1. தீயோர் வளமுடன் இருப்பதைக் கண்டு மனம் வெதும்பாதே; அவர்களுடன் உறவு பாராட்டவும் விரும்பாதே. அவர்களுடைய தோழனாயிருக்க விரும்பாதே.
|
2. அவர்கள் மனம் கொடுமை செய்வதையே நினைத்துக்கொண்டிருக்கும்; அவர்கள் பேச்சு, தீமை விளைவிக்கும் பேச்சு.
|
6. ஏனெனில், போரில் வெற்றி பெற ஆழ்ந்த சிந்தனை தேவை; கவனத்துடன் வகுக்கும் திட்டமே வெற்றிக்கு அடிப்படை.
|
10. நிறைவுள்ள காலத்தில் உன் மனம் சோர்வடையுமானால், குறைவுள்ள காலத்தில் உன் ஆற்றல் இன்னும் குன்றிப்போகுமன்றோ?
|
11. கொல்லப்படுவதற்கு இழுத்துச் செல்லப்படுவோரைத் தப்புவிக்கப்பார்; கொலைக்களத்திற்குக் கொண்டு செல்லப்படுவோரைக் காப்பாற்றப்பார்.
|
12. "அதைப்பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது" என்று சொல்வாயானால், இதயத்தில் இருப்பதை அறிபவர் உன் எண்ணத்தையும் அறிவார் அல்லவா? உன் உள்ளத்தைப் பார்க்கிறவர் அதை அறிவார் அல்லவா? ஒவ்வொருடைய செய்கைக்கும் ஏற்றபடி அவர் பயனளிப்பார் அல்லவா?
|
13. பிள்ளாய்! தேன் சாப்பிடு, அது நல்லது; கூட்டினின்று ஒழுகும் தேன் உன் வாய்க்குத் தித்திப்பாய் இருக்கும்.
|
14. ஞானமும் அறிவும் உனக்கு அவ்வாறே இனிமையாயிருக்கும். அவற்றை நீ அடைந்தால் முடிவில் உனக்குப் பயன் கிடைக்கும்; உன் நம்பிக்கை வீண்போகாது.
|
15. கயவர் போல் பதுங்கியிருந்து நல்லவர் வீட்டைக் கெடுக்கப் பார்க்காதே; அவர் குடியிருப்பைப் பாழாக்கி விடாதே.
|
18. நீ அப்படிச் செய்வாயானால், ஆண்டவர் அதைக் கண்டு உன் மீது சினம்கொள்வார்; அவருக்கு அவர் மீது இருக்கக்கூடிய சினம் தணிந்து போகும்.
|
22. ஏனெனில், திடீரென்று அவர்களுக்குக் கேடு வரும்; அந்த இருவரும் எத்தகைய கேட்டை வருவிப்பார்களென்பது யாருக்குத் தெரியும்?
|
24. குற்றம் செய்தவரை நேர்மையானவர் எனத் தீர்ப்பளிக்கும் நீதிபதியை மனிதர் சபிப்பர்; உலகனைத்தும் வெறுக்கும்.
|
27. வாழ்க்கைத் தொழிலுக்கான முன்னேற்பாடுகளைச் செய்; வயலை உழுது பண்படுத்து; பிறகு உன் வீட்டைக் கட்டியெழுப்பத் தொடங்கு.
|
28. தக்க காரணமில்லாதபோது அடுத்திருப்பாருக்கு எதிராகச் சான்று சொல்லாதே; உன் வாக்குமூலத்தில் அவருக்கு எதிராக உண்மையைத் திரித்துக் கூறாதே.
|
29. "அவர் எனக்குச் செய்தவாறே நானும் அவருக்குச் செய்வேன்; அவர் செய்ததற்கு நான் பதிலுக்குப் பதில் செய்வேன்" என்று சொல்லாதே.
|
30. சோம்பேறியின் விளைநிலம் வழியாக நான் நடந்துசென்றேன்; அந்த மதிகேடருடைய திராட்சைத் தோட்டத்தினூடே சென்றேன்.
|
31. அதில் எங்கும் முட்செடி காணப்பட்டது; நிலம் முழுவதையும் காஞ்சொறிச் செடி மூடியிருந்தது; அதன் சுவர் இடிந்து கிடந்தது.
|
33. இன்னும் சிறிது நேரம் தூங்கு; இன்னும் சிறிது நேரம் உறங்கு; கையை முடக்கிக்கொண்டு இன்னும் சிறிது நேரம் படுத்திரு.
|
34. அப்பொழுது வறுமை உன்மீது வழிப்பறிக் கள்வனைப்போலப் பாயும்; ஏழ்மை நிலை உன்னைப் போர் வீரனைப் போலத் தாக்கும்.
|