர் அக்கறை காட்டினால் நாடு செழிக்கும்; அவர் வரி சுமத்துவதில் அக்கறை காட்டினால் நாடு பாழாய்ப் போகும்.[SE][QE]
5. [QS][SS] தமக்கு அடுத்திருப்போரை அவர்கள் எதிரிலேயே அளவுமீறிப் புகழ்கிறவர் அவரைக் கண்ணியில் சிக்கவைக்கிறார்.[SE][QE]
6. [QS][SS] தீயவர் தம் தீவினையில் சிக்கிக் கொள்வர்; நேர்மையாளரோ மகிழ்ந்து களிகூர்வர்.[SE][QE]
7. [QS][SS] ஏழைகளின் உரிமைகளைக் காப்பதில் நேர்மையாளர் அக்கறை கொள்வர்; இவ்வாறு அக்கறைகொள்வது பொல்லருக்குப் புரியாது.[SE][QE]
8. [QS][SS] வன்முறையாளர் ஊரையே கொளுத்தி விடுவர்; ஞானமுள்ளவர்களோ மக்களின் சினத்தைத் தணிப்பார்கள்.[SE][QE]
9. [QS][SS] போக்கிரியின்மீது ஞானமுள்ளவர் வழக்குத் தொடுப்பாராயின், அவர் சீறுவார், இகழ்ச்சியோடு சிரிப்பார், எதற்கும் ஒத்துவரமாட்டார்.[SE][QE]
10. [QS][SS] தீங்கறியாதவனைக் கொலைகாரர் பகைப்பர்; நேர்மையானவர்களோ அவருடைய உயிரைக் காக்க முயல்வார்கள்.[SE][QE]
11. [QS][SS] அறிவில்லாதவர் தம் சினத்தை அடக்க மாட்டார்; ஞானமுள்ளவரோ பொறுமையோ டிருப்பதால், அவர் சினம் ஆறும்.[SE][QE]
12. [QS][SS] ஆட்சி செலுத்துகிறவர் பொய்யான செய்திகளுக்குச் செவி கொடுப்பாராயின், அவருடைய ஊழியரெல்லாரும் தீயவராவர்.[SE][QE]
13. [QS][SS] ஏழைக்கும் அவரை ஒடுக்குவோருக்கும் பொதுவானது ஒன்று உண்டு; இருவருக்கும் உயிரளிப்பவர் ஆண்டவரே.[SE][QE]
14. [QS][SS] திக்கற்றவர்களின் வழக்கில் அரசர் நியாயமான தீர்ப்பு வழங்குவாராயின், அவரது ஆட்சி பல்லாண்டு நீடித்திருக்கும்.[SE][QE]
15. [QS][SS] பிரம்பும் கண்டித்துத் திருத்துதலும் ஞானத்தைப் புகட்டும்; தம் விருப்பம் போல் நடக்கவிடப்பட்ட பிள்ளைகள் தாய்க்கு வெட்கக் கேட்டை வருவிப்பர்.[SE][QE]
16. [QS][SS] பொல்லாரின் ஆட்சி தீவினையைப் பெருக்கும்; அவர்களது வீழ்ச்சியை நல்லார் காண்பர்.[SE][QE]
17. [QS][SS] உன் பிள்ளையைத் தண்டித்துத் திருத்து; அவர் உனக்கு ஆறுதலளிப்பார், மனத்தை மகிழ்விப்பார்.[SE][QE]
18. [QS][SS] எங்கே இறைவெளிப்பாடு இல்லையோ, அங்கே குடிமக்கள் கட்டுங்கடங்காமல் திரி வார்கள்; நீதி போதனையின்படி நடப்பவர் நற்பேறு பெற்று மகிழ்வார்.[SE][QE]
19. [QS][SS] வெறும் வார்த்தைகளினால் வேலைக் காரர் திருந்தமாட்டார்; அவை அவருக்கு விளங்கினாலும் அவற்றைப் பொருட்படுத்த மாட்டார்.[SE][QE]
20. [QS][SS] பேசத் துடிதுடித்துக்கொண்டிருப்பவரை நீ பார்த்திருக்கிறாயா? மூடராவது ஒருவேளை திருந்துவார்; ஆனால் இவர் திருந்தவேமாட்டார்.[SE][QE]
21. [QS][SS] அடிமையை இளமைப் பருவமுதல் இளக்காரம் காட்டி வளர்த்தால், அவர் பிற்காலத்தில் நன்றிகெட்டவராவார்.[SE][QE]
22. [QS][SS] எளிதில் சினம் கொள்பவரால் சண்டை உண்டாகும்; அவர் பல தீங்குகளுக்குக் காரணமாவார்.[SE][QE]
23. [QS][SS] இறுமாப்பு ஒருவரைத் தாழ்த்தும்; தாழ்மை உள்ளம் ஒருவரை உயர்த்தும்.[SE][QE]
24. [QS][SS] திருடனுக்குக் கூட்டாளியாயிருப்பவர் தம்மையே அழித்துக் கொள்கிறார்; அவர் உண்மையைச் சொன்னால் தண்டிக்கப்படுவார்; சொல்லாவிடில், கடவுளின் சாபம் அவர்மீது விழும்.[SE][QE]
25. [QS][SS] பிறர் என்ன சொல்வார்களோ என்று அஞ்சிக்கொண்டு நடப்பவர் கண்ணியில் சிக்கிக்கொள்வார்; ஆண்டவரை நம்புகிற வருக்கோ அடைக்கலம் கிடைக்கும்.[SE][QE]
26. [QS][SS] பலர் ஆட்சியாளரின் தயவை நாடுவதுண்டு; ஆனால் எந்த மனிதருக்கும் நியாயம் வழங்குபவர் ஆண்டவர் அன்றோ?[SE][QE]
27. [QS][SS] நேர்மையற்றவரை நல்லார் அருவருப்பர்; நேரிய வழி நடப்போரை பொல்லார் அருவருப்பர்.[SE][PE][QE]
மொத்தம் 31 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 29 / 31
1 பன்முறை கண்டிக்கப்பட்டும் ஒருவர் பிடிவாதமுள்ளவராகவே இருந்தால், அவர் ஒருநாள் திடீரென அழிவார்; மீண்டும் தலைதூக்கமாட்டார். [* யாக் 4:13-16.. ] 2 நேர்மையானவர்கள் ஆட்சி செலுத்தினால், குடிமக்கள் மகிழ்ச்சியுடனிருப்பார்கள்; பொல்லார் ஆட்சி செலுத்தினால் அவர்கள் புலம்பிக் கொண்டிருப்பார்கள். 3 ஞானத்தை விரும்புவோர் தம் தந்தையை மகிழ்விப்பார்; விலைமகளின் உறவை விரும்பு கிறவர் சொத்தை அழித்துவிடுவார். 4 நியாயம் வழங்குவதில் அரசர் அக்கறை காட்டினால் நாடு செழிக்கும்; அவர் வரி சுமத்துவதில் அக்கறை காட்டினால் நாடு பாழாய்ப் போகும். 5 தமக்கு அடுத்திருப்போரை அவர்கள் எதிரிலேயே அளவுமீறிப் புகழ்கிறவர் அவரைக் கண்ணியில் சிக்கவைக்கிறார். 6 தீயவர் தம் தீவினையில் சிக்கிக் கொள்வர்; நேர்மையாளரோ மகிழ்ந்து களிகூர்வர். 7 ஏழைகளின் உரிமைகளைக் காப்பதில் நேர்மையாளர் அக்கறை கொள்வர்; இவ்வாறு அக்கறைகொள்வது பொல்லருக்குப் புரியாது. 8 வன்முறையாளர் ஊரையே கொளுத்தி விடுவர்; ஞானமுள்ளவர்களோ மக்களின் சினத்தைத் தணிப்பார்கள். 9 போக்கிரியின்மீது ஞானமுள்ளவர் வழக்குத் தொடுப்பாராயின், அவர் சீறுவார், இகழ்ச்சியோடு சிரிப்பார், எதற்கும் ஒத்துவரமாட்டார். 10 தீங்கறியாதவனைக் கொலைகாரர் பகைப்பர்; நேர்மையானவர்களோ அவருடைய உயிரைக் காக்க முயல்வார்கள். 11 அறிவில்லாதவர் தம் சினத்தை அடக்க மாட்டார்; ஞானமுள்ளவரோ பொறுமையோ டிருப்பதால், அவர் சினம் ஆறும். 12 ஆட்சி செலுத்துகிறவர் பொய்யான செய்திகளுக்குச் செவி கொடுப்பாராயின், அவருடைய ஊழியரெல்லாரும் தீயவராவர். 13 ஏழைக்கும் அவரை ஒடுக்குவோருக்கும் பொதுவானது ஒன்று உண்டு; இருவருக்கும் உயிரளிப்பவர் ஆண்டவரே. 14 திக்கற்றவர்களின் வழக்கில் அரசர் நியாயமான தீர்ப்பு வழங்குவாராயின், அவரது ஆட்சி பல்லாண்டு நீடித்திருக்கும். 15 பிரம்பும் கண்டித்துத் திருத்துதலும் ஞானத்தைப் புகட்டும்; தம் விருப்பம் போல் நடக்கவிடப்பட்ட பிள்ளைகள் தாய்க்கு வெட்கக் கேட்டை வருவிப்பர். 16 பொல்லாரின் ஆட்சி தீவினையைப் பெருக்கும்; அவர்களது வீழ்ச்சியை நல்லார் காண்பர். 17 உன் பிள்ளையைத் தண்டித்துத் திருத்து; அவர் உனக்கு ஆறுதலளிப்பார், மனத்தை மகிழ்விப்பார். 18 எங்கே இறைவெளிப்பாடு இல்லையோ, அங்கே குடிமக்கள் கட்டுங்கடங்காமல் திரி வார்கள்; நீதி போதனையின்படி நடப்பவர் நற்பேறு பெற்று மகிழ்வார். 19 வெறும் வார்த்தைகளினால் வேலைக் காரர் திருந்தமாட்டார்; அவை அவருக்கு விளங்கினாலும் அவற்றைப் பொருட்படுத்த மாட்டார். 20 பேசத் துடிதுடித்துக்கொண்டிருப்பவரை நீ பார்த்திருக்கிறாயா? மூடராவது ஒருவேளை திருந்துவார்; ஆனால் இவர் திருந்தவேமாட்டார். 21 அடிமையை இளமைப் பருவமுதல் இளக்காரம் காட்டி வளர்த்தால், அவர் பிற்காலத்தில் நன்றிகெட்டவராவார். 22 எளிதில் சினம் கொள்பவரால் சண்டை உண்டாகும்; அவர் பல தீங்குகளுக்குக் காரணமாவார். 23 இறுமாப்பு ஒருவரைத் தாழ்த்தும்; தாழ்மை உள்ளம் ஒருவரை உயர்த்தும். 24 திருடனுக்குக் கூட்டாளியாயிருப்பவர் தம்மையே அழித்துக் கொள்கிறார்; அவர் உண்மையைச் சொன்னால் தண்டிக்கப்படுவார்; சொல்லாவிடில், கடவுளின் சாபம் அவர்மீது விழும். 25 பிறர் என்ன சொல்வார்களோ என்று அஞ்சிக்கொண்டு நடப்பவர் கண்ணியில் சிக்கிக்கொள்வார்; ஆண்டவரை நம்புகிற வருக்கோ அடைக்கலம் கிடைக்கும். 26 பலர் ஆட்சியாளரின் தயவை நாடுவதுண்டு; ஆனால் எந்த மனிதருக்கும் நியாயம் வழங்குபவர் ஆண்டவர் அன்றோ? 27 நேர்மையற்றவரை நல்லார் அருவருப்பர்; நேரிய வழி நடப்போரை பொல்லார் அருவருப்பர்.
மொத்தம் 31 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 29 / 31
×

Alert

×

Tamil Letters Keypad References