தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
நீதிமொழிகள்
1. [PS] [QS][SS] பொல்லாங்கு செய்தோரை எவரும் பின்தொடர்ந்து செல்லாதிருந்தும், அவர்கள் ஓடிக்கொண்டே இருப்பார்கள்; நேர்மையானவர்களோ அச்சமின்றிச் சிங்கம் போல் இருப்பார்கள். [* யாக் 4:13-16.[QE]. ] [SE][QE]
2. [QS][SS] ஒரு நாட்டில் அறிவும் விவேகமுமுள்ள தலைவர்கள் இருந்தால், அதன் ஆட்சி வலிமை வாய்ந்ததாய் நிலைத்திருக்கும்; ஆனால் ஒரு நாட்டினர் தீவினை புரிவார்களாயின், ஆளுகை அடுத்தடுத்துக் கைமாறிக் கொண்டே இருக்கும்.[SE][QE]
3. [QS][SS] ஏழைகளை ஒடுக்கும் கொடிய அதிகாரி, விளைச்சலை அழிக்கும் பெருமழைக்கு ஒப்பானவன்.[SE][QE]
4. [QS][SS] நீதிபோதனையைப் புறக்கணிப்போரே, பொல்லாரைப் புகழ்வர்; அதைக் கடைப்பிடித்து நடப்போர் அவர்களை எதிர்ப்பர்.[SE][QE]
5. [QS][SS] தீயோருக்கு நியாயம் என்றால் என்ன என்பதே தெரியாது; ஆண்டவரை வழிபடுபவரோ எல்லாவற்றையும் நன்குணர்பவர்.[SE][QE]
6. [QS][SS] முறைகேடாய் நடக்கும் செல்வரைவிட, மாசற்றவராய் இருக்கும் ஏழையே மேல்.[SE][QE]
7. [QS][SS] அறிவுக்கூர்மையுள்ள மகன் நீதிச் சட்டத்தைக் கடைபிடித்து நடப்பான்; ஊதாரி களோடு சேர்ந்துகொண்டு திரிபவன் தன் தந்தைக்கு இழிவு வரச் செய்வான்.[SE][QE]
8. [QS][SS] அநியாய வட்டி வாங்கிச் செல்வத்தைப் பெருக்குகிறவரது சொத்து, ஏழைகளுக்கு இரங்குகிறவரைச் சென்றடையும்.[SE][QE]
9. [QS][SS] ஒருவர் திருச்சட்டத்திற்குக் கீழ்ப்படியா திருப்பாரானால், கடவுளும் அவர் வேண்டுதலை அருவருத்துத் தள்ளுவார்.[SE][QE]
10. [QS][SS] நேர்மையானவர்களைத் தீயவழியில் செல்லத் தூண்டுபவர், தாம் வெட்டின குழியில் தாமே விழுவார்; தீது செய்யாதவர்கள் வளம்பட வாழ்வார்கள்.[SE][QE]
11. [QS][SS] செல்வர் தம்மை ஞானமுள்ளவர் என்று எண்ணிக்கொள்வார்; உணர்வுள்ள ஏழையோ அவரது உண்மையான தன்மையை நன்கறிவார்.[SE][QE]
12. [QS][SS] நேர்மையானவர்கள் ஆட்சியுரிமை பெற்றால் மக்கள் பெருமிதம் கொள்வர்; பொல்லார் தலைமையிடத்திற்கு வந்தால், மற்றவர்கள் மறைவாக இருப்பார்கள்.[SE][QE]
13. [QS][SS] தம் குற்றப் பழிகளை மூடிமறைப்பவரின் வாழ்க்கை வளம் பெறாது; அவற்றை ஒப்புக் கொண்டு விட்டுவிடுகிறவர் கடவுளின் இரக்கம் பெறுவார்.[SE][QE]
14. [QS][SS] எப்போதும் கடவுளுக்கு அஞ்சி வாழ்பவர் நற்பேறுபெறுவார்; பிடிவாதமுள்ளவரோ தீங் கிற்கு உள்ளாவார்.[SE][QE]
15. [QS][SS] கொடுங்கோல் மன்னன் ஏழைக்குடிமக் களுக்கு முழக்கமிடும் சிங்கமும் இரைதேடி அலையும் கரடியும் போலாவான்.[SE][QE]
16. [QS][SS] அறிவில்லாத ஆட்சியாளர் குடி மக்களை வதைத்துக் கொடுமைப்படுத்துவார்; நேர்மையற்ற முறையில் கிடைக்கும் வருவாயை வெறுப்பவர் நீண்டகாலம் வாழ்வார்.[SE][QE]
17. [QS][SS] கொலை செய்தவன் தப்பியோடுவதாக எண்ணிப் படுகுழியை நோக்கி விரைகிறான்; அவனை எவரும் தடுக்க வேண்டாம்.[SE][QE]
18. [QS][SS] நேர்மையாக நடப்பவருக்குத் தீங்கு வராது; தவறான வழியில் நடப்பவர் தீங்கிற்கு உள்ளாவார்.[SE][QE]
19. [QS][SS] உழுது பயிரிடுகிறவர் நிரம்ப உணவு பெறுவார்; வீணானவற்றில் காலத்தைக் கழிப்பவர் எப்போதும் வறுமை நிறைந்தவராய் இருப்பார்.[SE][QE]
20. [QS][SS] உண்மையுள்ள மனிதர் நலன்கள் பல பெறுவார்; விரைவிலேயே செல்வராகப் பார்க் கிறவர் தண்டனைக்குத் தப்பமாட்டார்.[SE][QE]
21. [QS][SS] ஓரவஞ்சனை காட்டுவது நன்றல்ல; ஆனால் ஒரு வாய்ச் சோற்றுக்காகச் சட்டத்தை மீறுவோருமுண்டு.[SE][QE]
22. [QS][SS] பிறரைப் பொறாமைக் கண்ணோடு பார்ப்பவர் தாமும் செல்வராக வேண்டுமென்று துடிக்கிறார்; ஆனால் தாம் வறியவராகப் போவதை அவர் அறியார்.[SE][QE]
23. [QS][SS] முகப்புகழ்ச்சி செய்கிறவரைப் பார்க்கிலும் கடிந்துகொள்ளுகிறவரே முடிவில் பெரிதும் பாராட்டப்படுவார்.[SE][QE]
24. [QS][SS] பெற்றோரின் பொருளைத் திருடிவிட்டு, “அது குற்றமில்லை” என்று சொல்கிறவன், கொள்ளைக்காரரை விடக் கேடுகெட்டவன்.[SE][QE]
25. [QS][SS] பேராசைக்கொண்டவன் சண்டை மூளச் செய்வான்; ஆண்டவரையே நம்பியிருப்பவர் நலமுடன் வாழ்வார்.[SE][QE]
26. [QS][SS] தன் சொந்தக் கருத்தையே நம்பி வாழ்பவன் முட்டாள்; ஞானிகளின் நெறியில் நடப்பவரோ தீங்கினின்று விடுவிக்கப்படுவர்.[SE][QE]
27. [QS][SS] ஏழைகளுக்குக் கொடுப்பவருக்குக் குறைவு எதுவும் ஏற்படாது; அவர்களைக் கண்டும் காணாததுபோல் இருப்பவர் பல சாபங்களுக்கு ஆளாவார்.[SE][QE]
28. [QS][SS] பொல்லார் தலைமையிடத்திற்கு வந்தால், மற்றவர்கள் மறைவாக இருப்பார்கள்; அவர்கள் வீழ்ச்சியுற்றபின் நேர்மையானவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவார்கள்.[SE][PE][QE]
மொத்தம் 31 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 28 / 31
1 பொல்லாங்கு செய்தோரை எவரும் பின்தொடர்ந்து செல்லாதிருந்தும், அவர்கள் ஓடிக்கொண்டே இருப்பார்கள்; நேர்மையானவர்களோ அச்சமின்றிச் சிங்கம் போல் இருப்பார்கள். [* யாக் 4:13-16.. ] 2 ஒரு நாட்டில் அறிவும் விவேகமுமுள்ள தலைவர்கள் இருந்தால், அதன் ஆட்சி வலிமை வாய்ந்ததாய் நிலைத்திருக்கும்; ஆனால் ஒரு நாட்டினர் தீவினை புரிவார்களாயின், ஆளுகை அடுத்தடுத்துக் கைமாறிக் கொண்டே இருக்கும். 3 ஏழைகளை ஒடுக்கும் கொடிய அதிகாரி, விளைச்சலை அழிக்கும் பெருமழைக்கு ஒப்பானவன். 4 நீதிபோதனையைப் புறக்கணிப்போரே, பொல்லாரைப் புகழ்வர்; அதைக் கடைப்பிடித்து நடப்போர் அவர்களை எதிர்ப்பர். 5 தீயோருக்கு நியாயம் என்றால் என்ன என்பதே தெரியாது; ஆண்டவரை வழிபடுபவரோ எல்லாவற்றையும் நன்குணர்பவர். 6 முறைகேடாய் நடக்கும் செல்வரைவிட, மாசற்றவராய் இருக்கும் ஏழையே மேல். 7 அறிவுக்கூர்மையுள்ள மகன் நீதிச் சட்டத்தைக் கடைபிடித்து நடப்பான்; ஊதாரி களோடு சேர்ந்துகொண்டு திரிபவன் தன் தந்தைக்கு இழிவு வரச் செய்வான். 8 அநியாய வட்டி வாங்கிச் செல்வத்தைப் பெருக்குகிறவரது சொத்து, ஏழைகளுக்கு இரங்குகிறவரைச் சென்றடையும். 9 ஒருவர் திருச்சட்டத்திற்குக் கீழ்ப்படியா திருப்பாரானால், கடவுளும் அவர் வேண்டுதலை அருவருத்துத் தள்ளுவார். 10 நேர்மையானவர்களைத் தீயவழியில் செல்லத் தூண்டுபவர், தாம் வெட்டின குழியில் தாமே விழுவார்; தீது செய்யாதவர்கள் வளம்பட வாழ்வார்கள். 11 செல்வர் தம்மை ஞானமுள்ளவர் என்று எண்ணிக்கொள்வார்; உணர்வுள்ள ஏழையோ அவரது உண்மையான தன்மையை நன்கறிவார். 12 நேர்மையானவர்கள் ஆட்சியுரிமை பெற்றால் மக்கள் பெருமிதம் கொள்வர்; பொல்லார் தலைமையிடத்திற்கு வந்தால், மற்றவர்கள் மறைவாக இருப்பார்கள். 13 தம் குற்றப் பழிகளை மூடிமறைப்பவரின் வாழ்க்கை வளம் பெறாது; அவற்றை ஒப்புக் கொண்டு விட்டுவிடுகிறவர் கடவுளின் இரக்கம் பெறுவார். 14 எப்போதும் கடவுளுக்கு அஞ்சி வாழ்பவர் நற்பேறுபெறுவார்; பிடிவாதமுள்ளவரோ தீங் கிற்கு உள்ளாவார். 15 கொடுங்கோல் மன்னன் ஏழைக்குடிமக் களுக்கு முழக்கமிடும் சிங்கமும் இரைதேடி அலையும் கரடியும் போலாவான். 16 அறிவில்லாத ஆட்சியாளர் குடி மக்களை வதைத்துக் கொடுமைப்படுத்துவார்; நேர்மையற்ற முறையில் கிடைக்கும் வருவாயை வெறுப்பவர் நீண்டகாலம் வாழ்வார். 17 கொலை செய்தவன் தப்பியோடுவதாக எண்ணிப் படுகுழியை நோக்கி விரைகிறான்; அவனை எவரும் தடுக்க வேண்டாம். 18 நேர்மையாக நடப்பவருக்குத் தீங்கு வராது; தவறான வழியில் நடப்பவர் தீங்கிற்கு உள்ளாவார். 19 உழுது பயிரிடுகிறவர் நிரம்ப உணவு பெறுவார்; வீணானவற்றில் காலத்தைக் கழிப்பவர் எப்போதும் வறுமை நிறைந்தவராய் இருப்பார். 20 உண்மையுள்ள மனிதர் நலன்கள் பல பெறுவார்; விரைவிலேயே செல்வராகப் பார்க் கிறவர் தண்டனைக்குத் தப்பமாட்டார். 21 ஓரவஞ்சனை காட்டுவது நன்றல்ல; ஆனால் ஒரு வாய்ச் சோற்றுக்காகச் சட்டத்தை மீறுவோருமுண்டு. 22 பிறரைப் பொறாமைக் கண்ணோடு பார்ப்பவர் தாமும் செல்வராக வேண்டுமென்று துடிக்கிறார்; ஆனால் தாம் வறியவராகப் போவதை அவர் அறியார். 23 முகப்புகழ்ச்சி செய்கிறவரைப் பார்க்கிலும் கடிந்துகொள்ளுகிறவரே முடிவில் பெரிதும் பாராட்டப்படுவார். 24 பெற்றோரின் பொருளைத் திருடிவிட்டு, “அது குற்றமில்லை” என்று சொல்கிறவன், கொள்ளைக்காரரை விடக் கேடுகெட்டவன். 25 பேராசைக்கொண்டவன் சண்டை மூளச் செய்வான்; ஆண்டவரையே நம்பியிருப்பவர் நலமுடன் வாழ்வார். 26 தன் சொந்தக் கருத்தையே நம்பி வாழ்பவன் முட்டாள்; ஞானிகளின் நெறியில் நடப்பவரோ தீங்கினின்று விடுவிக்கப்படுவர். 27 ஏழைகளுக்குக் கொடுப்பவருக்குக் குறைவு எதுவும் ஏற்படாது; அவர்களைக் கண்டும் காணாததுபோல் இருப்பவர் பல சாபங்களுக்கு ஆளாவார். 28 பொல்லார் தலைமையிடத்திற்கு வந்தால், மற்றவர்கள் மறைவாக இருப்பார்கள்; அவர்கள் வீழ்ச்சியுற்றபின் நேர்மையானவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவார்கள்.
மொத்தம் 31 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 28 / 31
×

Alert

×

Tamil Letters Keypad References